மகிழ்ச்சி பலதந்து மங்கிடா நட்பை
நெகிழவேச் சேர்த்து நிறைந்திட்ட ஆண்டே
மகிழ்ந்தே பலநன்றி மாலையாய்ச் சூட்டி
நெகிழ்ந்தே அனுப்புகிறோம் நின்னை!
இணைந்திட்ட நட்பின் இதயமெலாம் புத்தாண்டே
இணைந்தே பயணிக்க இன்னருள் தாராய்!
இணையிலா அன்பு இனிதாய் நிலைபெற
இன்முகம் என்றும்நீ காட்டு!
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!