கவிதை 2021 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை 2021 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அனிகம் நீயே!

தனிமை தடுக்கும் நட்பே திகட்டா தேனமுதே
கனிவே மொழியாய் யாவும் உணர்த்தும் நுவல்வோனே
அனித அறிவை அன்பாய்ப் புகட்டும் அன்னையே
அனிலம் அகற்றி அகிலம் வெல்லும் ஆயுதமே
நனிதவ அணியே நூலெனும் கொடையே
அனிசமும் எந்தன் அனிகம் நீயே!

- கிரேஸ் பிரதிபா
 

அனிதம் - கணக்கற்றது; அனிலம் - அச்சம்; அனிசம் - எப்பொழுதும்; அனிகம் - சிவிகை, சேனை;

தமிழ்ப்பாரம்பரியமும் தைத்திருநாளும் - கவிதைப்போட்டி - இரண்டாமிடம்

 


அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கத்தின் தைத்திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகப் பல போட்டிகள் நடைபெற்றன. அதில் கவிதை எழுதி வாசிக்கும் போட்டியில் இரண்டாமிடம் எனக்கு.  கவிதையைக் கேட்டு உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.  நன்றி.

விவேகானந்தர் பார்வையில் இளைஞர்கள்

 

விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி வீரத்தமிழரசி வேலுநாச்சி இலக்கிய சமூக அமைப்பு புலனம் வழி நடத்திய  நான்கு சீர்கள் கொண்ட  பதினாறு அடிகளில் கவிதை பாடும் நிகழ்ச்சிக்கு நான் எழுதியது.

தலைப்பு: விவேகானந்தர் பார்வையில் இளைஞர்கள்

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.