உலகக் கவியரங்கம் கவிமாலை சிங்கப்பூர்

அலுவல் கழுத்தை நெரிக்கையிலே 
அயர்ச்சி நீக்கும் இளங்காற்றாய் 
அழைப்பொன்று வந்ததுவே 
கவியரங்க மேடை காட்டி 
கவியொன்று பாடச் சொல்லி 
நினைத்திட்ட அன்பினிலே நெகிழ்ந்திட்டேன் 
நல்லகவி பாடிடவே விழைந்திட்டேன்  
நன்றியுடனே இணைந்திட்டேன் 
சிங்கை கவிமாலையின்  கவியரங்கம் 
தங்கக் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் 
கவிஞர் பெருமக்கள் கவிபாட 
கவிதை எடுத்து நானும் சென்றேன் 
கடல்குதித்துக் கொஞ்சமே கொஞ்சம் நீந்திட்டேன்
கடலாய் மகிழ்வை உணர்ந்திட்டேன் 
நினைவுகள் இனிக்கப் பகிர்கிறேன்
நண்பர்கள்  பார்க்கப் பகிர்கிறேன்  

நேரலையில் ஒளிபரப்பிய ஆசை தொலைக்காட்சியின் முழு கவியரங்கத்தின் காணொலி இணைப்பு:


கவியரங்கத்தில்  என்பகுதி மட்டும்:

ஆரா தொலைக்காட்சியின் இணைப்பு:

கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்கும் எனக்குத் தகவல் சொல்லி ஊக்குவித்த அன்புச் சகோதரி கீதாவிற்கும் கவிமாலை அமைப்பிற்கும் கவிஞர் இன்பாவிற்கும் நன்றிகள்! கவியரங்கில் கவிபாடிய பெரும் கவிஞர்களுடன் நானும் இணைந்தது மகிழ்ச்சி.


10 கருத்துகள்:

  1. உங்கள் கவிதையைக் கேட்டேன், ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. ரசித்தோம்! வாழ்த்துகள்.

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...