பேசும் மௌனம்


விதையின் மௌனம்
மரமாய்
சிப்பியின் மௌனம்
முத்தாய்

மலரின் மௌனம்
கனியாய்  
கற்துகளின் மௌனம்
கூழாங்கல்லாய்
புழுக்கூட்டின் மௌனம்
பட்டாம்பூச்சியாய்
என்று பலவிதமாய்ப்
பேசும் மௌனம்
நலமார்ந்த
இயற்கையின் மௌனம்!

25/4/2016 அன்று தினமணி கவிதைமணியில் வெளிவந்திருக்கும் இந்த என் கவிதையின் இணைப்பு இதோ.

21 கருத்துகள்:

  1. ரசித்தேன்
    வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தம +1

    பதிலளிநீக்கு
  2. மவுனத்தின் ரகசியம்! சகோதரி அவர்களுக்கு எனது மே தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. மௌனமாய் ரசித்தேன் சகோ வரிகளை...
    தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
  4. வாக்காளர்களின் மௌனம் மாற்றம்... அடச்சே! தமிழ்நாட்டில் இப்ப தேர்தல் நேரமா? அதுதான் எல்லாம் அப்படியே வருது! கவிதை நல்லா இருக்கும்மா.. (எல்லாக்கவிதையும் சேர்த்து தொகுப்பாக்கியாச்சா?)

    பதிலளிநீக்கு
  5. செம! மிக மிக ரசித்தோம்..சகோ/க்ரேஸ்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...