Image: thanks Internet |
கொல்கத்தாவின் பள்ளியிலிருந்துப் பெற்றோருக்கு வந்ததாகப் பகிரப்பட்டக் கடிதம் வாசித்தேன். அதன் சாரம் பிடித்ததால் தமிழாக்கம் செய்து பகிர்கிறேன். கடிதத்தின் மூலத்திற்கு நன்றிகள்! திருமிகு.முத்துநிலவன் அண்ணாவின் 'முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே' சொல்வதும் இதுவே! அவரின் 'முதல் மதிப்பெண் எடுப்பவர் முதல் தர மாணவரா?' கட்டுரையையும் படியுங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அன்பிற்குரியப் பெற்றோருக்கு,
தேர்வுகள் நெருங்கிவரும் இவ்வேளையில் நீங்கள் பதட்டமாக இருப்பீர்கள் என்று அறிவோம். ஆனால் சிலவற்றை நீங்கள் மனதில் இருத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தேர்வு எழுதும் பிள்ளைகளில் கணிதத்தைப் புரிந்துகொள்ள முடியாத ஒரு கலைஞர் இருக்கிறார். ஆங்கிலத்தையோ வரலாற்றையோ முக்கியமாகக் கருதாதத் தொழில்முனைவர் இருக்கிறார். தேர்வெழுதப்போகும் ஒரு இசைக்கலைஞருக்கு வேதியியல் மதிப்பெண் உதவப்போவதில்லை. விளையாட்டு வீரருக்கு இயற்பியலைவிட உடல் கட்டமைப்பு மிக அவசியம்.
உங்கள் பிள்ளை அதிக மதிப்பெண்கள் எடுத்தால் மகிழ்ச்சி. அதே நேரம் உங்கள் பிள்ளை தேர்வில் தோல்வியடைந்தால் தயவுசெய்து அவர்களின் தன்னம்பிக்கையைக் குலைத்துவிடாதீர்கள். பரவாயில்லை, ஒரு தேர்வுதானே என்று சொல்லுங்கள். வேறு வகையில் பெரிதாக சாதிக்கப் பிறந்தவர்கள் என்று ஊக்கப்படுத்துங்கள். எத்தனை மதிப்பெண்கள் வாங்கினாலும் உங்கள் அன்பு எப்பொழுதும் உண்டு என்று அவர்கள் மனதில் விதையுங்கள். மதிப்பெண் கொண்டு பிள்ளைகளை அளவிட மாட்டேன் என்று சொல்லுங்கள். கண்டிப்பாக உங்கள் பிள்ளைகள் உலகை வெல்வார்கள். ஒரு தேர்வோ தொண்ணூறு சதவிகிதமோ அவர்களின் கனவுகளையோ திறமைகளையோ அழித்துவிடாது.
நன்றி!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~"உங்கள் வாழ்க்கை ஒரே ஒரு குழந்தையை உத்வேகப்படுத்துமானால், உங்கள் வாழ்க்கை வெற்றிபெற்றதென்று கொள்ளுங்கள்" - மார்க் டெஸ்வாக்ஸ் (பன்முகத் தொழில் முனைவர்)1
ஆங்கிலத்தில் வந்த கடிதம் கீழே:
Heritage School Kolkata sent this letter to all their board parents..... Just loved it so sharing with you all.
Dear Parent :
The exams of children are to start soon. I know you'll are really anxious for your child to do well but please do remember, amongst the students who will give the exams is an artist who doesn't need to understand Math. There's an entrepreneur who doesn't care about History or English literature. There's a musician whose Chemistry marks won't matter. There's a sportsperson whose physical fitness is more important than Physics. If your child does get top marks then great. But if he or she doesn't then don't take away their self confidence from them. Tell them it's ok, it's just an exam. They are cut out for much bigger things in life. Tell them, no matter what they score you love them and will not judge them.
Please do this and if you do, watch your children conquer the world. One exam or a 90 percent won't take away their dreams and talent.
1.மார்க் டெஸ்வாக்ஸ்
1.மார்க் டெஸ்வாக்ஸ்
அருமையான விடயம் சகோ குழந்தைகளை தன்னம்பிக்கையை இழக்க விடக்கூடாது உண்மையே..
பதிலளிநீக்குதமிழ் மணம் 1
நன்றி சகோ
நீக்கு// சாதிக்கப் பிறந்தவர்கள் என்று ஊக்கப்படுத்துங்கள்... // இது ஒன்றே முக்கியம்...
பதிலளிநீக்குஆமாம் அண்ணா
நீக்குநன்றி
உண்மை தான்மா மதிப்பெண்கள் அல்ல வாழ்க்கை எப்போது புரிந்து கொள்வார்கள்...
பதிலளிநீக்குவிரைவில் கீதா :-)
நீக்குநன்றி
மதிப்பெண்களைத் தேடும் அவசரம்! மனிதத்தையும் அந்த வயதிற்குரிய குழந்தைமையையும் இழந்துவிடும் குழந்தைகள்! இதைப் பார்க்கும்போது அவர்கள் மேல் பாவமும், இந்தக் கல்விமுறையின்மேல் கோவமும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அருமையானதொரு கடிதத்தை அழகாக மொழிபெயர்த்த என் அன்புத் தங்கை கிரேசுக்கு வாழ்த்துகள். இதில் என் கட்டுரையை மேற்கோள் காட்டியதற்கும் நன்றிகள் மா! த.ம.3
பதிலளிநீக்குபார்க்கலாம், இதுபோலும் கருத்துகள் ஒன்றுசேர்ந்து வலிமையாக மாற மாற இந்தக் கல்விமுறை மாறும் என்றே நம்புகிறேன். “அளவுமாற்றம் குணமாற்றத்தை நிகழ்த்தும்” (Quantity changes will lead to Quality changes) என்பது சமூக விஞ்ஞானமல்லவா? என்றாலும், “தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்”என்பதையும் அறிந்து இதை வலுப்படுத்துவோம்!
உண்மைதான் அண்ணா, திறமைகளைப் பரணில் போட்டுவிட்டு மதிப்பெண்ணிற்கு ஓடும் நிலை வேதனையானது. கண்டிப்பாக மாறும் அண்ணா .
நீக்குஅருமையான கருத்தாழமிக்கக் கட்டுரையைப் பகிர்வதில் எனக்குத்தான் மகிழ்ச்சி அண்ணா. மிக்க நன்றி
அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்ப வேண்டிய அரிய அறிக்கை. (குறிப்பாகத் தமிழ்நாட்டு நாமக்கல் “பிராய்லர் பள்ளிகளுக்கு”) உன் தமிழாக்கமும் அழகும்மா. இயல்பான தமிழில் இனிய பெயர்ப்பு. என் ஜி.ப்ளஸ்இல் பகிர்கிறேன்.
பதிலளிநீக்குஆமாம் அண்ணா, அனைத்துப் பள்ளிகளுக்கும் பெற்றோருக்கும் சேரவேண்டும் என்பதே என் விருப்பமும். இனிய கருத்திற்கும் பகிர்தலுக்கும் நன்றிகள் அண்ணா.
நீக்குமுத்துநிலவன் சொன்னது போல தமிழாக்கம் அருமை பாராட்டுக்கள்
நீக்குநன்றி சகோ
நீக்குஅருமையான கருத்து. எத்தனை பெற்றோரால் இதைப் பின்பற்ற முடியும் என்று நினைக்கிறீர்கள்? ம்ம்ம்..
பதிலளிநீக்குதம +1
முடிந்தவரை மாற்றுவோம் ஸ்ரீராம், பின்னர் மாறியவர்கள் மாற்றுவார்கள், இல்லையா? butterfly effect :)
நீக்குஉண்மை உண்மையே தாங்கள் பதித்துள்ளீர் சகோ.நானும் நா.முத்துநிலவன் ஐயா-வின் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே நூலை படித்தேன் அதில் குறிப்பிட்ட ஒவ்வொரு வரிகளுமே மிக உண்மையே.இன்றைய மாணவர்களிடம் இந்த அரசும் சமூகமும் மதிப்பெண் என்ற ஒரு பெரிய நோயை உருவாக்கி அவர்களின் திறமைகளை அடக்கி ஒடுக்கி விடுகின்றனர்.மதிப்பெண் மதிப்பெண் என்று ஓடும் தனியார் பள்ளிகளிடம் சிக்கிக் கொண்டு பாவம் பிள்ளைகள் படும் அவஸ்தை.பெற்றோர்களும் இதே தவறை தான் செய்கிறார்கள்.என பிள்ள அதிக மதிப்பெண் எடுக்கணும் அவன் தான் மாவட்டத்திலே முதலாவதாக வர போராணு அவங்கள ஆசைகள அவங்கள பசங்க மேலே திணிச்சு அவங்க திறமைகளை வெளிவராமல் போகின்றன.
பதிலளிநீக்குஇந்த அரசு மக்களுக்கு உண்மையான ஒரு சேவை செய்ய வேண்டும் அவர்கள் வாழ்வு முன்னேற வேண்டும் என்றால் கட்டாயம் ஒன்று செய்யலாம்.கல்வி முறையை மாற்றியமைக்கலாம்.மனப்பாடம் செய்யும் முறையை அகற்றி மாணவர்களை சிந்திக்கும் பயிற்சி முறையை கையாளலாம் மேலும் அவர்களுக்கு என்ன தெரியுமோ அதற்கு முக்கியத்துவம் தரலாம்.மாணவர்களை மதிப்பெண்ணுக்கு பதிலாக அவர்களின் திறமைகளோடு அவர்களை சிறக்கடிக்க செய்யலாம்.கல்வி என்பது சேவைய்யாக இருக்க வேண்டும் ஆனால் இன்று அது வியாபாரம் ஆயிற்று அதன் விளைவு தான் மதிப்பெண்.பள்ளிகளும் பெற்றோர்களும் தான் இதை முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.
நன்றி சகோ.தேர்வு நேரத்தில் இதுப் போன்ற ஒரு பதிவு.
விரிவான கருத்திற்கு நன்றி வைசாலி. உங்கள் அளவில் மதிப்பெண் குறைந்தால் உடைந்து போக வேண்டாமென்று உடன் படிப்பவர்களுக்குப் புரிய வையுங்கள்.
நீக்குபெற்றோர்களிடமும் இந்த புரிதல் ஏற்படுமாயின்
பதிலளிநீக்குஇல்லங்கள் செழிக்கும்
நெஞ்சங்கம் மகிழும்
கொல்கத்தா பள்ளி
போற்றுதலுக்கு உரிய பள்ளி
போற்றுவோம்
தம +1
ஆமாம் அண்ணா.
நீக்குகொல்கத்தா பள்ளி உண்மையில் அனுப்பியதா என்ற ஆராய்ச்சியை நான் செய்யவில்லை அண்ணா, உண்மையென்றால் போற்றுதலுக்கு உரியதே. கடிதத்தின் சாரம் அருமையாக இருக்கிறது என்பதால் பகிர்ந்தேன்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னதை நான் வெளியிடுவதற்குள் நீங்கள் முந்திவிட்டீர்கள். அவர் சொன்னது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது...
பதிலளிநீக்குகடித்தத்தில் சொன்னபடிதான் நானும் என் மகளை எந்த காரணதிற்க்கும் அவளை ஃபோர்ஸ் பண்ணக்கூடாது கம்பேர் பண்ணக் கூடாது என்று என் மனைவியிடம் சொல்லிதான் வளர்த்து வருகிறேன்.காரணம் ஒவ்வொருத்துவருக்கும் ஒரு திறமை இருக்கும் அப்படி திறமை இல்லையென்றாலும் அவர்களை ஃபோர்ஸ்படுத்துவதால் நாம் ஒனுமே சாதிக்க முடியாது.
ஓ அப்படியா சகோ? :) ஆமாம் அருமையான விஷயம் இல்லையா?
நீக்குசரியாகச் செய்கிறீர்கள் சகோ. அதுவும் இங்கு நம் மக்கள் செய்யும் பரபரப்பு இருக்கிறதே..
நல்ல பதிவு அம்மா.. உண்மையும் கூட ..
பதிலளிநீக்குபெற்றோர்களின் புரிதலே அவசியம்....
நன்றி சகோ
நீக்குஅருமையான பகிர்வு...இந்த தேர்வு நேரத்தில் அனைத்து பள்ளிகளும் ...பெற்றோரும் படித்து..புரிந்து கொள்ள வேண்டும்..
பதிலளிநீக்குநன்றி சகோதரி
நீக்குமதிப்பெண்கள் அல்ல வாழ்க்கை....
பதிலளிநீக்குகொல்கத்தா பள்ளியின் கடிதம் உண்மையில் வாழ்த்த வேண்டிய ஒன்று...
ஆமாம் சகோ.
நீக்குகொல்கத்தா பள்ளி உண்மையில் அனுப்பியதா என்ற ஆராய்ச்சியை நான் செய்யவில்லை சகோ, உண்மையென்றால் போற்றுதலுக்கு உரியதே. கடிதத்தின் சாரம் அருமையாக இருக்கிறது என்பதால் பகிர்ந்தேன்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குமிகஅருமையாக விளக்கம் சொல்லியுள்ளீர்கள் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன். நன்றி
நீக்குஅட! இந்தியாவில் பள்ளியில் இப்படி ஒரு கடிதமா அருமை! இது எல்லா பள்ளிகளும் வெளியிடவேண்டும். நல்ல பகிர்வு சகோ.
பதிலளிநீக்குகீதா: குறிப்பாக தமிழ்நாட்டுப் பள்ளிகள், அதிலும் குறிப்பாக ஈரோடு, ராசிபுரம் பள்ளிகள் இதனைப் பார்க்க வேண்டும்.
அருமையான பகிர்வு.
நன்றி கீதா, அண்ணா. பள்ளி அனுப்பியதா என்று நான் சரி பார்க்கவில்லை அண்ணா.
நீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்கு