தமிழ் வலைப்பதிவர் கையேடு - குறிப்பு அனுப்பிட்டீங்களா?


 














 வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா 2015 வரும் அக்டோபர் 11ஆம் நாள் புதுக்கோட்டையில்! விழா ஏற்பாடுகள் ஒருபுறம் அங்கு செல்வதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் என்று வலையுலகம் களைகட்டியுள்ளது. வெளிநாட்டில் இருப்பதாலோ அல்லது வேறு காரணங்களாலோ செல்லமுடியாதவர்களும்  தமிழ் வலைப்பதிவர் கையேட்டில் இடம்பெறலாம்.

எந்தெந்த ஊரில் இருந்து யார் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்று பார்க்க வருகைப் பதிவு பட்டியல் பாருங்கள்.

நீங்களும் கலந்துகொள்ள முடிவு செய்திருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் வருகையை இங்கே  சொடுக்கிப் பதிவு செய்யுங்கள். கடைசி நேரத்தில் முடிவு மாறலாம் என்று நினைத்தாலும் பரவாயில்லை, பதிவு செய்துவையுங்கள்.

என்னைப் போல் வெளிநாட்டில் வசிக்கும் வலைத்தள நண்பர்களுக்கு ஒரு விசயம். நீங்கள் பதிவர் சந்திப்பிற்குப் போக முடியாவிட்டாலும் உங்கள் முத்திரையைப் பதிக்கலாம். எப்படி என்று கேட்கிறீர்களா? 'தமிழ் வலைப்பதிவர் கையேடு - 2015' வெளியிடுவதற்கான புதிய முயற்சி நடக்கிறது. உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் வலைப் பதிவர்களை அறிந்துகொள்ள உதவும் இக்கையேட்டில் விழாவிற்கு வருவோர் மட்டும் அல்லாது வர இயலாதோரும் சேர்க்கப்படுவர். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். உங்களைப் பற்றிய சில தகவல்களுடன் ஒரு மின்னஞ்சலை bloggersmeet2015@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். என்னென்ன தகவல் அனுப்பவேண்டும் என்றால், 
1.  உங்கள் பெயர்
2. வயது 
3. உங்கள் வலைத்தளத்தின் பெயர்
4. உங்கள் வலைத்தளத்தின் முகவரி 
5. உங்கள் மின்னஞ்சல் முகவரி
6. உங்கள் புகைப்படம் அல்லது தளத்தின் லோகோ இணைப்பு
7. நீங்கள் வெளியிட்ட நூல்கள்/குறும்படங்கள் பற்றிய தகவல்
8. பெற்ற விருதுகள்
9. சிறப்பான பதிவின் இணைப்புகள் 
10. அலைபேசி எண் (விருப்பப்பட்டால்)
11. முகநூல் முகவரி (விருப்பப்பட்டால்)
இவற்றோடு கையேட்டில் இடம்பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பும் குறிப்புக்களைச் சுருக்கமாக வரும் 20-9-2015ஆம் தேதிக்குள் bloggersmeet2015@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 
12. வசிப்பிடம்
(இடம் கருதி, ஏற்றவற்றை வெளியிட விரும்புகிறது விழாக்குழு) விரைவாக அனுப்பிவிட்டால் அவற்றைத் தொகுத்து அச்சிட எளிதாக இருக்கும்.
 

இவ்வாறு தகவல் அனுப்பியோர் பட்டியலையும் இந்த பதிவில் காணலாம்.



மேலும் உங்கள் வாழ்த்துரையை 10-15 வரிகளுக்குள் எழுதியும் அனுப்பிவைக்கலாம். அவற்றைத் தேர்ந்தெடுத்து அரங்கில் எழுதி  வைப்பார்கள்.

வலைப்பதிவர் சந்திப்பு 2015 என்று இதற்காகவே திறக்கப்பட்ட வலைத் தளத்தில் இதைப் பற்றிய பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

ஏதேனும் ஐயம் இருப்பின் bloggersmeet2015@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி!

41 கருத்துகள்:

  1. மரியாதையாக இதற்கு ஒரு பாரம் போட வேண்டியதுதான் ...
    எனக்கும் சில தயக்கங்கள் இருந்தன எனவே இன்னும் நான் குறிப்புகளை அனுப்பவில்லை ...
    பாரம் இருந்தால் கொஞ்சம் சுளுவா இருக்கும் என்று நினைக்கேன்
    தம +
    அழைப்பிற்கு மிக்க நன்றிகள்
    அட்லாண்டாவில் இருந்து ஆதரவு ... நன்றிகள் குழுவினரின் சார்பாக

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் வருகைப் பதிவில் பதிவு செய்திருப்பீர்கள் அல்லவா அண்ணா? உங்களுக்கே தயக்கமா?
      :-)
      நன்றி அண்ணா , நமது விழாவாச்சே

      நீக்கு
    2. அதுதான் வருகைப்படிவத்திலேயே ஒரு பெரிய பெட்டி இருக்கே விவரங்கள் கொடுக்க அதுல கொடுத்துரலாமே மது/கஸ்தூரி...இது திருநெல்வேலிக்கே அல்வா மாதிரில்லா இருக்கு...

      நீக்கு
  2. தங்களின் மின்னஞ்சல் கண்டேன்...

    விழாவின் உச்சத்தை தொடப்போகிற தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு
  3. தகவல்கள் அறிந்தேன் மிக்க நன்றி ! அனைத்தும் சிறப்புடன் திகழ வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி தோழி, உங்கள் குறிப்பும் அனுப்பிவிடுங்கள். மிக்க நன்றி

      நீக்கு
  4. “தமிழ் வலைப்பதிவர் திருவிழா-2015“ நடப்பதென்னவோ புதுக்கோட்டையில்தான். ஆனால், விழாவுக்கு உழைப்போர் அட்லாண்டா வரையில் இருக்கிறாரகள் என்பது தான் வலைக்குடும்பத்தின் சிறப்பும்மா.. அருமைப்பா.. உனக்கு நன்றி சொல்லக் கூடாது, ஏன்னா நீயும் விழாக்குழு வேலைகளைப் பார்க்கிறாய் அல்லவா? ஆனாலும் வி மிஸ் யூ சோ மச் டா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் தலைமையில் நண்பர்கள் அருமையாக உழைக்கும்பொழுது இது என்னண்ணா பிரமாதம்.
      //உனக்கு நன்றி சொல்லக் கூடாது// அப்படிச் சொல்லுங்கள், இதுவல்லவோ மகிழ்ச்சி!
      நானும் மிஸ் பண்ணுகிறேன் அண்ணா. அதுவும் இந்த வருடம் பதிவர் விழா புதுக்கோட்டையில்!
      உங்கள் அன்பான கருத்திற்கு நன்றி அண்ணா.

      நீக்கு
  5. தகவல்களுக்கு நன்றி ...மேலும் பதிவர் மாநாட்டுக்கு எனது வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  6. அருமையான முயற்சிகள்!
    நாமும் வாழ்க்கையில் பதிந்துவைக்கும் தட(ய)ங்கள்தான்!

    அங்கு நானும் எழுதுவதற்கு அப்படி என்ன சிறப்பு என்னிடம்?..
    விடையில்லை! அதனால் அமைதி காக்கின்றேன்.

    தங்கள் பணிகண்டு மனம் மகிழ்ந்தேன்!
    வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அங்கு நானும் எழுதுவதற்கு அப்படி என்ன சிறப்பு என்னிடம்?// இதைக் கேட்க யாரும் இல்லையா?
      அன்பு இளமதி, நீங்களே இப்படிச் சொன்னால் தகுமா? தீந்தமிழ் பாக்கள் படைத்துப் பாவலர் பட்டமும் பெற்றபின் உங்கள் தளம் மறைப்பது சரியா? இன்தமிழ் இன்பம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும், எனவே எம் வேண்டுகோள் ஏற்று இன்றே அனுப்பிவீர் தங்கள் குறிப்பை!

      உங்கள் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி தோழி

      நீக்கு
    2. இனிய தங்கை இளமதி இப்படிச் சொல்லலாமா? இது தகுமா? இது முறையா? இது தருமம் தானா? இப்படியெல்லாம் கேட்கப்போவதில்லை. உடன் உடனே கையேட்டுக்கான விவரங்களை அனுப்பணும் சொல்லிட்டேன்... இல்லன்னா.. (என்ன பண்ணுவதென்று தெரியலயே?) அவசியம் அனுப்பும்மா அவ்ளோதான்.

      நீக்கு
  7. சூப்பர் தொகுப்பு சகோதரி/தோழி க்ரேஸ்! ...நாங்களும் பதிஞ்சு விவரம் எல்லாம் கொடுத்துப்புட்டோம்ல...ஹஹஹ்

    நீங்கள் ரொம்ப அழகாகச் சொல்லி இருக்கின்றீர்கள். நாங்களும் இன்று கால் கொடுத்திருக்கின்றோம்....கையேட்டிற்கு....நேற்று முத்துநிலவன் ஐயாவிடம் பேசிய பிறகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா மற்றும் கீதா.
      ஆமாம், தங்கள் பதிவினைப் பார்த்தேன். நல்லது, நீங்கள் இல்லாமல் கையேடு சிறக்குமா? மிக்க நன்றி

      நீக்கு
  8. பதில்கள்
    1. நன்றி கீதா.
      ஆமாம், மனதளவிலும் எழுத்துவழியாகவும் அங்கு தானே :-)

      நீக்கு
  9. ஆஹா தாங்கள் அழகாக சொல்லியுள்ளீர்கள்.
    விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி.
      நீங்கள் விழாவிற்குச் செல்கின்றீர்களா? இயாலாதெனில் குறிப்பை அனுப்பிவிடுங்கள், நன்றி.

      நீக்கு
  10. நல்ல காலம், நினைவு படுத்தினீர்கள், உடனே அனுப்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா, மகிழ்ச்சியம்மா! நீங்கள் இல்லாமல் கையேடு நிறைவாயிருக்காதே!
      மிக்க நன்றி.

      நீக்கு
  11. நானும் அனுப்பிட்டேன் போவதற்க்குத்தான் முயல்கிறேன்
    மேலே புகைப்படத்தில் இங்கிலீஷ்காரி மைக் புடிச்சு தமிழில் சொல்வது கண்டு அதிசயித்தேன் சகோ
    தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பெயரைப் பார்த்தேன் சகோ..சென்று வர அமையட்டும்.
      ஹாஹா தமிழில் வருமாறு வேலை செய்யலாம் என்று நினைத்தேன், நேரமாகுமே :)
      நன்றி சகோ

      நீக்கு
  12. விழா சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. ஏற்கனவே அனுப்பி விட்டேன். ஏனோ எனது பெயர் அப்பட்டியலில் இல்லை. நினைவூட்டலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விழாவிற்கு வருவோர் பட்டியலில் திருச்சியின் கீழ் உங்கள் பெயர் உள்ளது ஐயா.
      நன்றி

      நீக்கு
  14. அருமையான தகவல் விரைவில் நானும் என்னுடைய தகவல்களை அனுப்பி வைக்கின்றேன் வாழ்த்துக்கள் தோழி .

    பதிலளிநீக்கு
  15. தகவல்களை அனுப்பியாகிவிட்டது சகோதரியாரே
    அந்நாளுக்காகக் காத்திருக்கிறேன்
    நன்றி சகோதரியாரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா
      உங்கள் நூல் வெளியீடும் இருக்கிறதே .. வாழ்த்துகள் அண்ணா

      நீக்கு
  16. எழுத்துக்கலைக்கு ஒரு அறிய வாய்ப்பு தந்தமிக்கு நன்றிகள் பல

    அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. valai karanamaga blogger pakkam vara mudiya villai. sir innakithan unnga comment pathan.. miss panitan. .. so sad. by, www.99likes.blogspot.com

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...