எங்கோ

படம்: நன்றி இணையம்

எங்கோ அழும் அழுகை என் காதில் கேட்கிறது
எங்கோ எரியும் நெருப்பு என் நெஞ்சைச் சுடுகிறது

எங்கோ விழும் அடி என்மேல் வலிக்கிறது
எங்கோ தோன்றும் ஆற்றாமை என் மனதில் வெடிக்கிறது
எங்கோ படரும் பயம் என்னையும் பற்றுகிறது
எங்கோ நடப்பதைப் பற்றி
இங்கொருவன் கேட்பதற்குச் சொல்ல வார்த்தை இல்லை எனக்கு
அறியாமல் புரியாமல் தவிக்கிறான் அவன்
அறிந்தும் புரிந்தும் தவிக்கிறேன் நான்
இருவரின் தவிப்பிலும் மனிதம்

12 கருத்துகள்:

  1. இருவர் தரப்பிலும் மனித நேயம் இருக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்துத் தரப்பிலும் இருக்க வேண்டும் அண்ணா . நன்றி அண்ணா

      நீக்கு
  2. மனித நேயம் காணாமல் போய்விட்டது போல இருக்கிறது சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேதனை சகோ..
      வேண்டாம் என்று நினைக்கிறார்கள் போலல்லவா இருக்கிறது?..

      நீக்கு
  3. அற்புதம்...எங்கோ எங்கோ என்ற சொல்லை பயன்படுத்திய நேர்த்தி மிக மிக அருமை..

    பதிலளிநீக்கு
  4. மனிதநேயம் இல்லாவிட்டால் மனிதர் இல்லை சகோ.

    பதிலளிநீக்கு
  5. மனிதம் நம்மிடையே இருந்து என்ன பிரயோசனம். மேலே ஒருவன் கண்டும் காணாதது போல் இருக்கின்றானே. எல்லாம் அவன் செயல்.Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதத்தைச் செயலாக்கும் மனதையும் உரிமையையும் நமக்கு அல்லவா கொடுத்து இருக்கிறான்..
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.

      நீக்கு
  6. மனித நேயம் அனைவரிடத்திலும் இருக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...