வருக வருக வருகவே

இணைந்தோம் பதிவர் வலையிலே 
இணையம் தமிழால் நிறையவே
பெருகச்  சிநேகம் குழுவிலே
வருக வருக வருகவே
ஒளிரத்  தமிழும் வலையிலே 
உலகக் கவனம் இழுக்கவே
தருக வருகைக் குழுவிலே
வருக வருக வருகவேஒருமை வளர்த்தோம் வலையிலே 
உறுகோள் கணினித் தமிழதே 
கருத்துப் பகிரக் குழுவிலே
வருக வருக வருகவே 

வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா 2015 
புதுக்கோட்டையில் வரும் 11-10-2015 ஞாயிறு அன்று!
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 
(மேலும் விவரங்களுக்கு அழைப்பிதழ் பார்க்கவும்)

வலைப்பதிவர் நண்பர்களை வருக வருக என்று வரவேற்கிறோம்!
 

15 கருத்துகள்:

 1. ஆஹா!! செம!! செம! கிரேஸ் டியர் அழைப்பு அள்ளுது!!! விழாக்குழுவில் கைகோர்த்தமைக்கு புதுகை பதிவர் குழு சார்பாக பல கோடி நன்றிகள்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேலே அண்ணாவின் கருத்திற்குச் சொன்னதுதான் டியர்..இந்த அளவு களை கட்டுவது அண்ணாவால் தான். அடுத்தது டிடி அண்ணா மற்றும் புதுகைப் பதிவர்களின் உழைப்பு. உங்களனைவருக்கும் நன்றி

   நீக்கு
 2. சகோதரி அவர்களுக்கு நன்றி! மதுரையில் வெளியிட்டதைப் போல புதுக்கோட்டையிலும் நூல் ஒன்றை ( குறிப்பாக உங்களது ஐங்குறு நூறு) வெளியிடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் அன்பிற்கு நன்றி ஐயா. எழுதிக் கொண்டிருக்கிறேன், இவ்வருடம் முடிக்க முடியவில்லை .

   நீக்கு
 3. அப்படிப் போடுங்க!!!! சகோ! என்ன அழகு! வரவேற்பு!!! ம்ம் உங்களைத்தான் சந்திக்க முடியாமல் போகின்றது. சென்ற முறை இறுதியில் எங்கள் பயணம் ரத்தானது. ..

  மிக்க நன்றி! சகோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அண்ணா. ஆமாம், அடுத்த ஆண்டாவது சந்திப்போம் என்று விரும்பி நம்புகிறேன்.

   நீக்கு
 4. இதுக்குதான் கவிதை எழுத கற்றுக் கொள்ளனும் என்கிறது சுருக்கமாக நறுக் என்று எழுதிவீட்டீர்கள். நம்ம முத்து நிலவன் மெயில் அனுப்பி இருந்தார் இரண்டு நாளைக்கு ஒரு தடவை மட்டும் மெயில் செக் பண்னுவேன். தற்செயலாக இன்று மாலை ஜந்தரை மணியளவில் மெயில் பார்த்ததும் என்ன எழுதுவது என்று தெரியாமல் மிக அவசர அவசரமாக எழுதி பதிவிட்டுவிட்டேன் இதுல எங்க வீட்டம்மா எனக்கு பசிக்குது ஏதாவது குக் பண்ணி வையுங்க என்று ஆர்டர் வேற போட்டுடாங்க... பாத்தீங்களா என் நிலமையை.... கூடிய சீக்கிரம் கவிதை எழுத கற்றுக் கொள்ள வேண்டியதுதான் அப்பதான் இந்த மாதிரி அன்பு தொல்லைகளை ஏற்று சமாளிக்க முடியும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் மதியத்தில் மின்னஞ்சல் பார்க்கமுடிவதில்லை. இன்று எப்படியோ பார்த்துவிட்டேன் சகோ, நல்லதாப் போச்சு. அப்டி இல்லேனாலும் ஐந்து மணி எட்டு மனியாகியிருக்கும் அவ்ளோதானே.. :)

   அவசரப் பதிவும் அருமை சகோ. ஆமாம், சமையல் நல்லாப் பண்ணீங்களா? :)

   நீக்கு
 5. நமக்காக நாம் விடுக்கும் அழைப்பினைப் பெற்றேன். புதுக்கோட்டையில் ஒன்றுகூடுவோம். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா..
   இவ்வருடம் நான் வரவில்லை, ஆனால் உணர்வால் ஒன்றுகூடுவோம்!

   நீக்கு
 6. வாழ்த்துக்கள்,,,,,
  தங்கள் அழைப்பு அருமைம்மா,,,,
  நன்றி.

  பதிலளிநீக்கு
 7. அழைப்பும் அழைத்தவிதமும் அருமை தோழி!

  விழா சிறக்க வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

யாழிசை இல்லறம் - ஐங்குறுநூறு 402

  ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. தலைவனும் தலைவியும் திருமணம...