கடலெல்லாம் தண்ணீர் தான்


ஆறும் குளமும் இல்லையென்றால்
யாரும் வாழ முடியாது
கடலெல்லாம் தண்ணீர் தான்
எடுத்துக் குடிக்க முடியாது

மரமெல்லாம் வெட்டினால்
மழை பொழிவது எப்படி?
நீயும் நானும் நினைத்தாலே
மரம் வளர்க்க முடியுமே
மழை நீரை சேமித்தால்
மனிதர் என்றும் வாழலாம்


28 கருத்துகள்:

  1. அருமை சகோதரியாரே
    மழை நீரை சேமிப்போம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா!! உடனே வந்து கருத்திட்டு விட்டிர்களே :)
      மிக்க நன்றி அண்ணா

      நீக்கு
  2. அடடாகுழந்தைப்பாடலாகப்போட்டு கலக்குறீங்களே அருமைய்யா.

    பதிலளிநீக்கு
  3. எளிமையான ஆனாலும் அழுத்தமான பதிவு

    பதிலளிநீக்கு
  4. மழை நீரை சேமித்தால்தான். இல்லையா? தமிழ் மணம்+1

    பதிலளிநீக்கு
  5. நல்ல சேமிப்புத் தோழி!
    வாழ்த்துக்கள்!

    த ம +1

    பதிலளிநீக்கு
  6. மண்ணில் சேமிப்பதைப் போல மனதிலும்
    சேமித்துக் கொள்ள வேண்டும்!..

    பதிலளிநீக்கு
  7. அருமையான பாடல்! சிறப்பான கருத்து!

    பதிலளிநீக்கு
  8. மரம் வளர்ப்போம். மண் காப்போம்.

    பதிலளிநீக்கு
  9. பாப்பா பாட்டு அருமை தோழி.
    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  10. குழந்தைப் பாடலா இது? பெரியவங்களுக்கு மண்டையில குட்டினமாதிரி தெரியுது!
    அழகான படங்களோடு, அருமையான கவிதை (அடுத்த தொகுப்பு எப்ப?)
    விட்கெட்டை இணைத்ததோடு, மேலே சங்கிலித் தொடராய் ஓடும் அறிவிப்புக்கும் உனக்கொரு ஸ்பெஷல் விருது தரலாம்னா ...நீ எங்க வரப்போற? நன்றிடா. த.ம.வா.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரியவங்ககிட்ட சொல்லி சொல்லி .. குழந்தைகளாவது கேட்பார்கள் என்ற ஆசையில்! நன்றி அண்ணா.

      அடுத்த தொகுப்பு இலக்கியமாக இருக்க வேண்டும் என்று ஆசை..

      ஹாஹா நன்றி அண்ணா
      இந்த வருடம் பார்த்து வரமுடியாமல் போய்விட்டதே :-(

      நீக்கு
  11. அருமையான படம் படத்திற்கு ஏற்ற பாப்பா பாட்டு அருமை !
    வாழ்த்துக்கள் தோழி .இப்போது தான் கவனித்தேன் என்னுடைய
    வலைத்தளம் தங்களின் பின் தொடர்வோர் பட்டியலில் இல்லை
    அதனால அப்படியே வீடு வரைக்கும் வந்து போங்கள் தோழி :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தோழி.
      ஆஹா! உங்கள் தளத்தைத் தொடர்கிறேனே தோழி..உடனடியாக வர முடிவதில்லை..ஆனாலும் உங்கள் தளம் வருகிறேன் தோழி. :)
      தாமத வருகைக்கு மன்னித்துக் கொள்ளுங்கள்.. அன்புத் தோழியல்லவா? :)

      நீக்கு
  12. அனைவர் மனங்களுக்குள்ளும் அவசியம் பதிய வேண்டிய வரிகள்! அருமை தோழி!

    பதிலளிநீக்கு
  13. அன்புள்ள சகோதரி,

    ‘கடலெல்லாம் தண்ணீர் தான்’
    “கடல் நீர் நடுவே பயணம் போனால்
    குடி நீர் தருபவர் யாரோ“
    வாலிபக் கவிஞரின் வரிகள்.

    மழை பொழிய
    மரம் வளர்க்க
    அறம் பாடும்
    அழகிய கவிதை
    அருமை அருமை...!

    நன்றி.
    த.ம. 5



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அண்ணா.
      நலமா? கை சரியாகி விட்டதா?

      கவிஞர் வாலியின் வரிகளைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
      உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி அண்ணா.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...