மகாகவி ஈரோடு தமிழன்பன் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி

 மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் 87ஆவது பிறந்தநாளில் நடத்தப்பட்ட இணையவழிச்  சிறப்பு நிகழ்வில் கவிதை வாசித்த வாய்ப்பிற்கு நன்றியுடனும் மகிழ்வுடனும் இங்கே பகிர்கிறேன். 


மக்கள் பாவலர் இன்குலாப், கவிக்கோ அப்துல் ரஹ்மான், மகாகவி தமிழன்பன் என்று வியந்து போற்றும் பேரறிஞர்களில் ஒருவரான ஈரோடு தமிழன்பன் அவர்களுடைய பிறந்த நாளில், அவரது  வாழ்வைப் போற்றி வாழ்த்தி வணங்கி கவிதை வாசிப்பது என்பது மிகவும் மகிழ்வான ஒன்று. 

இந்த வாய்ப்பை நல்கிய வல்லினச்சிறகு மின்னிதழ் மற்றும் உலகப் பெண் கவிஞர் பேரவை, அட்லாண்டா, அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள். 

 

 

 

 

 

 

 

 

 


 

 

நிகழ்வை இணைந்து நடத்திய ஈரோடு தமிழன்பன் வாசகர் வட்டம், அமெரிக்கா; அமெரிக்கத் தமிழ் வானொலி; ஒரு துளிக் கவிதை, புதுச்சேரி; அவர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள். 

அமெரிக்கத் தமிழ் வானொலி தளத்தில் முழு நிகழ்வினையும் காணலாம். சிறப்பாகத் தொகுத்தளித்த தோழி டெய்சி அவர்களுக்கும் நன்றி.

1:00:00 மணித்துளிகளில் இனிய சகோதரி மு.கீதா அவர்களின் கவிதை வாசிப்பு. 

 1:19:30 மணித்துளிகளில் என்னுடைய கவிதை வாசிப்பு.

1:44 மணித்துளிகளில் கரந்தை ஜெயக்குமார் அண்ணன் அவர்களின் உரை.

வலைத்தள நண்பர்களுக்காக இந்த நேரங்களைக் குறித்துக்கொடுத்தாலும், முழுநிகழ்வையும்கண்டு இரசிக்க அழைக்கிறேன். நன்றி!

8 கருத்துகள்:

  1. சிறப்பு மா.... நல்ல நிகழ்வு... நாம் இணைந்து செய்தது மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு


  2. மிகவும் சிறப்பாக நிகழ்வு நடைபெற்றுள்ளது என்பதை வீடியோ மூலம் அறிந்தேன். அனைவருக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. பல முறை மகாகவியை நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பினைப் பெற்றவன் நான்.
    அவரது பிறந்தநாளில் பேசுவதற்கு வாய்ப்பு கிட்டியமையை எண்ணி மகிழ்கிறேன்.
    தங்களின் கவி வாழ்த்து அருமை
    நன்றி சகோதரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா!! அருமையான வாய்ப்பாயிற்றே அண்ணா! உங்கள் பெயரைப் பார்த்தவுடன் மகிழ்வாக இருந்தது அண்ணா.

      மிக்க நன்றி அண்ணா.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...