இயந்திரங்களுக்கே

கூட்டமாய்க் கட்டிடங்கள்
கூடிப்பேச மனிதரில்லை
நகர மயமாக்கல்
தண்ணீர் சூழாத் தீவுகள்!



~~~~~~~
பிள்ளையோடுப் போகிறேன் 
பெருமிதமாய்த் தான்வந்தார்
அடுக்கிவைத்தக் கூடுகளில் 
அடுத்தொருமுகம் காணாது 
கட்டிடக்காட்டில் மனிதரைத்தேடி
முடிவாய்ச் சொன்னார்
நம்மூருக்கேப் போகிறேன்
நகரம் இயந்திரங்களுக்கே!

Image: thanks Google

17 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஆஹா! வெளியிட்டவுடன் வந்துவிட்டதே உங்கள் கருத்து! :) மிக்க நன்றி சகோ

      நீக்கு
  2. அருமை சகோதரி.காடு நகரமனால் நாடு நரகம் தான் என்பது போல் இருந்தது.

    பதிலளிநீக்கு
  3. நறுக்கென்றே சுருக்கமாய் ஒரு கவிதை, எனக்கு நினைவில் வந்த திரை இசைப் பாடல் ….
    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
    அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா

    பதிலளிநீக்கு
  4. அதனால் தான் பல கிராமத்து மனிதர்கள் பழகிய இடத்தைவிட்டு நரங்களுக்கு வர தயங்குகிறார்கள் இல்லையா டியர்!

    பதிலளிநீக்கு
  5. நகரும் இயந்திரங்களுக்கே - நகரம்..
    பசுமை விரும்பும் இதயங்களுக்கு
    நகரம் - நரகம்.. நரகம்!..

    பதிலளிநீக்கு
  6. நறுக்கென்று சொல்லி ரசிக்க வைத்த அருமையான .கவிதை

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...