இவர் கொள்கை என்ன?
அவர் கொள்கை என்ன?
சமூகத் தேவை என்ன?
என்னிடம் இருப்பது ஓர் ஓட்டு
எண்ணத்தக்க ஓர் ஓட்டு
இவரா? அவரா?
கூட்டணிகள் நன்மையைக் கூறுவதற் கில்லையே
ஓட்டைத் தரமான ஓர்வேட்பாளர் பெற்றால்
செய்தியொன்று சொல்லும்! தெளிவாரோ மக்களும்
உய்வுதரும் ஆயுதம்தம் ஓட்டு!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஓட்டுக்கு மதிப்பு போய் நீண்ட நாட்களாகி விட்டன. 200 ரூபாய்க்கும், குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும் விற்கப்படுகின்றன! ம்ம்ம்...
பதிலளிநீக்குவருத்தம்தான் ஸ்ரீராம். இந்நிலை மாறவேண்டும்..
நீக்குநன்றி
கட்சி பார்க்காமல், ஜாதி பார்க்காமல், மதம் பார்க்காமல், வேட்பாளர் நல்லவரா என்று மட்டுமே பார்த்து வாக்களித்தால் மட்டுமே ஓட்டு உய்வு தரும்!
பதிலளிநீக்குத ம 3
ஆமாம் சகோ.
நீக்கு'தரமான ஓர்வேட்பாளர்'
நன்றி.
மக்கள் சிந்திக்கட்டும் யாருக்கு ஓட்டு என்று. கவிதை அருமை.
பதிலளிநீக்குதெளிவாரோ மக்களும்??!! நல்ல கேள்வி க்ரேஸ்! ஆனால் பாருங்கள்..மக்கள் செலக்டிவ் அம்னீஷியாவில் இருப்பது போல்தான் தெரிகிறது. கூட்டணி பயமுறுத்துகிறது...சாதி மதம் கட்சி சும்மா பிடித்த ஹீரோ என்றெல்லாம் பார்த்து ஓட்டுப் போடாமல் நல்ல வேட்பாளர் என்று பார்த்து அவர் சுயேச்சையாக இருந்தாலும் சரி ஓட்டுப் போட வெண்டும். அதுதான் சிறந்த ஜனநாயகம் நமது ஓட்டின் மதிப்பும்.
பதிலளிநீக்குதவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வலையின் பக்கமே வர இயலாத நிலை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன் இனி தொடர்வேன் சகோதரியாரே
பதிலளிநீக்குமக்கள் தெளிவு
பதிலளிநீக்குபோடும் ஓட்டில்
பளிச்சிடுமே!