எட்டுப்பட்டி கிராமம் எங்கிலும் போஸ்டர் ஒட்டியாச்சே

படம்: இணையத்திலிருந்து

கண்ணம்மா, விழாவுக்கு இன்னும் ஒரு மாசம்கூட இல்லை. சொல்றவங்களுக்கெல்லாம் சொல்லியாச்சுல்ல?

சொல்லியாச்சு தங்கம்மா, நம்மகுடும்பத்துல எல்லோருமே கூவி கூவி சொல்லிட்டு இருக்கோமே...

ஆமாமா! எட்டுப்பட்டி கிராமம் எங்கிலும் போஸ்டர் ஒட்டியாச்சே!


எட்டுப்பட்டி கிராமமா!! இது உலக அளவுல நடக்குதுன்றத மறந்துட்டியா தங்கம்மா?

ம்க்கும்! பெரிசா சொல்ல வந்துட்ட....அதெப்படி மறப்பேன்? எட்டுப்பட்டி கிராமம்னு நான் சொல்றது எட்டுத்திக்கும் உலகெங்கும்னு. வேர்ல்ட் இஸ் எ குளோபல் வில்லேஜ் , யூ சீ.

நல்லா பேசுற, பணம் அனுப்பிவச்சியா? அத சொல்லு!

ஆங்...இதோ, இதோ அனுப்பிடறேன். ஆமா, எங்க அனுப்பறது கண்ணம்மா?..முறைக்காத சொல்லு சொல்லு..வேலயப் பாக்கலாம்.

சரி,சரி, சொல்றேன் எழுதிக்க...அப்டியே உன் கூட்டாளிங்க எல்லோர்கிட்டயும் சொல்லு.  அப்புறம் இந்தக் கையேட்டுக்குத் தகவல் அனுப்பச் சொல்லு..அப்புறம் என் பேரு விட்டுபோச்சு, உன் பேரு விட்டுப்போச்சுன்னு சொல்லக் கூடாது..சொல்லிப்புட்டேன். விழாவுக்கு வர்றவங்கள இங்கப் பதியச் சொல்லு, அப்புறம் சாப்பாடு பத்தலைனு சொல்லக் கூடாது. இந்தா, விவரத்த எழுதிக்க...

“வலைப்பதிவர் திருவிழா-2015” நிகழ்விற்கென, தனியே ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது. அந்தக் கணக்கு விவரம் வருமாறு :-

NAME - MUTHU BASKARAN N
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA,
PUDUKKOTTAI TOWN BRANCH
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320


(இந்த வங்கிக் கணக்கு கணினித்தமிழ்ச்சங்க நண்பர்களின் ஆலோசனைப்படி, “நல்லாசிரியர்” திரு பொன்.கருப்பையா அவர்கள் உள்ளிட்ட இருவர் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. ஆயினும் ஒருவர் பெயர் குறிப்பிட்டாலே போதுமானது)

இந்தக் கணக்கின் வழி நன்கொடை செலுத்துவோர், நன்கொடையாளர் பெயர், ஊர் மற்றும் பணம் செலுத்திய நாள், தொகை முதலான விவரங்களை bloggersmeet2015@gmail.com எனும் மின்னஞ்சலுக்கோ, +91 94431 93293 எனும் செல்பேசி எண்ணுக்கோ (குறுஞ்செய்தி) தகவல் தெரிவித்திடவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.




சரி கண்ணம்மா, நான் வாறேன்.. நீ போட்டிக்குக் கட்டுரை எழுதனும்னு சொன்னியே, எழுது.

ஆங், அதையும் சொல்லு உன் கூட்டாளிங்ககிட்ட.


21 கருத்துகள்:

  1. அருமை.

    பெரும் அளவில் அனைவரும் பங்களிக்கட்டும்.... விழா சிறக்க எனது வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  2. புதுக்கோட்டை விழாவிற்காகக் கைகோர்க்கும் உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அருமை...

    நம் தளத்திலும் (http://bloggersmeet2015.blogspot.com/p/2015.html) இணைத்து விடுகிறேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
  4. ஒரு சந்து பொந்து கூட விடற மாதிரி இல்லே!..

    ஊரு முழுக்க சொல்லீட்டோம்..ல்ல!...

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. நன்றி அண்ணா
      உங்கள் நூல் வெளியீட்டிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்

      நீக்கு
  6. அருமைம்மா... அடுத்து அமெரிக்க வீதிகளில் சந்தித்துக் கொள்ளும் ரெண்டு இளசுகளின் நுனிநாக்கு தமிங்லீஷில் ஒரு பதிவு உண்டா? இங்கே சுமார் 25பேருடன் திண்டுக்கல் காரர் ஒருவர் விழாப்பணிகளில் விடாமல் நடக்கும் போட்டியில் நிற்கிறார் அவரை ஒன்னும் பண்ண முடியல... இப்போது அட்லாண்டா விலிருந்தும் போட்டிக்கு ஆள்கிளம்பிவிடடது போல... நாங்க இன்னும் உழைக்கணும்...போல...உம்? கலக்குடா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை! நல்ல ஐடியா அண்ணா :)
      டிடி அண்ணா கூட போட்டி போட்டா தோல்வி நிச்சயம்! நீங்க விழாவிற்காக நிறைய யோசித்து யோசித்துச் செயல்படுத்தும் ஆர்வம் தான் உற்சாகம் தருகிறது அண்ணா. உங்கள் அனைவருக்கும் நன்றி! நீங்க இதுக்குமேல உழைக்கணுமா!!!!
      அன்பான கருத்திற்கு மனமார்ந்த நன்றி அண்ணா.

      நீக்கு
  7. வணக்கம்
    சகோதரி
    சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. தங்கம்மாவும் கண்ணம்மாவும் ரொம்ம்ப சுறுசுறுப்பு!..:)

    அசத்துறீங்க தோழி!.. நடக்கட்டும்...! நடக்கட்டும்...!..:))

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. அசத்தல் பதிவு சகோதரி/தோழி. அழைத்த விதமும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. .ஹைய்! உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி. நலமாய் இருக்கிறீர்கள் என்ற செய்தி அல்லவா இது!

      நன்றி அண்ணா.

      நீக்கு
  10. அட என்னமா பின்னுறீங்க எங்க இருந்து இப்பிடி ஐடியா எல்லாம் வருதோ ம்..ம் அசத்துங்க அசத்துங்க ...ஆமா என்ன அமெரிக்கவிலயுமா போஸ்டர் ஒட்டிறீங்க ஹாஹா ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா நன்றி அன்புத்தோழி இனியா. முகநூல் சுவத்துல ஒட்டுறோம் :)

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...