பெருமைக்குரிய பெண்கள் - வல்லினச் சிறகுகள்

 


வல்லினச் சிறகுகள் ஏப்ரல் 2021 இதழில் வெளிவந்திருக்கும் என்னுடைய கவிதையும் 'பெருமைக்குரிய பெண்கள்' பகுதியில் நான் காணும் நேர்காணலும் மகிழ்வு தரும்இன்னும் இரண்டு செய்திகளும்!

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - உரோமைத் தமிழ்ச் சங்கத்தில் என் சிறப்புரை

 


'தமிழ் என் தாய் தந்த அமுதம்' மற்றும் உரோமைத் தமிழ்ச் சங்கம் இணைந்து 'வாங்க கொண்டலாம்' என்ற நிகழ்ச்சியைத் திங்கள் தோறும் நடத்துகின்றனர். அதில் ஏப்ரல் திங்களில் பாரதிதாசன் அவர்களைக் கொண்டாடிச் சிறப்பித்தனர். அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக என்னை அழைத்திருந்தனர்.

அனிகம் நீயே!

தனிமை தடுக்கும் நட்பே திகட்டா தேனமுதே
கனிவே மொழியாய் யாவும் உணர்த்தும் நுவல்வோனே
அனித அறிவை அன்பாய்ப் புகட்டும் அன்னையே
அனிலம் அகற்றி அகிலம் வெல்லும் ஆயுதமே
நனிதவ அணியே நூலெனும் கொடையே
அனிசமும் எந்தன் அனிகம் நீயே!

- கிரேஸ் பிரதிபா
 

அனிதம் - கணக்கற்றது; அனிலம் - அச்சம்; அனிசம் - எப்பொழுதும்; அனிகம் - சிவிகை, சேனை;

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...