கவிதை எழுதப் போகிறேன்
என்றுதான் எழுந்தேன்
சில மணிநேரங்களுக்குப் பின்
உணவாய்...
துலக்கியப் பாத்திரங்களாய்...
பளிச்சிடும் தரையாய்...
மடித்தத் துணிகளாய்...
வகுப்பில் விட்டு அழைத்துவந்தப்
பயணங்களாய்...
சீராகவெட்டப்பட்டச் செடிகளாய்...
மளிகைச் சாமான்களாய்...
இடையிடையே வெட்டிப்பேச்சாய்...
இதுவுமாய் அதுவுமாய்...
பலவடிவங்களில்
என் கவிதை...
எழுத்தில் மட்டும்
காணவில்லை!
கவிதை.. கவிதை..
பதிலளிநீக்குவாழும் வாழ்க்கையே
வண்ணமிகு கவிதை!..
பல நாட்கள் கழித்து நான் வந்தாலும் உடனடியாகப் படித்துக் கருத்திட்டு ஊக்குவிக்கும் வலையுலக உறவுகள் இருப்பது பெரும்பேறு! உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஐயா.
நீக்குவாழ்க்கையை அழகான கவிதையாக்கி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்
பதிலளிநீக்குநன்றி சகோ.
நீக்குவணக்கம் .
பதிலளிநீக்குநாங்கள் காண்கிறோம்.
தம
தொடர்கிறேன்.
நன்றி.
வணக்கம் அண்ணா. உங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி.
நீக்குகருத்திற்கு மிக்க நன்றி அண்ணா.
My life is my message ... says Gandhi
பதிலளிநீக்குMy life is my poem ... says who?
:)
நீக்குthanks anna
கவிதையை ரசித்தேன். அருமை.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குji your immense responsibilities in your daily life and the WAY you carry out....
பதிலளிநீக்குis more than your KAVITHAIGAL.......
Thank you Nat Chander
நீக்குஅருமை
பதிலளிநீக்குநீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களை வலையில்
சந்திக்கின்றேன் சகோதரியாரே
தொடர்ந்து எழுதுங்கள்
ஆமாம் அண்ணா..மிக்க நன்றி.
நீக்குகவிதையாய் வாழ்கிறீர்கள்.. அப்படி சொல்லிதான் நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது. நானும் இதுபோல் முன்பொன்று எழுதினேன். எல்லாக் காலங்களிலும் கவிதையைக் காட்டிலும் கடமைகளே முன்னிற்கின்றன நம்மைப் போன்றோர்க்கு. :)))
பதிலளிநீக்குஆமாம் கீதமஞ்சரி..முட்டிமோதித் தான் எழுத வேண்டியிருக்கிறது. நீங்களும் இப்படியொன்று எழுதியிருக்கிறீர்களா? மனமொத்த தோழிகள் என்பது உறுதியாகிறது :))
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றிபா.
எழுத்தை விட, செயலில் கவிதை தெரிவது வரவேற்கத்தக்கதுதானே!
பதிலளிநீக்குஆமாம்..ஆனால் எழுத்தாகவும் வேண்டுமே. :)
நீக்குநன்றி ஸ்ரீராம்
உண்மைதான் க்ரேஸ். பல சமயங்களில் இப்படித்தான் ஆகிப் போகிறது. அதையே தாங்கள் அழகிய கவிதையாக்கிவிட்டீர்கள்! அதுவே ஒரு வெற்றிதான் இல்லையா...
பதிலளிநீக்குகீதா
ஆமாம் கீதா, மற்ற கடமைகளே முன் நின்றால், அவற்றை இங்கு கொண்டுவந்துவிடலாம் தானே:-)
நீக்குநன்றி கீதா..விட்டுப்போயிருந்தாலும் வந்து வாசித்துக் கருத்திடும் அன்பில் நெகிழ்கிறேன்.