Image:Thanks Google |
படிபடி என்பார்
பச்சைக் குழந்தையைப்
பள்ளிசேர்க்கப் பாடாய்ப்படுவார்
பாடமென்றால்
கணிதமும் அறிவியலும் தான்
கணித மேதையோ
அறிவியல் மேதையோ
அதிகம் இல்லை
சல்லடை போட்டுத் தேடிடுவோம்
பாதகமில்லை!
பள்ளிதாண்டியும் வகுப்பு
அதிலும்
முன்னால் நிற்கும் படிப்பு
ஓடாதே...ஆடாதே..
கவனமாய்ப் படி என்பார்
ஒப்பித்து ஒப்பித்து
ஒப்பேத்தும் நிலையில் ...
திடீரென்று கூவுகிறார்
ஒலிம்பிக் ஒலிம்பிக்
தங்கம் இல்லையாம்..
பதக்கம் இல்லையாம்..
அட..நீங்கள்வேறு..
அதெல்லாம் வருத்திடுமா?
இந்த நகைச்சுவைத் திறமை
யாருக்கும் வராது!
சிரிப்பாய்ச் சிரிக்கிறார்
கண்ணாடி முன்னிருப்பது உணராமல்..
ஒலிம்பிக் ..
அங்குபோனவர் பட்ட பாடு
அப்பப்பா யாருக்குத் தெரியும்?
அதைத் தெரிந்து
அதற்குக் குரல் கொடுத்தால் ...
அட..நீங்கள் வேறு!
உண்மை நிலையை அழகான கவிதையாக தந்து விட்டீர்கள். விளையாட்டுக்கு விளையாட்டாகக்கூட எந்த முக்கியத்துவமும் கொடுக்காத ஒரு நாட்டில் திடீரென்று ஒலிம்பிக்கில் மட்டும் தங்கம் வேண்டும் என்றால் என்ன செய்வது. 100-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டதே இந்தியாவிற்கு சாதனைதான்.
பதிலளிநீக்குத ம 2
உண்மை சகோ..வேதனையாக இருக்கிறது.
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
சிந்தனை விரிப்பாக
பதிலளிநீக்குமுத்தான வரிகள்
பாராட்டுகள்
நன்றி ஐயா
நீக்குYellme arasiyalma.....
பதிலளிநீக்குஆமாம் கீதா..
நீக்குஆதங்கத்தைப் பகிர்ந்தவிதம் அருமை.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குநல்லதொரு கவிதை. எத்தனை கஷ்டங்களோடு இந்த விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள்..... இதிலும் அரசியல் புகுந்து நாறடிக்கிறது.... பொதுஜனமும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், போட்டியில் தங்கம் வெல்லவில்லை என்று மட்டுமே சொல்கிறார்கள்....
பதிலளிநீக்குஉண்மை அண்ணா..அதுதான் வருத்தமும் கோபமும் தருகிறது.
நீக்குநன்றி அண்ணா
நிறய பேசும் கவிதைகள்
பதிலளிநீக்குதொடரட்டும்
தம +
நன்றி அண்ணா
நீக்குஉண்மையை உரக்கச் சொன்னீர்கள். பாராட்டுகள். (கவனிக்கவும்: அட..நீங்கள்வேறு..அதெல்லாம் வருத்திடுமா? > வந்திடுமா? )
பதிலளிநீக்குநன்றி ஐயா.
நீக்குவருத்திடுமா தான் ஐயா..ஏன் இந்த நிலை என்று வருந்தாது மிமீ போட்டு சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்...
“இந்த நகைச்சுவைத் திறமை
பதிலளிநீக்குயாருக்கும் வராது!“
ஆமாம்..உன் கவிதையைத்தான் சொல்கிறேன் மா.
சிரித்துத்தான் ஆற்றவேண்டும்.
அண்ணா...நகைச்சுவை இல்லை அண்ணா. நகைக்கிறார்களே என்று கோபம்...
நீக்குஅருமை அருமை சகோ/க்ரேஸ்!!!! உண்மை நிலையை நினைத்துச் சிரிக்கவா ஆதங்கப்படுவதா வேதனைப்படுவதா என்று தெரியவில்லை...அருமையான வரிகள்
பதிலளிநீக்கு