சட்னி சாட்சி


அவசர வேளையில் அனுமதியின்றியே 
அத்துமீறி நுழையும் 
இலவச அடுமனை ஆச்சரியங்கள்!!
Image:thanks Google
 

அறியாமல் கைபட்டுச் சுழற்றிய மிக்சி
உறுதிசெய்தது ஐயமின்றி, வட்டச் சுழற்சியை!
தெறித்திருந்த சட்னி சாட்சி!!!!



Image:thanks Google
குளித்துக் காயவைத்துப் பட்டாய் மினுக்கும்
முடியைச் சரியாக அலசவில்லை என்று
மீண்டும் அனுப்பும் பாட்டி, சட்னி! :))))))))))))))))


தெறித்தக் குழம்பிலும்
முகிழ்க்கும் கவிதைகள்!

அட, அனுபவம் தான் போதிமரம் ஹாஹாஹா

Image:thanks Google

41 கருத்துகள்:

 1. ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா .... பதிவு அருமை.

  அக்னி சாட்சி போல ‘சட்னி சாட்சி’ தலைப்பு அதைவிட அருமை.

  பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :)))) உடன் வந்து ரசித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ஐயா

   நீக்கு
 2. எல்லா அனுபவங்களையும் ரசிப்பது என்பதும் ஒரு கலை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீராம்..வரமும் கூட. எல்லா வேளையிலும் அமைவதில்லை அப்படி.
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்ரீராம்

   நீக்கு
 3. சட்னி கொட்டி பட்னி யா கிரேஸ்!

  மிளகோ,காய்ந்தசிவப்பு மிளகாயோ மிக்ஸியில் தூளாககும் போது மூடி திறந்து பட்டு விசிறி அடிக்கும் பாருங்கள், எனக்கும் பல அனுபவம் உண்டு.

  என் மச்சாளின் கல்யாணத்துக்கு 500 பேருக்கு கேக் கொடுக்கணும் என கேக் செய்ய. அதுவும் பேரிச்சம் பழ கேக்..அவ சென்னைல இருந்து வந்து ஒரு மாதம்...தனக்கு கேக் பீட் செய்ய தெரியும் என சொன்னால் என்பதை நம்பி மூன்று கிலோ கேக் கலவை கிரிமை அடிக்க சொல்லி விட்டு விட்டு வர.. அவள் கேக் பீட் செய்யும் பீட்டரை சுத்துவதுக்கு பதில் கேக் கலவை இருந்த பாத்திரத்தினை சுத்தி வாழ்க்கையின் எல்லைக்கு கொண்டு வருவதாய் மேசையின் எல்லைக்கு கொண்டு வந்து.. அத்தனை கலவையுடன் பாத்திரம் தரையில் கொட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்! அதை ஏன் பா கேட்கிறிங்க! சட்னி போனால் பட்னி.. அதிலும் மறு நாள் விருந்தை வைத்து கொண்டு சட்னியானால் நாம் மொத்தமாய் சட்னி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா பட்னி எல்லாம் இல்லை நிஷா :))
   ஆஹா!!! அனுபவம் சட்னி செய்யுதே!!

   நீக்கு
 4. போதி மரம் தந்த போதைக்கவி நன்று சகோ
  தமிழ் மணம் 4

  பதிலளிநீக்கு
 5. உண்மைதான் சகோதரியாரே
  அனுபவம்தான் போதிமரம்
  தம+1

  பதிலளிநீக்கு
 6. அருமையான சட்னி அம்மா..அனுபவமே சிறந்த ஆசான்..சூப்பர்..

  பதிலளிநீக்கு
 7. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜெயசீலன்.

   நீக்கு
  2. உங்கள் ஆராய்ச்சி எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது?

   நீக்கு
  3. வெற்றிகரமாக 0th Review முடித்துவிட்டேன் mam ,,, போய்க்கொண்டே இருக்கிறது.. கண்டிப்பாக விரைவில் பகிர்கிறேன்..

   நீக்கு
 8. சட்டினி சாட்சி சிறியதாக இருந்தாலும் காரம் அதிகம் போல இருக்கே

  பதிலளிநீக்கு
 9. பட்டினியில் மட்டுமல்ல, சட்டினியிலும் கவிதை பிறக்கும் என்பதனைச் சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 10. ஹஹஹ் சட்னி சாட்சி!!உண்மைதான் அது தந்த அனுபவம் இப்போது கவிதை வடிவில்!!!! அருமை சகோ/க்ரேஸ்...பாருங்க எந்த மாதிரி அனுபவமெல்லாம் அழகான பதிவுகளாகின்றது!!!!

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

நான் அமைதி காக்கிறேன் - கவிதை உறவு இதழில்

நன்றி கவிதை இதழ் ஆசிரியர் குழுவிற்கும் என்னைக் கவிதை எழுதக் கேட்ட அன்புத்தோழி புனிதஜோதி அவர்களுக்கும்!