புத்தாண்டில் முன்னோக்கி

படம்: நன்றி இணையம்
ஆண்டிறுதி
திரும்பிப் பாரென்றனர்
பார்த்தேன்


ஆண்டிறுதி
திரும்பிப் பாரென்றனர்
பார்த்தேன்
சாதித்ததொன்றும் 
காண்கிலேன்
முந்தைய ஆண்டிறுதியிலும்
முந்தைக்கு முன்னும்
பின்னோக்கிப் பார்த்துப் பார்த்துப்
பின்கழுத்தில் வலி
சரி போகட்டும்
சரியானவை உடன்வரும் 
முன்னோக்கியே பார்க்கலாம்
முன்மொழிந்து வைக்கிறேன்



18 கருத்துகள்:

  1. நன்று... நேர் சிந்தனையே என்றும் நன்று...

    பதிலளிநீக்கு
  2. முன்னோக்கும் போது பின்னோக்கேன் என்கின்றீர்கள்.சரிதான் கிரேஸ். நல்லசிந்தனை தான். நல்லதையே முன்னோக்கி செல்ல புத்தாண்டின் நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. நாம் திரும்பி பார்க்ககும் ஒவ்வொரு நொடியும் நமது முன்னேற்ற பாதையில் தாமத்தை ஏற்படுத்தும் அதனால் நீங்கள் சொல்வது போல முன்னோக்கி பார்த்து செல்லுவோம்

    பதிலளிநீக்கு
  4. சென்றதைப் பற்றிக் கவலைப்படாமல் எதிர் வரும் காலத்தைப் பார்ப்போமாக!

    பதிலளிநீக்கு
  5. அனைத்தும் விரைவில் சரியாகிவிடும். இவ்வாண்டை நிறையாக்கிவிடலாம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா..நன்றி.
      உங்கள் உரையைக் கேட்க முடியாம‌ல் போயிற்று.

      நீக்கு
  6. வருங்காலம் - நன்மை
    தருங்காலம் என அமையட்டும்!..

    நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
  7. அருமையான பகிர்வு
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    பதிலளிநீக்கு
  8. இதுவும் கடந்து போகும்...கடந்தே போகட்டும்! எதற்குக் கடந்தவை. அதைத் திரும்பிப் பார்க்க வேண்டாம் ஆனால் கடந்தவை தந்த புடம் போட்ட அனுபவப்பாடங்களை மனதில் நிலை நிறுத்துவோம் ஏனெனில் அவை எதிர்வரும் காலத்திற்கு வழிநடத்தும். எப்போதும் அனுபவப்பாடங்களே மிகச் சிறந்த பாடம். கடந்த வருடத்துப் பாடங்களை மனதிற் கொண்டு புது வருடத்தை மகிழ்வோடு எதிர்கொள்வோம். நேர்மறை எண்ணத்தோடு முன் வைப்போம்!

    நல்ல வரிகள் சகோ/க்ரேஸ்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...