கறுப்பின அடிமைத்தனத்தை எதிர்த்து செல்மாவில் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த காலம். ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகள் அடிமைப்பட்டிருந்த ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் சமக்குடியுரிமை அறிவிக்கப்பட்டப் பின்னரும் பொதுவிடங்களில் ஒடுக்கப்பட்டனர். இதற்கு மேலும் பொறுக்கமுடியாது, நாங்களும் சமமாக விடுதலை வாழ்வை வாழ்ந்தே தீருவோம் என்று வீறுகொண்டனர்.
முந்தையப் பதிவை, செல்மா படித்துவிட்டு வந்தால் தெளிவாக இருக்கும்.
நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் அகிம்சைக் கொள்கை மார்டின் லூதர் கிங் ஜுனியரால் விரும்பப்பட்டு ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின் போராட்ட முறையாகவும் மாறியிருந்த காலம். இனவெறி பிடித்த சில வெள்ளையர்கள் விட்டுவிடுவார்களா? எண்ணிப் பார்க்கவியலா அடக்குமுறைகளை ஏவிவிட்டனர், நகர செரிப் ஜிம் கிளார்க் (Jim Clark) மற்றும் நீதிபதி ஜேம்ஸ் ஹேர் (James Hare). மூன்று பேருக்கு மேல் பொதுவிடங்களில் சந்திக்கக் கூடாது போன்ற அரசியலமைப்புக்கு எதிரான சட்டங்கள் விதிக்கப்பட்டன. அராஜகம்! இனவெறி!
செரிப் ஜிம் கிளார்க் நெவர் (Never) என்று பொறிக்கப்பட்ட பதக்கம் ஒன்றை அணிந்திருப்பாராம். ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு சம உரிமை ஒரு போதுமில்லை என்று!! நிறவெறியின் பயங்கர உதாரணம்!!
மார்டின் லூதர் கிங் ஜுனியரின்நண்பரும் சமக்குடியுரிமைஆதரவுப் போராளியுமான ரெவ்.சி.டி.விவியன் (Rev.C.T.Vivian)1,
செல்மாவில் ஆப்பிரிக்க அமெரிக்கரின் ஓட்டுரிமைக்கான முயற்சிகளில் தீவிரமாக
ஈடுபட்டிருந்தார். அவருடைய உணர்ச்சிமிக்க வீராவேச உரைகள் மக்களை
ஊக்குவித்து அவர்களின் விடுதலை உணர்வைத் தூண்டிக்கொண்டிருந்த நேரம்.
ஓட்டுரிமை நோக்கி இவர்கள் முன்னேறிக் கொண்டிருந்ததைப் பார்த்த ஜிம்
கிளார்க் பொறுத்துக் கொள்வாரா? ஒரு போதுமில்லை என்ற வெறியில்
கிளம்பினார்.
சி.டி.விவியன் அவர்கள் நீதிமன்றப் படிகளில் உணர்ச்சிமிக்க உரையாற்றிக் கொண்டிருந்தார். விடுதலை உணர்வு அங்கு காற்றில் கலந்து பரவிக் கொண்டிருந்தது. வெறுப்பையெல்லாம் தன் கையில் குவித்து விவியன் அவர்களை முகத்தில் குத்தினார் ஜிம் கிளார்க். அத்தோடு அடங்கவில்லை அவரது நிறவெறியின் கோபம்! தன் உதவியாளர்களை ஏவி விவியன் அவர்களைக் கைதுசெய்தார். குடியுரிமை பேச என்ன துணிவு இருக்கவேண்டும் என்ற குற்றச்சாட்டு!
ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பலரும் தினமும் கைது செய்யப்பட்டு வந்த நிலையில் விவியன் அவர்களின் கைது மேலும் இறுக்கத்தை ஏற்படுத்தியது. போராட்டங்கள் வலுப்பெற்றன. செல்மாவில் மட்டும் அல்ல, அருகிருந்த மாரியன் என்ற இடத்திலும். சிறைச்சாலைகள் நிறைந்தன.
கிங் ஜூனியர் சதர்ன் கிறிஸ்டியன் லீடர்ஷிப் இயக்கத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஆரஞ் (James Orange) என்பவரை மாரியனிற்கு அனுப்பிவைத்திருந்தார். இவர் ஆல்பர்ட் டர்னர் (Albert Turner) என்றவருடன் இணைந்து பணியாற்ற, மாரியனில் போராட்டம் சூடுபிடித்தது. மாணவர்கள் உட்பட பல ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜேம்ஸ் ஆரஞ்சும்.
இதற்கும் விவியன் அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டிருந்தார். ஜேம்ஸ் ஆரஞ்சை வெளியேக் கொண்டு வர ஏதாவது செய்யவேண்டும் என்ற உந்துதல் ஆல்பர்ட் டர்னருக்கு. அறிக்கை விட வேண்டும் என்று முடிவு செய்த அவர், விவியன் அவர்களை மாரியனின் சீயோன் உனைடெட் மெத்தாடிஸ்ட் (Zion United Methodist) சர்ச்சில் இரவில் உரையாற்ற வரும்படி சம்மதிக்க வைத்தார்.
பெப்ரவரி 18, 1965 இரவு - விவியன் அவர்கள் வந்தார், உரையாற்றினார், பின்பக்கக் கதவு வழியாக வெளியேறிக் காத்திருந்தக் காரில் ஏறிச் செல்மாவிற்கு விரைந்துவிட்டார்.
பிறகு நடந்தது யாரும் எதிர்பார்க்காத ஒன்றிற்கு வழிநடத்திச் சென்றது. வரலாற்றில் முக்கிய நாளாக, ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மறக்கமுடியாத நாளாக, ஏன்..அமெரிக்க வரலாற்றில் முக்கிய நாளாக, பெப்ரவரி 18, 1965 மாறியது.
தொடரும்...
1. ரெவ்.சி.டி.விவியன்
மேலும் இணைப்புகள் தொடரின் இறுதியில் கொடுக்கப்படும்.
Image:thanks Google |
முந்தையப் பதிவை, செல்மா படித்துவிட்டு வந்தால் தெளிவாக இருக்கும்.
நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் அகிம்சைக் கொள்கை மார்டின் லூதர் கிங் ஜுனியரால் விரும்பப்பட்டு ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின் போராட்ட முறையாகவும் மாறியிருந்த காலம். இனவெறி பிடித்த சில வெள்ளையர்கள் விட்டுவிடுவார்களா? எண்ணிப் பார்க்கவியலா அடக்குமுறைகளை ஏவிவிட்டனர், நகர செரிப் ஜிம் கிளார்க் (Jim Clark) மற்றும் நீதிபதி ஜேம்ஸ் ஹேர் (James Hare). மூன்று பேருக்கு மேல் பொதுவிடங்களில் சந்திக்கக் கூடாது போன்ற அரசியலமைப்புக்கு எதிரான சட்டங்கள் விதிக்கப்பட்டன. அராஜகம்! இனவெறி!
செரிப் ஜிம் கிளார்க் நெவர் (Never) என்று பொறிக்கப்பட்ட பதக்கம் ஒன்றை அணிந்திருப்பாராம். ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு சம உரிமை ஒரு போதுமில்லை என்று!! நிறவெறியின் பயங்கர உதாரணம்!!
Image: thanks Google |
Image: thanks Google |
சி.டி.விவியன் அவர்கள் நீதிமன்றப் படிகளில் உணர்ச்சிமிக்க உரையாற்றிக் கொண்டிருந்தார். விடுதலை உணர்வு அங்கு காற்றில் கலந்து பரவிக் கொண்டிருந்தது. வெறுப்பையெல்லாம் தன் கையில் குவித்து விவியன் அவர்களை முகத்தில் குத்தினார் ஜிம் கிளார்க். அத்தோடு அடங்கவில்லை அவரது நிறவெறியின் கோபம்! தன் உதவியாளர்களை ஏவி விவியன் அவர்களைக் கைதுசெய்தார். குடியுரிமை பேச என்ன துணிவு இருக்கவேண்டும் என்ற குற்றச்சாட்டு!
Image: thanks Google |
ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பலரும் தினமும் கைது செய்யப்பட்டு வந்த நிலையில் விவியன் அவர்களின் கைது மேலும் இறுக்கத்தை ஏற்படுத்தியது. போராட்டங்கள் வலுப்பெற்றன. செல்மாவில் மட்டும் அல்ல, அருகிருந்த மாரியன் என்ற இடத்திலும். சிறைச்சாலைகள் நிறைந்தன.
Image:thanks Google |
கிங் ஜூனியர் சதர்ன் கிறிஸ்டியன் லீடர்ஷிப் இயக்கத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஆரஞ் (James Orange) என்பவரை மாரியனிற்கு அனுப்பிவைத்திருந்தார். இவர் ஆல்பர்ட் டர்னர் (Albert Turner) என்றவருடன் இணைந்து பணியாற்ற, மாரியனில் போராட்டம் சூடுபிடித்தது. மாணவர்கள் உட்பட பல ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜேம்ஸ் ஆரஞ்சும்.
இதற்கும் விவியன் அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டிருந்தார். ஜேம்ஸ் ஆரஞ்சை வெளியேக் கொண்டு வர ஏதாவது செய்யவேண்டும் என்ற உந்துதல் ஆல்பர்ட் டர்னருக்கு. அறிக்கை விட வேண்டும் என்று முடிவு செய்த அவர், விவியன் அவர்களை மாரியனின் சீயோன் உனைடெட் மெத்தாடிஸ்ட் (Zion United Methodist) சர்ச்சில் இரவில் உரையாற்ற வரும்படி சம்மதிக்க வைத்தார்.
பெப்ரவரி 18, 1965 இரவு - விவியன் அவர்கள் வந்தார், உரையாற்றினார், பின்பக்கக் கதவு வழியாக வெளியேறிக் காத்திருந்தக் காரில் ஏறிச் செல்மாவிற்கு விரைந்துவிட்டார்.
பிறகு நடந்தது யாரும் எதிர்பார்க்காத ஒன்றிற்கு வழிநடத்திச் சென்றது. வரலாற்றில் முக்கிய நாளாக, ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மறக்கமுடியாத நாளாக, ஏன்..அமெரிக்க வரலாற்றில் முக்கிய நாளாக, பெப்ரவரி 18, 1965 மாறியது.
தொடரும்...
1. ரெவ்.சி.டி.விவியன்
மேலும் இணைப்புகள் தொடரின் இறுதியில் கொடுக்கப்படும்.
சுவாரஸயத்துடன் தொடர்கிறேன்.
பதிலளிநீக்குசே... என்னவொரு வெறித்தனம்...
பதிலளிநீக்குஆமாம் அண்ணா.
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
ஆஹா அடுத்தது எப்போ..
பதிலளிநீக்குவிரைவில்...
நீக்குநன்றி கீதா
1965இன் அந்நாள் நிகழ்வினை அறியஆவலாக உள்ளோம்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா
நீக்குமனிதம் மறந்த நிகழ்வுகள்
பதிலளிநீக்குதொடர்கிறேன் சகோதரியாரே
நன்றி
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா
நீக்குInteresting.... Continue,,,
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குமேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.....
பதிலளிநீக்குதொடர்கிறேன்! தொடருங்கள்!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குசொல்லிச்செல்லும் விதம் சிறப்பு வாழ்த்துக்கள் தொடருங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான பகிர்வு.
பதிலளிநீக்குமின்நூல் வடிவமைப்பும் வெளியீடும்
http://www.ypvnpubs.com/2016/01/blog-post_26.html
தொடர்கிறேன்,,,, சகோ
பதிலளிநீக்குதடக் ....தடக்...இதயம் துடிக்குது!!!! ஆவலாக தொடர்கிறோம் டியர்.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு... தொடர்கிறேன்...
பதிலளிநீக்கு