கூரை கழுவியபின்
வீதி சேரும் மழை;
கூட்டிப் பெருக்கும் குப்பை
வீதி முனையில் குவியும்;
வாய்ப்பிருந்தால் அதுவும்
ஆயாசமின்றி அண்டை நிலத்தில்!
தொல்லை இல்லை என்றே
பிழையாக எண்ணி
கொசுவிற்கும் நாற்றத்திற்கும்
கதவடைத்து விடலாம்
வெள்ளமென்று வரும்வரை
அள்ளிவந்துக் கொட்டும்வரை!
வெள்ளமென்று வந்தபின்
மழையைப் பழித்துவிட்டு
மறப்பது பெரும் பிழை!
மழைநீர் வடிகால் அதனுடன்
குப்பை மேலாண்மை
இரண்டும் முக்கியத்தேவை
உணர்ந்துநீ பிழை!
காலை வணக்கம் சகோ.உண்மை தான் இரண்டையும் உணர்ந்து வாழ வேண்டும்.அருமை சகோ.
பதிலளிநீக்குவணக்கம் வைசாலி. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
நீக்குமழைநீர் வடிகால் அதனுடன்
பதிலளிநீக்குகுப்பை மேலாண்மை
இரண்டும் முக்கியத்தேவை
உணர்ந்துநீ பிழை!
ரத்தினச் சுருக்கம்.. இன்றையத் தேவை இதுதான்..
ஆனாலும், உணர்ந்து கொள்வரோ - மக்கள்?...
வரிகளைச் சுட்டிப் பாராட்டியதற்கு மிக்க நன்றி ஐயா
நீக்குஅருமை அருமை
பதிலளிநீக்குநன்றி சகோ.
நீக்குதமிழகத்துக்கு மிகவும் தேவையான கவிதை .
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.
நீக்குநல்ல விளக்கம், தேவையான வரிகள்,,
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி
நீக்குபிழை..பிழை...
பதிலளிநீக்குதிருத்தாவிட்டால்
வாழ்வே ஆகும் பிழை! அருமையான கவிதைம்மா சுற்றுச் சூழல் கவிதைகள் என்றே ஒரு தொகுப்பு போடலாம் போல உள்ளதே! முயல்க! த.ம.1
ஆஹா! நன்றி அண்ணா
நீக்குஅடுத்த தொகுப்புபற்றி யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அண்ணனின் அருமையான யோசனை :-) மனமார்ந்த நன்றி அண்ணா
உணர வேண்டிய அவசியத்தை உணர்த்திய விதம் நன்று.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா
நீக்குநீங்கள் சொல்லுவது போல் உணர்ந்தால் பிழைக்கலாம்தான். ஆனால் வெள்ளம் வந்தும் மக்கள் உணர்ந்தார்கள் இல்லை என்பதுதான் நிதர்சனம். .குப்பை மட்டுமின்றி எந்த விதத்திலும் உணரவில்லை..என்பதுதான் கூடுதல் வேதனை...
பதிலளிநீக்குஆமாம் வேதனை தான் அண்ணா ... இன்னும் எத்தனைக் காலம் உணராமலிருப்பர் என்று வருத்தமாக உள்ளது.
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா/கீதா
சென்னை வெள்ளம் தந்த கவிதை!
பதிலளிநீக்குஅருமை!
த ம 3
ஆமாம் சகோ.. மறந்து விட்டார்களே என்ற வருத்தம். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
நீக்குகுப்பை மேலாண்மை- நல்ல சொல்லாடல்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா
நீக்குவெள்ளம் வரும் முன் அணைகட்டலாம் என அறியாதோருக்கு என்ன சொன்னாலும் ஏறாதுப்பா! நச் வரிகள்.
பதிலளிநீக்குஹ்ம்ம்ம் ஆமாம் நிஷா
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி
மழைநீர் வடிகால் அதனுடன்
பதிலளிநீக்குகுப்பை மேலாண்மை
இரண்டும் முக்கியத்தேவை
உண்மை சகோதரியாரே
எப்பொழுது உணரப் போகிறோமோ?
தம+1
அந்த ஏக்கம் தான் அண்ணா பலருக்கும்...
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி
தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல என்று சொல்வார்கள். அதைப் போல் வருமுன் காப்பதும் இல்லை... வந்தபின் கவனமாய் இருப்பதும் இல்லை.. எத்தனை முறை பாடங்கற்றாலும் பிழையைத் திருத்திக்கொள்ளாவிடில் கற்ற பாடத்தால் பயன்தான் என்ன? சிந்திக்கவைக்கும் பதிவு கிரேஸ்.
பதிலளிநீக்குசரியாச் சொன்னீங்க கீதமஞ்சரி. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிப்பா
நீக்குஆம் சகோ அனைவரும் உணர வேண்டிய பிழை
பதிலளிநீக்குதமிழ் மணம் 6
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ
நீக்குமழைநீர் வடிகால் அதனுடன்
பதிலளிநீக்குகுப்பை மேலாண்மை
இரண்டும் முக்கியத்தேவை
உணர்ந்துநீ பிழை!
உணர வேண்டிய உண்மை சகோதரி.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ
நீக்கு