காதல் எனும் ஒரு வழிப்பாதை




உன்னில் நானும்
என்னில் நீயும்
உயிரில் ஒன்றானபின்
உவக்கும் வாழ்வு அது
ஒரு வழிப்பாதை
காதல் எனும் ஒரு வழிப்பாதை



ஏற்றத்திலும் இறக்கத்திலும்
பனியிலும் கனலிலும்
இருளிலும் ஒளியிலும்
ஒன்றாகச் செல்லும் அது
ஒரு வழிப்பாதை
காதல் எனும் ஒரு வழிப்பாதை

இளமை இன்பத்திலும்
முதுமை முதிர்ச்சியிலும்
கரத்தில் கரம் கோர்த்தே
கரை சேர்த்திடும் அது

ஒரு வழிப்பாதை
காதல் எனும் ஒரு வழிப்பாதை

உன்னுடன் வரும்பயணம்
இன்னொரு பாதைத் தேவையில்லை
உன் தோள் சாய்ந்தே
கண்மூடி வருவேன் அது
ஒரு வழிப்பாதை
காதல் எனும் ஒரு வழிப்பாதை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தினமணி கவிதைமணியில் வெளிவந்திருக்கும் இக்கவிதையின்  இணைப்பிற்கு இங்கே சொடுக்கவும்.நன்றி!

19 கருத்துகள்:

  1. அடேடே.... தினமணி கவிதை மணியில் வந்ததற்கு வாழ்த்துகள். கவிதையை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஶ்ரீராம்.
      தொடர்ந்து ஊக்குவித்து வாக்குகளும் இடும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி.

      நீக்கு
  2. அருமையான காதல் ஒரு வழிப்பாதை சகோதரியே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அன்பு வைசாலி

      நீக்கு
  3. அருமை.

    தினமணியில் வெளியானதற்கு வாழ்த்துகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  4. கவிதை தினமணியில் வந்ததற்கு வாழ்த்துகள்.
    காதல் எனும் ஒருவழிப்பாதையிலான பயணத்தினை உங்கள் வரிகளில் ரசித்தேன்@
    த. ம

    பதிலளிநீக்கு
  5. இளமை இன்பத்திலும்
    முதுமை முதிர்ச்சியிலும்
    கரத்தில் கரம் கோர்த்தே
    கரை சேர்த்திடும் அது //

    மிகச்சரி அம்மா...

    பதிலளிநீக்கு
  6. அட சூப்பர் கிரேஸ் .. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. இளமை இன்பத்திலும்
    முதுமை முதிர்ச்சியிலும்
    கரத்தில் கரம் கோர்த்தே
    கரை சேர்த்திடும் அது //

    சூப்பர்!!! மிக மிக ரசித்தோம். தினமணியில் வெளியானதற்கு வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...