தீபத்தின் ஒளியில்



சுட்டெரிக்கும் வெயிலில்
         சூளையில் வெந்துவிட்டும்
பட்டாசு ஓட்டிப்
          பகலெல்லாம் தேய்ந்துவிட்டும்
கட்டிடமும் ஓங்கவே
          கல்சுமந்து ஓய்ந்துவிட்டும்
தட்டுகள் டம்பளர்கள்
           தண்ணீரில் சுத்தமாக்கி
முட்டிநிற்கும்  கண்ணீரை
           மூக்குறிஞ்சிப் புள்ளிவைத்து
எட்டத்தான் பார்க்கிறோம்
           எம்வாழ்வில் ஓங்கிடமே
திட்டம்தான் வெல்லுமா
           தீபத்தின் ஒளியில்!



5 கருத்துகள்:

  1. வரிகள் அருமை! ஓங்கிடம் வரை புரிந்தது. அதன் பின் அடுத்த இரு வரிகளும் அதற்கு முந்தைய வரிகளுடன் பொருத்திப் பார்க்கத் தெரியவில்லை....எங்களுக்குப் புரியவில்லை போலும்!! சகோ/க்ரேஸ்

    பதிலளிநீக்கு
  2. அரசு ஊழியனின் அடுப்படிக்குள்
    புதிய பணத்தாள் மணக்கின்றது..

    ஆதரவற்ற ஏழையின் மனமோ
    கண்ணீர்த் துளியால் கனக்கின்றது..

    அன்றைக்கும் இன்றைக்கும்
    இது தான் மிச்சம்!..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...