தந்தையுடன் தானும் மதித்தேத்தும் மாண்புகளைச்
சிந்தைதனில் ஊன்றிச் சிறந்திடவே - எந்நாளும்
நிந்தை விலக்கி நிமிர்ந்தோங்கி வாழ்ந்திடவே
தந்துலகில் எண்பிப்பாள் தாய்
திருமிகு.பாரதிதாசன் ஐயா அவர்களின் பாவலர் பயிலரங்கம் முகநூல் பக்கத்திற்காக எழுதியது. வெண்பா எழுதக் கற்றுக்கொள்ளும் தளம் அமைத்திருக்கும் ஐயா அவர்களுக்கு நன்றி.
நல்லாயிருக்கு..
பதிலளிநீக்குதம +1
நன்றி சகோ
நீக்குநல்ல முயற்சி.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குநல்லாயிருக்கு...
பதிலளிநீக்குவெண்பா எழுத ஆரம்பித்திருப்பதில் மகிழ்ச்சி...
நன்றி சகோ
நீக்குமுன்பே அவ்வப்பொழுது எழுதியிருக்கிறேனே சகோ..
// நிந்தை விலக்கி // புரியவில்லை...
பதிலளிநீக்குஅவப்பெயர் தரும் செயல்கள், கெட்டவை விலக்கி என்று அண்ணா
நீக்குஇந்த கவிதை ஏரியாவில் நான் வீக் என்பதால் இது நன்றாக இருக்கிறது இல்லை என்று சொல்வதைவிட நீங்க எழுதினா நல்ல கருத்துடையதாக இருக்கும் என்று சொல்லி செல்லுகிறேன்
பதிலளிநீக்குஆஹா!!! சகோ!! மனம் நிறைந்த நன்றிகள்!
நீக்குமுந்திவரும் தென்றலென முத்தான பாதந்து
பதிலளிநீக்குசிந்தையதில் நின்றிட்ட சோதரியே -வந்துநிதம்
சந்தநயம் ஊறுகின்ற சத்தான பாபலவும்
தந்துநிதம் வென்றுவிடு நன்று.
சந்தநயம் ஊறுகின்ற சத்தான பாபலவும்
நீக்குதந்திடவே வாழ்த்திடும் தங்கள்பா பேருவகை
ஈந்திடுதே! ஊக்கமிது இங்கிவளைத் தூண்டுகையில்
தந்திடுமா காலம் தடுப்பு
மிக்க நன்றி
நல்வாழ்த்துகள்..
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஇதே மாதிரி தான் போன வாரம் 'ஆலியா பட்' டுக்கு ஒரு பிறந்த நாள் பா எழுதியிருந்தேன். ஆனா யாருமே கண்டுக்கலே. :(.
பதிலளிநீக்குஆனா உங்களுக்கு ஊக்கம் தர நாங்கெல்லாம் இருக்கோம்.. ;)
குத்திட்டீங்களே :)
நீக்குநன்றி நன்றி!
ஆவி!!!!ஹஹஹஹஹ்ஹ ரொம்ப ரசிச்சேன்பா...
நீக்குகீதா
எனது வாழ்த்துகளும் சகோ
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குக்ரேஸ்/சகோ! ரொம்ப அழகா எழுதிருக்கீங்க. கலக்குறீங்க.
பதிலளிநீக்குநாங்கள் கவிதை எழுதுவதில் ரொம்பவே வீக்...