பதிவர்கள் பல விதம்! ஒவ்வொருவரும் ஒரு தனித்துவம்! சிலரைத் தொடரலாம், பலரை அறியாமல் இருக்கலாம். நாம் அறிந்தவரை பலரை அறியாதவர்களுக்கு அறிமுகப் படுத்தினால் பலரை அறியாமல் இருப்பது சிலரை அறியாமல் இருப்பதாகக் குறையும் அல்லவா? குழப்ப வேண்டும் என்று நினைத்துக் குழப்பவில்லை, குழப்பவில்லை என்று சொல்லிக் குழப்பவும் இல்லை. குழம்பிக் கிளம்பிப் போய்விடாமல் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்று விழைந்து விளம்புகிறேன். வாசியுங்கள், நான் குழப்பாமல் கிளம்புகிறேன்.
தொடரும் தொடர் பதிவர்கள் என்ற தலைப்பில் திருமிகு.முத்துநிலவன் அண்ணா மூத்த மற்றும் புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அதைப் போன்று சிலரை அறிமுகப்படுத்த என்னையும் அழைத்து இருக்கிறார்கள். உடனே செய்ய ஆசைப்பட்டாலும் இயலாததால் தாமதமாக இதோ இப்பொழுதுதான் பதிவிடுகிறேன். அண்ணா என்னை மன்னித்துப் பொறுத்தருள்க.
தொடரும் தொடர் பதிவர்கள் என்ற தலைப்பில் திருமிகு.முத்துநிலவன் அண்ணா மூத்த மற்றும் புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அதைப் போன்று சிலரை அறிமுகப்படுத்த என்னையும் அழைத்து இருக்கிறார்கள். உடனே செய்ய ஆசைப்பட்டாலும் இயலாததால் தாமதமாக இதோ இப்பொழுதுதான் பதிவிடுகிறேன். அண்ணா என்னை மன்னித்துப் பொறுத்தருள்க.
- பாரதி பயிலகம் என்ற தளத்தில் திருமிகு.கோபாலன் அவர்கள் பாரதியார் பாடல்கள், மழலைப் பாடல்கள், ஆன்மிகம் என்று பதிவு செய்தாலும் பாரதி இலக்கியப் பயிலகம் என்று தனியாக ஒரு தளத்தைப் பாரதி பற்றிய கட்டுரைகள் மற்றும் பாடல்களுக்காகவே எழுதி வருகிறார்.
- திரைப்படப் பாடல்களை வகை வகையாகக் கேட்டு ரசிக்க ஆதி வெங்கட் அவர்களின் ரசித்த பாடல் தளம் கைகொடுக்கிறது. "புத்தகங்கள்என்று சொல்லும் இவரது மற்றுமொரு தளம் கோவை2தில்லி.
என் நட்புக்கான
பாலங்கள்!" - பிரபல எழுத்தாளர் வித்யாசுப்ரமணியம் அவர்களின் தளம் கதையின் கதை.
- சாதாரணமானவள் என்று சொல்லிக்கொண்டு அருமையான பதிவுகளைக் கொண்டிருக்கும் தளம்.
- கவிதைகள், கதைகள் என்று கலக்குவதோடுப் போட்டிகளும் நடத்தி தமிழ் வளர்க்க உழைக்கும் சகோ ரூபனின் தளம் ரூபனின் எழுத்துப் படைப்புகள்.
- புத்தர் சிலைகளைத் தேடிக் கண்டுபிடித்துப் பெளத்த மதத்தின் வரலாற்றையும் தமிழக வரலாற்றையும் அறிந்து கொள்ள உதவும் சிறப்பான தளம் திருமிகு.டாக்டர்.பி.ஜம்புலிங்கம் ஐயா அவர்களின் தளம் சோழ நாட்டில் பெளத்தம்.
- எழுத்திற்கு வயது தடையல்ல என்று உணர்த்தும் அன்பு ஐயா புலவர் இராமானுசம் அவர்களின் தளம் புலவர் கவிதைகள்.
- தமிழ் மறை தமிழர் நெறி என்ற சுப்புத் தாத்தாவின் தளம்.
எழுத எழுத பல பதிவர்கள் நினைவிற்கு வருகிறார்கள். இருந்தாலும் நீளம் கருதியும் மற்றப் பதிவர்கள் அறிமுகப் படுத்தவும் நிறுத்திக் கொள்கிறேன்.
இனி இளைய பதிவர்கள் சிலரைப் பார்ப்போம். பதிவர்கள் இளையோராய் இருந்தாலும் பதிவுகள் ஆழமானவை!
- எண்ண அலைகள் சங்கமிக்கும் கரை - கடற்கரை! விஜயன் துரைராஜ் அவர்களின் தளம். கலாமகன் என்று பெயர் மாற்றிக்கொண்டுள்ளார்.
- தம்பி வெற்றிவேல் சிறுவயதில் வரலாற்றுப் புதினங்கள் எழுதும் ஆசிரியராகிவிட்டார். இவரின் வாசித்தலும் எழுத்தும் மிகவும் ஆழம். இவரின் தளம் இரவின் புன்னகை. வரலாறும் இலக்கியமும் காதலுடன் புன்னகைக்கும் தளம்.
- குட்டிப் பதிவர் நிறைமதியின் பதிவு ஆஹா! என்று சொல்ல வைக்கும். அவரின் தளம் மைதிலியின் புன்னகை.
- ஓடி விளையாடு பாப்பா தளத்தில் எழுதும் சக்தி கவிதைகள், கட்டுரைகள், புகைப்படங்கள் என்று விதம் விதமாக வெளுத்து வாங்குகிறார்.
- இவள் சின்னவளாம், பதிவுகளை வாசித்துப் பாருங்கள்..சின்னவள் எவ்வளவு பெரிய கருத்துகள் உடையவள் என்று தெரியும்.
- இந்தக் குட்டிப்பெண் ரோஷினி என்ன அழகாய் வரைகிறாள்! வெளிச்சக் கீற்றுகள் சென்று ஒயிலாட்டமும் காவடியாட்டமும் கண்டுகளியுங்கள்.
- இறுதியாக ஆங்கிலத்தில் ஒன்று பகிர்ந்தால் கோபித்துக் கொள்ள மாட்டிர்கள் தானே? இவரு சுப்ரீம் ஓவர் லார்டாம். என்னமாத்தான் எழுதுகிறார் என்று பார்த்துச் சொல்லுங்க. இவர் அம்மாவின் தளம் தேன் மதுரத் தமிழ். :)
இங்கு நான் குறிப்பிட்டவர்கள், வாசிப்பவர்கள் என்று யாராயினும் தொடர விருப்பம் உள்ளோர் தொடருங்களேன். நன்றி!
Answer is BLOG PLEASE :) Image:thanks Internet |
வாழ்த்துகள் அனைவருக்கும். முதிய பதிவர்களுக்கும் ஒரு லிஸ்ட் கொடுத்திருக்கலாம். :)))
பதிலளிநீக்குதம +1
இருக்கிறார்களே ஸ்ரீராம்.. நிறைய பேரை அறிமுகப்படுத்த ஆசைதான்.
நீக்கு:)
நன்றி சகோ
அருமையான அறிமுகங்கள் சகோ.இதில் பாதியை தொடர்க்கிறேன் மீதியுள்ளவற்றையும் தொடர்கிறேன் சகோ.நன்றி.
பதிலளிநீக்குநன்றி வைசாலி
நீக்குஆஹா. எங்கள் வலைப்பூக்களையும் இங்கே குறிப்பிட்டமைக்கு நன்றி கிரேஸ். இரண்டு வலைப்பூக்களில் பகிர்ந்து பல மாதங்கள் ஆகிவிட்டன..
பதிலளிநீக்குஎனக்கு மகிழ்ச்சி அண்ணா.
நீக்குஆமாம், வேலை, படிப்புகளுக்கிடையே நேரம் கிடைக்கவேண்டுமே..
வாழ்த்துகள் அனைவருக்கும்...
பதிலளிநீக்குஅடியேனும் தொடர வேண்டும் என்று பலரின் வேண்டுகோள் ... பார்ப்போம்...
நன்றி அண்ணா.
நீக்குஆமாம் தொடருங்கள் அண்ணா..
தங்கை கிரேசின் வேண்டுகோளை நான் வழிமொழிகிறேன்.
நீக்குவலைச்சித்தர் அறிமுகப்படுத்தினால் (வசிட்டர் வாயால் பிரம்மரிஷி?) அதைவிட வேறு விளம்பரம் வேண்டுமா என்ன? அவசியம் நாங்கள் அறியாத இளைய மற்றும் மூத்த பதிவர்களை அறிமுகப்படுத்தி “தொடரும் தொடர் பதிவர்கள்” பகுதியை இன்னும் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுகிறேன் அய்யா!
அருமை
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குஅனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குஅருமையான வலைப்பூக்கள் க்ரேஸ். அனைவருக்கும் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குநன்றி கீதா, அண்ணா
நீக்குஅனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குஅனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குhttps://kovaikkavi.wordpress.com/
நன்றி சகோதரி
நீக்குநீ மட்டுமா தாமதம்? நானும்தான் தாமதமாக வருகிறேன். But late is better than never அல்லவா? உண்மையில் நானறியாத பல நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிடா. இதுக்காகத்தான் உன்போலும் தேடல் உள்ள பதிவர்களை இதில் இழுத்து விட்டேன். அருமையான அறிமுகங்கள். அவசியம் அவர்களை இனித் தொடர்வேன் பா! நன்றியும் வாழ்த்துகளும்.த.ம.4
பதிலளிநீக்குThanks akka :)
பதிலளிநீக்குஅறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்மா
பதிலளிநீக்குஅனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஆஹா! நம்ம படை பட்டாளமே இங்க இருக்கே!!! என் மருமகள்கள், மருமகனோடு நிறை குட்டியும் உங்களைபோன்ற ஆழ்ந்த தமிழ் பற்றாளர் அறிமுகம் செய்திருப்பது மிக்க மகிழ்ச்சி டியர்!! நன்றி! நன்றி!நன்றி!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குசகோதரி
பலஇணைய உறவுகளின் பதிவோடு என்னுடைய வலைத்தளத்தையும் அறிமும் செய்தமைக்கு நன்றி...அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அண்மையில் விசுவின் படம் ஏதும் பார்த்தீர்களா? பதிவின் ஆரம்ப வரிகளில் டைரக்டர் விசுவின் வாடை. நீங்கள் அறிமுகம் செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். சிலருடைய வலைத்தளங்கள் எனக்கு புதிது. சென்று பார்க்க வேண்டும்.நன்றி.
பதிலளிநீக்குஅருமையான வலை தளங்களைஅறிமுகம் செய்துள்ளீர்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரியாரே
நன்றி..அம்மா..
பதிலளிநீக்குதொடர்பதிவர்களில் அநேகமாக எல்லாராலும் சின்னவளும்,சக்தியும் கவர்ந்திருக்கிறார்கள் என்பதில்.. சான்றோன் எனக்கேட்ட தாயின் நிலையில் இருக்கிறேன்..
அவர்களின் வாசிப்பின் அடர்த்தி இன்னும் பதிவுகளில் வரவில்லை என்றே நினைக்கிறேன்..
ஆனாலும் பள்ளி,கல்லூரியின் தேர்வுகளில் சிக்கியிருக்கிறார்கள்...
மீண்டும் எழுத வருவார்கள்..
மற்ற அறிமுகப்படுத்தியிருக்கும் பதிவர்களும்..புதியவர்களே..
வாசிக்கிறேன்..நன்றி அம்மா...
என் தளம் அறிமுகப்படுத்தப்பட்டமையறிந்து மகிழ்ச்சி. நன்றி. தங்களைப் போன்றோரின் ஊக்கத்துடன் பதிவுப்பயணமும், ஆய்வுப்பயணமும் தொடரும்.
பதிலளிநீக்குசிலதளங்கள் எனக்கு புதியவை அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு