குடியுரிமைப் போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குடியுரிமைப் போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விடுதலைப் பயணம் Freedom March

முந்தையப் பதிவுகளின் இணைப்புகள்
1.செல்மா 
2.மாரியன் 
3.ஜிம்மி லீ ஜாக்சன் 
4. ஜான் லூயிஸ் 
5. செங்குருதி ஞாயிறு


Image:thanks Google

         மகாத்மா காந்தியின் அகிம்சை வழியிலான போராட்டம் மக்களை ஈர்த்து ஆங்கிலேயரை ஆட்டம்காணச் செய்தது அல்லவா? அது போல செங்குருதி ஞாயிறும் அமெரிக்க மக்களின் உணர்ச்சிகளைத் தொட்டு அமெரிக்காவில் நிலவிவந்த வேற்றுமை வியாதியை நிலைகுலையச் செய்தது. அமைதியாக ஊர்வலம் சென்ற மக்கள் மேல் தடியடி நடத்துவதா? புகைக் குண்டுகள் வீசுவதா என்று அமெரிக்க மக்கள்  வெகுண்டனர். ஆமாம், அனைவரும் நிறவெறி பிடித்தவர்கள் அல்லவே!
         செங்குருதி ஞாயிற்றின் பலனாக மார்ச் 15ஆம் தேதி அப்போதைய அதிபர் திருமிகு.லிண்டன் பி.ஜான்சன் காங்கிரஸ் கூட்டத்தில் குடியுரிமை அமல்படுத்துவது பற்றி பேசினார்.

செங்குருதி ஞாயிறு


 முந்தையப் பதிவுகளின் இணைப்புகள்
1.செல்மா 
2.மாரியன் 
3.ஜிம்மி லீ ஜாக்சன் 
4. ஜான் லூயிஸ் 

 எட்மன்ட் பெட்டஸ் பாலத்தின் மேற்பகுதியை அடைந்த ஜான் லூயிசும் வில்லியம்சும் திடிரென்று நின்றனர். அங்கே பாலமிறங்கும் இடத்தில் நீலவானம் இறங்கி வந்திருக்கிறதோ என்று ஐயுறும் வகையில் ஒரு தோற்றம்! ஆம்! நீலத்  தலைக்கவசமும் நீலச் சீருடையும் அணிந்த அலபாமா மாநிலப் படையினர் நெடுஞ்சாலை 80இன் ஒரு புறமிருந்து மறுபுறம்வரைத் திரண்டிருந்தனர். அவர்களோடு இணைந்து நிறவெறிபிடித்த வெள்ளைப் பொதுமக்களும் எள்ளி நகையாடிக் கான்பெடரேட் (Confederate) கொடிகளை அசைத்துக்கொண்டு! செல்மாவின் செரிப் ஜிம் கிளார்க் நியமனம் செய்திருந்த வெள்ளைப் பிரதிநிதிகளும் தடிகளோடும் சாட்டைகளோடும் குழுமியிருந்தனர். முட்கம்பிகள் பொருத்தப்பட்ட ரப்பர் பைப்பைச் சுழற்றிக்காட்டியதாகவும் குறிப்புகள் சொல்கின்றன.  


ஜான் லூயிஸ் - குடியுரிமைப் போராட்டம்


முந்தையப் பதிவுகளின் இணைப்புகள்
1.செல்மா 
2.மாரியன் 
3.ஜிம்மி லீ ஜாக்சன் 

ஜிம்மி லீ ஜாக்சனின் மரணம் அதிர்வலைகளை ஏற்படுத்தி  சம உரிமை வேண்டும் போராட்டம் மேலும்  எழுச்சிபெறச் செய்தது. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் நிகழ்ந்த அநீதியைக் கண்டுக் குமுறினர், நிறம் கறுத்த எம்முயிர் துச்சமா என்று வெகுண்டு எழுந்தனர். குடியுரிமை பெற்று ஜிம்மியின் மனவிருப்பம் நிறைவேற்றுவோம் என்று வீறு கொண்டனர்.


ஜிம்மி லீ ஜாக்சன்

முந்தையப் பதிவுகளின் இணைப்புகள்
1.செல்மா 
2.மாரியன் 


         விவியன் அவர்கள் சென்றவுடன், ஆல்பர்ட் டர்னர் அங்கிருந்த மக்களுடன் விடுதலைப் பாடல்களைப் பாடிக்கொண்டு சிறைச்சாலை வரை ஒரு ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்தார். மக்களும் பாடிக்கொண்டு அமைதியான முறையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அமைதியான போராட்டம் என்றாலும் இரவின் போர்வையில் மிகப்பெரிய கொடுமை அரங்கேறியது.

மாரியன்

         கறுப்பின அடிமைத்தனத்தை எதிர்த்து செல்மாவில் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த காலம். ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகள் அடிமைப்பட்டிருந்த ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் சமக்குடியுரிமை அறிவிக்கப்பட்டப் பின்னரும் பொதுவிடங்களில் ஒடுக்கப்பட்டனர். இதற்கு மேலும் பொறுக்கமுடியாது, நாங்களும் சமமாக விடுதலை வாழ்வை வாழ்ந்தே தீருவோம் என்று வீறுகொண்டனர்.

Image:thanks Google

செல்மா


Image: thanks Google
 
   செல்மா - அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் அலபாமா ஆற்றின் கரையில் அமைந்த நகரம். அமெரிக்க சிவில் வாரின் போது 1865இல் இங்கு தான் கொடூரமான இனவெறியனும் கான்பெடரெட் படையின்  தளபதியுமான நேதன் பெட்போர்ட் பாரெஸ்ட் (Nathan Bedford Forrest) தோல்வியைத் தழுவினான்.

மார்டின் லூதர் கிங் தினம்


     அமெரிக்கன் சிவில் வார் (1861-1865) கறுப்பின அடிமைத்தனத்தை ஒழித்தாலும், கறுப்பின மக்களுக்குச் சமக்குடியுரிமைகள் மறுக்கப்பட்டே வந்தன.தீண்டாமை தலைவிரித்தாடியது. உணவகங்களில் தனியாக ஒதுக்கப்பட்டனர், அவர்கள் கேட்ட உணவுகள் கூடகொடுக்கப்படமாட்டாது. பொதுவிடங்களில் எங்கும் ஒதுக்கப்பட்டனர்.

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.