உழவின்றி உயிருண்டோ சிந்திப்பீரே
உழவரைப் போற்றவே நினைத்திடுவீரே!
எத்தொழிலும் சிறப்பாம் உலகத்தாரே
இத்தொழில் முதன்மையாம் உணர்ந்திடுவீரே!
இலைதளை கொண்டே வீடுசெய்யலாம் - உழவு
இல்லையென்றால் எதை உண்பீர் தெளிந்திடுவீரே!
அறுவடைத் திருநாளாம் பொங்கல் இன்று
அறுசுவை உணவோடு மகிழ்ந்து கொண்டாடுவீர்
உழவும் உலகமும் தழைக்கவே போற்றுவோம்
உலகம் சுற்றும் மஞ்சள் கதிரவனை!
நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!