காட்டுத்தீ... காட்டுத்தீ
எங்கோ என்று செய்திவரும்
ஐயோ!
மரங்கள்..!! மிருகங்கள்!!
பறவைகள் பறந்திருக்குமா?!!
மோதிடும் எண்ண அலைகள்!
ஆனால் இன்று?
சென்றமாதம் மலையேறி
வியந்து ரசித்த
காடழிவதின் வெப்பம்
கண்ணில் உணர்கிறேன்
எரிச்சலும் புகைமூட்டமுமாய்!
குளிருக்குத் தயார்செய்த
அணில் என்னவாயிருக்கும்?
மூச்சு முட்டும் வேளை
எண்ணுகிறேன்
கடவுளே, முதியவரை
முடியாதவரைக் காப்பாற்று!
தளிர்க்கும் நுரையீரல்கள்?
உலக வெம்மை
இப்படிச் சுடுகிறதே!
அலறும் தீயணைப்பு வண்டிகளும்
அவசர உதவி வாகனங்களும்
ஹெலிகாப்டர்களும்
தீயணைக்கப் போகிறதோ
மூச்சுத் திணறிய யாரையேனும்
காப்பாற்றப் போகிறதோ!
எதுவாயினும்...
போதிய வண்டிகள் இருக்கட்டும்
மருத்துவ வசதிகள் இருக்கட்டும்
காற்றும் கொஞ்சம் அடங்கட்டும்
காட்டுத்தீ முற்றும் அடங்கட்டும்!
Ref: http://www.11alive.com/news/local/wildfire-spreads-10000-acres-in-n-georgia/350760895
எண்ணத்தில் மோதும் இந்த வேதனை எண்ணங்கள் கஷ்டப்படுத்தும்தான்.
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம்..நன்றி
நீக்குகாட்டுத்தீ விரைவில் அடங்கும் என்று நம்புவோம்....
பதிலளிநீக்குஇன்னும் எரிகிறது சகோ :(
நீக்குநன்றி
500 1000 செல்லாது என்பதை காட்டுத்தீயாக உபமானித்த கவிதையை வியக்கிறேன்.
பதிலளிநீக்கு--
Jayakumar
ஓ அப்படியும் எடுத்துக்கொள்ளலாமோ! நன்றி சகோ.
நீக்குஆனால் நான் உண்மையாக காட்டுத்தீ பற்றி எழுதினேன்.
a real CONCERN for all...good...
பதிலளிநீக்குthanks Nat Chander
நீக்குகாட்டுத்தீயில் இயற்கையாய் அழிவதை விட, செயற்கையாக வைக்கப்படும் மற்றும் வெட்டப்படும் அழிவுதான் அதிகம் பா! என்றாலும் உன் கவிதையில் பற்றிய வெப்பம் உறைக்கத்தான் செய்கிறது.
பதிலளிநீக்குஉண்மைதான் அண்ணா.. செயற்கை அழிவின் தாக்கமே இயற்கையாகவும் வந்துவிடுகிறது.
நீக்குநன்றி அண்ணா
அருமையான வரிகள்
பதிலளிநீக்குஉலகத் தமிழ் வலைப்பதிவர்கள்
https://plus.google.com/u/0/communities/110989462720435185590
நன்றி ஐயா.
நீக்குஇணைப்பிற்கு நன்றி, இணைவதற்குக் கேட்டுள்ளேன்.
காட்டுத் தீ ரொம்ப நல்லாயிருக்கு...
பதிலளிநீக்குஆனால் காடு அழிவது என்பது வேதனைக்குரியது...
நன்றி சகோ.
நீக்குஆமாம்..நான்கு மாநிலங்களில் சுமார் 40 இடங்களில் இன்னும் எரிகிறது.. :(
த.ம.2
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குநினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது...
பதிலளிநீக்குஆமாம்..இன்னும் எரிகிறது அண்ணா.
நீக்குஉங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி. நன்றி அண்ணா.
காட்டூத்தீ பற்றினால் விடாது! பதற்றம் அதிகரிக்கிறது!
பதிலளிநீக்குகருத்திற்கு நன்றி சகோ.
நீக்குமனித தவறால் அழியும் இயற்கை ..
பதிலளிநீக்குவருத்தம்தான்
உண்மை அண்ணா!
நீக்குநன்றி
மனிதர்களை விட ஐந்தறிவுகளுக்கு சில விஷயங்களில் நுண்ணுணர்வு அதிகம்!அணில் தப்பித்து இருக்கும் என்று நம்புவோமே :)
பதிலளிநீக்குத ம +1
நம்புவோம் சகோ. :)
நீக்குநன்றி
மனிதனின் சுயநலத்தால் ஏற்படும் விளைவு! பாவம் அவை! மனம் வெம்புகிறது அந்த அணில் என்னாயிற்றோ என்று..கண்டிப்பாகத் தப்பித்திருக்கும்..
பதிலளிநீக்குஆமாம் அண்ணா...
நீக்குஅணில் தப்பியிருக்குமோ தெரியவில்லை. ஆனால் மற்றொரு மாநிலத்தில் மக்களும் வீடுகளும் தீக்கிரையாகினர்.. :(