செல்மா


Image: thanks Google
 
   செல்மா - அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் அலபாமா ஆற்றின் கரையில் அமைந்த நகரம். அமெரிக்க சிவில் வாரின் போது 1865இல் இங்கு தான் கொடூரமான இனவெறியனும் கான்பெடரெட் படையின்  தளபதியுமான நேதன் பெட்போர்ட் பாரெஸ்ட் (Nathan Bedford Forrest) தோல்வியைத் தழுவினான்.


Image: thanks Google

       இந்த வெற்றியை வருடந்தோறும் வெளியூரிலிருந்து வந்து பலர் கொண்டாடினாலும் செல்மாவின் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கொண்டாடவில்லை. நகரின் வெளியே ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வீட்டுவசதித் திட்டம் தளபதி நேதனின் பெயரிலேயே பல ஆண்டுகள் இருந்தது. கூ க்ளக்ஸ் க்ளானின் (Ku Klux Klan1) மேலான தலைவராக இருந்தவராயிற்றே!
       கூ க்ளக்ஸ் க்ளான் (KKK) இன அடிமைத்தனம் ஒழிக்கப்பட சட்டம் (Civil Rights Act of 18662) இயற்றப்பட்ட பின்னும் இனவெறியையும் அடிமைத்தனத்தையும் தொடர 1866இல் உருவாகியக் குழுவாகும். அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்களை அச்சுறுத்தி மீண்டும் அடிமையாக இருக்க நிர்பந்தப்படுத்தியது இக்குழு. கொடூரமான முறையில் துன்புறுத்தியும் உயிர் கொலை செய்தும் அச்சுறுத்தியது இந்த குழு. (இன்றும் KKK குழுவினர் இருக்கிறார்களாம். அடிமைத்தனத்தை ஆதரித்த கான்பெடரெட் படை வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இவர்கள்). தோட்டம் மற்றும் நில உரிமையாளர்களும் இதில் இணைந்திருந்தனர். ஆக, குடியுரிமைச் சட்டம் அமலாக்கப்பட்டபிறகும் (Civil Rights Act of 1866) முழுமையான விடுதலையை ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அடையவில்லை.
       உணவகங்களில், பேருந்துகளில், பள்ளிகளில், வழிபாட்டுத் தளங்களில் என்று பொதுவிடங்களில் ஒதுக்கப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு ஓட்டுரிமையும் கிடைக்காமல் இருந்தது. வாக்காளர் பட்டியலில் இடம்பெற விண்ணப்பித்த ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வாக்காளர் வரி விதித்தும் கல்வியறிவுச் சோதனைகள் நடத்தியும் அவர்களின் வாக்காளர் பதிவைத் தடுத்தனர். பதிவாளர்கள் கேட்ட கேள்விகளே அவர்களின் இனவெறியையும் வெறுப்பையும் பறைசாற்றின. ஒரு உதாரணம், "ஒரு சோப்புக் கட்டியில் எத்தனைக் குமிழ்கள் இருக்கும்?"
       ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு ஓட்டுரிமை கிடைக்கக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தனர் வெள்ளை இனவெறியர்கள். இதன் காரணமாகவே சதர்ன் கிறிஸ்டியன் லீடர்ஷிப் கான்பெரன்ஸின் (Southern Christian Leadership Conference SCLC) தலைவர்கள் செல்மாவில் ஒட்டுரிமைப் போராட்டத்தைத் தீவிரமாகவும் சோதனை மேடையாகவும் கொண்டனர்.

செல்மா போராட்டத்தில் கிங் ஜூனியர் Image: thanks Google

       ஜனவரி 2, 1965 இல் செல்மாவின் ஆப்பிரிக்க மெதடிஸ்ட் எபிஸ்கோபல் சர்ச் இயங்கிய பிரவுன் சேப்பலில் (Brown Chapel) உரையாற்றிய மார்டின் லூதர் கிங் ஜூனியர், செல்மா நகரம் குடியுரிமை எதிர்ப்பின்  கசப்பான சின்னமாக இருந்ததாகக் கூறினார். ஜுனியர் மற்றும் அவருடைய போராட்டக்குழுவினர் மோன்ட்கோமேரி எப்படி பேருந்து புறக்கணிப்புக்கும் பொதுவிட சமஉரிமை கோரி நடந்த போராட்டங்களுக்கும் மையமாக அமைந்ததோ அப்படியே ஓட்டுரிமைப் போராட்டத்திற்கு செல்மா மையப் போராட்டக் களமாக இருக்கும் என்றார்.
       செல்மாவில் போராட்டம் எந்த அளவு இருந்தது? கிங் ஜூனியரும் அவருடைய மக்களும் என்னென்ன இன்னல்களை அனுபவித்தனர்? தொடரும்...

அடுத்தப் பதிவிற்கான இணைப்பு, மாரியன்.

உசாத்துணை:
1. கூ கிளக்ஸ் க்ளான்
2. சிவில் ரைட்ஸ் ஆக்ட் 1866
 
Book: The Bridge - The life and rise of Barack Obama (மார்டின் லூதர் கிங் பற்றிய முந்தைய பதிவு எழுதியபிறகு தான் இந்நூலை வாசிக்க ஆரம்பித்தேன். ஒபாமா பற்றிய நூல் என்று எண்ணினால் இனவேறுபாட்டின் போராட்டத்தைப் பற்றியும் பல தகவல்களைச் சொல்கிறது. இந்த பதிவிற்கு இந்நூலும் உதவியது.)

20 கருத்துகள்:

  1. அருமையான தொடர் ஆரம்பமே அசத்தல்
    அங்கேயும் ஆர்.எஸ்.எஸ் இருக்குபோல வேறு பெயரில் a
    லேபில்கள் மற்றும்தான் மாறுகிறது
    மற்றபடி மனித கீழ்மைகள் உலக அளவில் ஒன்றுதான்

    வேறு என்ன
    தம +

    பதிலளிநீக்கு
  2. செல்மா – கேள்விப் பட்டதில்லை. நிறவேற்றுமைக்கு எதிரான களமாக செல்மா நகரம் மாறியதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா, குறிப்பாக ஓட்டுரிமைக்காக.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.

      தகவலுக்கு: இதைப் பற்றி 2014இல் செல்மா என்ற திரைப்படம் வந்தது ஐயா.

      நீக்கு
  3. செல்மா பற்றி அறிய.... தொடர்கிறேன் சகோ

    பதிலளிநீக்கு
  4. புது விஷயம் ஒன்று நல்ல தொடக்கம்...தொடர்கின்றோம்

    கீதா: செல்மா கேட்டதுண்டு. ஓரளவு தெரியும் அங்கிருந்த போது என் மகனின் கராத்தே ஆசிரியர் ஒக்கினாவா கொஜுரியோ ஸ்டைலில் உலக க்ரான்ட்மாஸ்டர் யமாகுச்சி யின் நேரடி மாணவர். அவரும் ஆப்ரிக்க அமெரிக்கர். சொல்லிக் கேட்டதுண்டு. இப்போது உங்கள் பதிவு மூலம் இன்னும் தகவல்கள். அருமையாகத் தொடங்கியுள்ளீர்கள். தொடர்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  5. செல்மா!! தொடக்கத்திலேயே விறுவிறுப்பு!!

    "ஒரு சோப்புக் கட்டியில் எத்தனைக் குமிழ்கள் இருக்கும்?" அவ்வ்வ்வ். என்னமா பிளான் பண்ணுறாங்க!!

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    புதிய தகவல் புதிய தேடல் வாழ்த்துக்கள் த.ம7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. உசாத்துணை தந்து ஆய்வுக்கட்டுரையைப் போல பதிவினை அளித்துள்ளீர்கள். நன்று.

    பதிலளிநீக்கு
  8. செல்மா பற்றி இதுவரைக் கேள்விப்பட்டதில்லை. புதிய செய்திகள். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. நல்ல கட்டுரைத் தொடர் வாழ்த்துக்கள் சகோதரி.

    பதிலளிநீக்கு
  10. உண்மையைத் தொகுத்து வரலாற்றை திரும்பிப் பார்த்தது போல இருந்தது சகோதரி..வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  11. இன வேறுபாட்டின் கொடுமையை உணர்த்தும் தொடருக்கு வாழ்த்துகள்மா..தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...