Image:thx Internet |
கரைக்குவர நினைக்கும்போதெல்லாம்
ஓரலை உள்ளிலிழுக்கும்
புது திசை...புதுப் பார்வை
வித்தியாசமான மீன்கள்
விதவிதமான சிப்பிகள்
கையில் எடுத்துக் கொண்டு
கரைவரப் பார்ப்பேன்..
மற்றொரு அலை
சிறுகுழந்தையாய்க் கைகளை
இறுக்கிப் புதையல்
வைத்திருந்ததைப் பார்த்து
சிரித்தாள்
கடல்மங்கை
அலைக்கரம் ஒன்றால் தட்டி
சிலவற்றைப் பறித்துக் கொண்டாள்
இருப்பதை
இன்னும் இறுக்கிக்கொண்டு
கரையைப் பார்த்தேன்..
அலைக்கரம் அசந்தநேரம்
கரைசேர்ந்தேன்..
இனி கைபிரித்து
ஒவ்வொன்றாய்ப் பார்ப்பேன்
மணலும் ஈரமும் துடைத்து
அழகாய்
பார்வைக்கு வைப்பேன்
பாருங்கள் என் புதையலென்று
சிறுகுழந்தையாய்ப் புன்னகைத்து!
உங்களின் படைப்பை காணாததால் தமிழே தற்கொலை பண்ணிக் கொண்டதோ என்று நினைத்தேன் ஆனால் உங்கள் பதிவை கண்டதும் அது இன்னும் உங்கள் கவிதைகளால் சுவாசித்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி
பதிலளிநீக்குஆஹா..இனிய பின்னூட்டத்திற்கு நன்றி சகோ
நீக்குநாங்களும் ரசிக்க ரெடியாகிறோம்!
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
நீக்குதங்களின் பதிவு கண்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டன சகோதரியாரே
பதிலளிநீக்குமகிழ்ந்தேன்
ஆமாம் அண்ணா..பல காரணங்கள்..
நீக்குநன்றி
நானும் அலையோடு பயணித்தேன் சகோதரி....
பதிலளிநீக்குரொம்ப நாளாச்சு... இனித் தொடர்ந்து எழுதுங்கள்...
மகிழ்ச்சி.
ஆமாம் சகோ..அப்படித்தான் நினைத்திருக்கிறேன். மிக்க நன்றி
நீக்குநீண்ட நாட்களுக்குப் பின்னர் இனியதோர் பதிவு..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
நன்றி ஐயா
நீக்குஇனி கைபிரித்து
பதிலளிநீக்குஒவ்வொன்றாய்ப் பார்ப்பேன்
மணலும் ஈரமும் துடைத்து
அழகாய்
பார்வைக்கு வைப்பேன்
பாருங்கள் என் புதையலென்று
சிறுகுழந்தையாய்ப் புன்னகைத்து! // :) -aavee
:) நன்றி ஆவி
நீக்குஅருமை சகோ ரசித்தேன் வரிகளை.....
பதிலளிநீக்குத.ம. 2
நன்றி சகோ
நீக்கு// சிறுகுழந்தையாய்ப் புன்னகைத்து...//
பதிலளிநீக்குஅடியேனும்...!!!
நன்றி அண்ணா
நீக்குகோடை விடுமுறையில் இந்தியா போய்விட்டீர்களா? ரொம்ப நாள் தேன்மதுர தமிழையே காணோம்?
பதிலளிநீக்கு***கரைக்குவர நினைக்கும்போதெல்லாம்
ஓரலை உள்ளிலிழுக்கும்**
பதிவெழுத நினைக்கும்போதெல்லாம் உங்களையும் பலரையும் ஏதோ ஒரு "அலை" இழுத்துவிடுகிறது போலும் னுதான் எனக்கு உங்க கவிதை தோணுது. எப்படியோ அலையோடு போராடி "புதையல்" லோட வந்துட்டீங்க. சந்தோஷம். :)
ஆமாம் வருண்..இந்தியா சென்றுவந்தேன். அதோடு வேறு காரணங்களும்..இனித்தொடர்ந்து எழுத நினைக்கிறேன்..பார்க்கலாம்.
நீக்குஹாஹா அப்டியும் இருக்கலாம்..வேறும் இருக்கலாம்.. :))
நன்றி
வெகு நாட்களுக்குப் பிறகு...உங்கள் இந்தியப் பயணம் நன்றாக அமைந்திருக்கும் என்று நம்புகின்றோம்...
பதிலளிநீக்குஉங்கள் புதையலைக் கண்டு புன்னகைக்கின்றோம்...வருக மீண்டும் உங்கள் புதையலுடன்...
ஆமாம் அண்ணா..
நீக்குநன்றாக இருந்தது. உங்கள் விவேகானந்தர் குறும்படம் பார்த்தேன்..கலக்கிட்டீங்க :)) வாழ்த்துகள் அண்ணா.
மிக்க நன்றி.
நெடுநாள் கழித்து கண்டதில் மகிழ்ச்சி. அருமையான கவிதை.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா
நீக்குநீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகவிதை அருமை. பாராட்டுகள்.
ji i recollect that john newtons famous quote... i pick up here and there a few pebbbles in the seashore
பதிலளிநீக்குwhile the OCEAN OF TRUTH lioes undiscovered before me....