உயர்த்திடும் கல்வி
உலகினர் வலிமை
உனக்கிலை என்றால்
உயர்த்திடு குரலை
உரிமையை உணர்ந்து
உனதென சாற்று
உலகமே எதிர்த்தும்
உறுதியே வெல்லும் ரௌத்திரம் பழகு
இனவெறி கண்டால்
கிளர்ந்து பொங்கு
உணர்வினில் ஏற்றும்
பகைமையை விலக்கு
எனக்கிலை என்னும்
மடமையை மாய்த்து
பிரித்துனை ஆளும்
பிரிவினை பொசுக்கு ரௌத்திரம் பழகு
பெண்களைப் போற்று
பொருளிலை எவரும்
சரிநிகர் என்றே
சிந்தையில் செதுக்கு
வன்முறை கண்டால்
வளரியை வீசு
அருகிலை என்றே
அயருதல் சமழ்ப்பு ரௌத்திரம் பழகு
இயற்கையைச் சுரண்டும்
இழிவினை நீக்கு
அனைத்துயிர் வாழ்வு
அழித்திடல் திருட்டு
உழவரால் உணவு
உறுதுணை கடமை
உள்துணை ஒழித்து
உய்விலை உலகில் ரௌத்திரம் பழகு
அக்கினிக் குஞ்சை
அவர்போல் கண்டு
பொந்தினில் வைப்பாய்
வெந்திடச் செய்வாய்
அஞ்சுதல் தவிர்த்து
குன்றென நிமிர்வாய்
சீறுவோர்ச் சீறு
கொடுமையை எதிர்த்து ரௌத்திரம் பழகு
அருமை சகோதரி...
பதிலளிநீக்குநன்றி அண்ணா
நீக்குஅருமை சகோதரி
பதிலளிநீக்குநன்றி அண்ணா
நீக்கு"ரௌத்திரம் பழகு"னா என்னனு முதலில் போயி முதலில் பார்த்தேன். இதுகூடத் தெரியாதா?னு நெனச்சுடுவாங்களே னு ஒரு சிலர் இதை எல்லாம் சொல்ல மாட்டாங்க. :)
பதிலளிநீக்குஒரு சில விசயங்களுக்கு கோபப்படு, அதை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லு என்பதுபோல் புரிந்து கொண்டு இருக்கிறேன்.
"கோபம்" ஒரு இமோஷன். யோசிக்க எல்லாம் நேரமிருக்காது. ஆனால் கோபம் வர்ர விசயத்தை சொல்லலாமா வேண்டாமா?னு யோசிக்கும் அளவுக்கு கவனமாக அனுகச் சொல்றாங்க. அதே ஒரு பிரச்சினையான விசயம்..
------------------------------
உங்களுக்கு ரெண்டு இன்சிடென்ட் சொல்றேன்.
என்னுடைய வெள்ளைக்கார நண்பர் ஒருத்தர்.. இந்தியா போயிருந்தபோது, அவருடைய குடையோ, ஏதோ ஒரு பொருளை யாரோ பறிச்சுட்டு ஓடினாங்களாம். பக்கத்தில் உள்ள மக்கள், அவனை பிடிச்சு அடிச்சு, அவரிடம் அதை கொண்டு வந்து கொடுத்தாங்களாம். இது நடந்து ரொம்ப காலம் ஆயிடுச்சு. அவருக்கு இந்தியா மேலே ஒரு மதிப்பு. இதுபோல் எல்லாம் இங்கே அமெரிக்காவில் பண்ண மாட்டாங்கனு சொன்னார். பாவம், அவருக்கு இந்தியா மேல் ஒரு மரியாதை..
ரெண்டாவது விசயம்.
சமீபத்தில் டெல்லில நடந்த ஒரு இண்சிடென்ட் பார்த்தேன். ஏதோ முன் தகராறு. ஒரு ஆள் 30 வயது இருக்கும், அந்த ஆளுக்கு. கல்யாணம் ஆனவர் குழந்தையும் உண்டுனு சொன்னாங்க. ஆள் பரிதாபமா இருக்கார்லப்படி ஒண்ணும் பெரிய வில்லன் போல தெரியலை..
அவரை 3 சின்ன பசங்க ஒண்ணு சேர்ந்து (15-20 இருக்கலாம்), கத்தியை வச்சு ஆயிரம் பேர் மத்தியில் அடிச்சு குத்தி கொல்றானுக. சினிமால கூட நான் இதுபோல் பார்த்ததில்லை. இந்த வயதில் இதுபோல் ஒரு வெறி எப்படி வரும்? அப்படி என்ன அந்த ஆள் பெரிய தப்பு பண்ணினான்? என்கிற யோசனைகள் ஒரு பக்கம்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். 1000 பேர் சுத்தி எறுமை மாடு மாதிரி நடந்து போயிக்கொண்டு இருக்கானுக. இந்தப் பசங்க ஒண்ணும் பெரிய வீரர்கள் கெடையாது. நண்டு மாதிரி இருக்கானுக. ஆனால் சுத்தி உள்ளவன் எல்லாம் அவன் பாட்டுக்கு போறான். இவனை குத்தி குத்தி கொன்னுட்டாங்க ஆயிரம் பேர் மத்தியில். இதை அப்படியே cctv ல ரெக்கார்ட் ஆகி இருக்கு. அதை உலகம் முழுவதும் சர்குலேட் பண்ணிட்டானுக. சரி பொது மக்களை விடுங்க. போலிஸ்க் காரனையும் எவனையும் காணோம்!
"ரௌத்திரம் பழகு"னு நம்ம பேசுறோம்.
ஒரு படுகொலை கண் முன்னால நடக்குது! ஆயிரக்கனக்கான இந்தியர்கள் தான் உண்டு தன் வேலை உண்டுனு சினிமால நடப்பதுபோல் பார்த்துக்கொண்டு போயிட்டு இருக்கானுக.
எனக்குப் புரியலை இதுதான் இன்றைய நிதர்சன இந்தியாவா?
Dont get me wrong, I became hopeless after seeing that incident ! I really dont understand what happened to India? Where are they really going?! I have seen humanity in the community around me when I was growing up. That is not there anymore?!! இதுதான் இன்றைய இந்தியானா, நான் எல்லாம் அங்கே சர்வைவ் ஆவது ரொம்ப கஷ்டம்ங்க!
வணக்கம் வருண். நானும் சரியான அர்த்தத்தைத் தேடித் படித்துத் தான் தெரிந்து கொண்டேன். கற்றது கை மண் தானே , யாராவது கேலி பண்ணா, உங்க கை மண்ணும் என் கை மண்ணும் வேறன்னு சொல்லிட வேண்டியதுதான் :-) ஆனா நீங்க சொல்ற மாதிரி எல்லாரும் சொல்ல மாட்டாங்க தான்.
நீக்கு'ரௌத்திரம் பழகு' - நான் புரிந்து கொண்டது சரியான விஷயத்திற்குக் கோபப்படு. அதைக் காட்டவும் செய். சமூகக் கொடுமைகளைப் பார்த்து, மாற்றம் வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக நம்மால் முடிந்த வகையில் அதனை முன்னெடுக்க வேண்டும். நமக்கென்ன வம்பு என்று நினைப்பது 'ரௌத்திரம் பழகு' என்பதற்கு எதிரானது. சினத்தைச் சரியான இடத்தில் சரியான படி காண்பிக்கவும் பழக வேண்டும். இதைத்தான் அரசர் காலத்தில் ராஜதந்திரம் என்று சொல்லிருப்பார்களோ! நான் ராணி மங்கம்மாள் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நா.பார்த்தசாரதி அவர்களின் நூலில் படித்தேன். அதில் தில்லி கில்ஜியின் செருப்பை வணங்க வேண்டும் என்ற ஆணையுடன் தங்கத்தட்டில் வைத்து எடுத்து வருவார்கள். ராணியின் மகன் ரங்கபூபதி மீசை துடிக்க, போர் தொடுக்கிறேன் என்பார். ராணி அவரைத் தடுத்து நிதானமாகக் கையாள வேண்டும் என்று சொல்லி மதுரையிலிருந்து திருச்சிக்கு உடனே சென்று, அங்கு மகனுக்கு முடி சூட்டி விடுவார். இடைப்பட்ட நாட்களில் படைகளையும் தயாராக வைத்துவிடுவார். அரசரான பூபதி கர்ஜித்ததில் கில்ஜியின் ஆட்கள் தலைதெறிக்க ஓடி விடுவார்கள்.கோபத்தை உடனே காட்டாமல் இரண்டு மூன்று நாட்கள் கழித்துக் காட்டியதில் ஒரு அர்த்தம், ஒரு வீரம்! அது என் மனதில் பதிந்து இருக்கிறது..அது 'ரௌத்திரம் பழகு' என்பதில் சேருமோ என்று எனக்கு ஒரு எண்ணம். ஆனால் அதே ராணி மங்கம்மாள், தங்களுடையப் பிரதிநிதியாக இருந்தவரைக் கொன்றுவிட்டார் சேதுபதி என்று அறிந்தவுடனே போர் தொடுக்கச் சொல்வார். சாரி, வரலாற்றுக்குள் போய் விட்டேன்.
நீங்கள் சொல்லியிருக்கும் முதல் இன்சிடென்ட்டில் மக்கள் 'ரௌத்திரம் பழகு' அறிந்திருக்கிறார்கள். அநீதி கண்டு பொங்கி ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.
இரண்டாவது நிகழ்வில் அப்படி இல்லை. நம்மால் என்ன செய்ய முடியும் என்ற எண்ணமும் பயமும் என்று நினைக்கிறேன். மனதைப் பாதிக்கும் மனப்பான்மை. இது அதிகமாகிக் கொண்டும் இருக்கிறது. இம்மாதிரி சோசியல் மீடியாக்களில் பரப்புவது வேறு!!
There is nothing wrong Varun. Its no longer the world we grew up in. உங்களைப் போலவே எனக்கும் இது மன வருத்தத்தையும் கவலையும் தருகிறது. இன்னொரு பக்கம் மக்கள் உதவிக்கரம் நீட்டவும் செய்கிறார்கள். So just hanging on to the little hope we have.
Let's do the good we can and hope for the best. Thanks for sharing your thoughts on this, Varun.