சித்திரை மகளே வாராய்சித்திரை மகளே வாராய்
நித்திரை நீக்க வாராய்


அறுசுவை உணவும்
மாவிலைத் தோரணமும்
காரணம் அருமைதான்
ஆனால் தொலைந்துபோனதே!

எதற்கென்று தெரியாமல்
பொங்கலும் அவியலும்;
நெகிழியில்
மாவிலையும் வாழையிலையும்!

வாழ்த்து சொல்லிச் சொல்லி
வளர்ச்சியொன்றும் காணேன்
அதே குப்பை அதே வெள்ளம்!


இந்த ஆண்டாவதுத் தேர்ந்து கொஞ்சம்
நித்திரை நீக்கிச் செல்லு


தமிழ்ப் புத்தாண்டாம்
திக்கெட்டும் கேட்கிறது
'ஹேப்பி நியூ இயர்'

என்ன எதற்கு...அறியாதோர்
நித்திரை நீக்க வாராய்
சித்திரை மகளே வாராய்!


எது தமிழ்ப் புத்தாண்டு? ஒரு அலசல்  என்ற திருமிகு.முத்துநிலவன் அண்ணாவின் பதிவில் ஒரு இணைப்பு இருக்கிறது. விழுது என்ற கல்வி இதழின் இணைப்பு! அதில் அறிவியற்பூர்வமாய் அருமையான ஒரு கட்டுரை - புத்தாண்டைப் பற்றி! வாசிக்க மேலுள்ள இணைப்பைச் சொடுக்குங்கள்.

நன்றி!

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!


13 கருத்துகள்:

 1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. எத்திரை போட்டாலும் சித்திரையை மறக்காத கவிதை. சகோதரி அவர்களுக்கு எனது உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
 4. அன்பின் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 5. மன வருத்தத்துக்கான காரணம் உண்மைதான். ஆங்கிலத்தில் வாழ்த்துச் சொல்வதும் அதே போலத்தான்.

  இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. தங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!
  த ம 4

  பதிலளிநீக்கு
 7. அருமை அருமை க்ரேஸ்....

  //வாழ்த்து சொல்லிச் சொல்லி
  வளர்ச்சியொன்றும் காணேன்
  அதே குப்பை அதே வெள்ளம்!// உண்மைதான் க்ரேஸ்...இப்போ தேர்தல் வேற ஒரு நல்ல தலைவர் இல்லாமையும் சேர்த்துக் கொள்ளலாம்...

  கீதா

  பதிலளிநீக்கு
 8. நல்லதொரு கவிதை...

  தமிழ் புத்தாண்டு தமிழர்களுக்கு சந்தோஷத்தை தருகிறதோ இல்லையோ நிச்சயம் புத்தாண்டுக்கு ரீலீஸ் ஆகும் படங்களில் நடிக்கு நடிகர்களுக்கு நல்ல அதிர்ஷடத்தை தருகிறது

  பதிலளிநீக்கு
 9. இந்த ஆண்டாவதுத் தேர்ந்து கொஞ்சம்
  நித்திரை நீக்கிச் செல்லு//

  என் மன நிலையும் இதுதான்...

  பதிலளிநீக்கு
 10. இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

  சித்திரையாள் வருகை
  இத்தரையில் எல்லோரும்
  எல்லாமும் பெற்று வாழ
  எல்லோருக்கும் வழிகிட்டுமென
  புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
  இத்தால் உங்கள் யாழ்பாவாணன்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

யாழிசை இல்லறம் - ஐங்குறுநூறு 402

  ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. தலைவனும் தலைவியும் திருமணம...