ஹார்வர்டு தமிழ் இருக்கை , வேண்டும் உங்கள் கை!


"தேனால் செய்தஎன் செந்தமிழ்தான்
திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்!" 

பாவேந்தரின் வரிகள் உண்மையாகட்டும்! 

தெளிதேனினும் இனிய என்தமிழ் 
திக்கெட்டும் போற்றப்படட்டும்!
புகழ்பெற்றப் பல்கலைக் கழகம் 
அமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைக்கழகம்
பெருந்தலைவர்கள் வந்தனர்அங்கிருந்து 
ஆய்வுகளுக்கோ மிகமதிப்புண்டு
செம்மொழி அங்கு வீற்றிருந்தால்
எத்துனை இனிமை! எத்துனை பெருமை!
கரம் சேர்ப்பீர்! நம் தமிழுக்கு!
 
உலகப் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் சங்கத்தமிழ் இருக்கை நிறுவுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் நிர்வாகக் குழுவில் இருக்கும் திருமிகு.வைதேகி ஹெர்பர்ட் அவர்கள் என்னை அழைத்துச் சொன்னபொழுது மிகவும் மகிழ்ந்தேன். தமிழ் படிக்கவும் நம் இலக்கிய இனிமையை உலகினர் அனைவரும் அறியவும் ஆய்வுகள் செய்யவும் இந்த இருக்கை வழிசெய்யும்.  மேலுள்ள  இணைப்பில் சென்று பார்த்துத்  தமிழராய் உங்கள் ஒத்துழைப்பைத் தாருங்கள். உங்களால் முடிந்த நன்கொடையை அளியுங்கள்! சிறு துளியும்...ஒரு துளியும் பெரு  வெள்ளத்திற்கு வழி செய்யும்! உங்கள் வலைத்தளங்களிலும் முகநூலிலும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இந்தியாவில் இருந்து paypal மூலம் பணம் அனுப்பலாம். வேறு வழிகளுக்கான தகவல் தெரிந்தவுடன் பகிர்கிறேன்.

ஹார்வர்டு தமிழ் இருக்கையின் முகநூல் பக்கத்தின் இணைப்பு இது.
தேன்மதுரத் தமிழோசை உலகமெலாம் பரப்பிடுவோம்!
நன்றி!

7 கருத்துகள்:

 1. பரவட்டும் தமிழ். நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 2. உலகம் முழுவதும் பரவட்டும் அன்னை தமிழ்! பகிர்விற்கு மிக்க நன்றி..சகோ/க்ரேஸ்

  பதிலளிநீக்கு
 3. அருமையான பகிர்வு

  உங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்!
  http://www.ypvnpubs.com/2016/04/blog-post_18.html

  பதிலளிநீக்கு
 4. நல்ல முயற்சி! வெல்லட்டும்!
  த ம 2

  பதிலளிநீக்கு
 5. தகவலுக்கு நன்றி. அவர்கள் ஃபேஸ்புக் பக்கத்தை Book mark செய்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

நான் அமைதி காக்கிறேன் - கவிதை உறவு இதழில்

நன்றி கவிதை இதழ் ஆசிரியர் குழுவிற்கும் என்னைக் கவிதை எழுதக் கேட்ட அன்புத்தோழி புனிதஜோதி அவர்களுக்கும்!