தினமணி கவிதைமணியில் - பேயென பெய்யும் மழை

தினமணி நாளிதழின் கவிதைமணியில் 'பேயென பெய்யும் மழை' என்ற தலைப்பில் வந்திருக்கும் என் கவிதை:

பயன்தரவே  பொழிந்தேன்
பேயெனப் பெயர் பெற்றேன்
பட்டா போட்டது யார்?
பேராசை மனிதா - என்னிடத்தை!

கரைகொண்ட குளமாய் ஆறாய் 
வரையறை கொண்டே
வாரி வழங்கினேன்
வாரியது யார் - என் வளத்தை!
 
பாராமுகம் நான் காட்ட
பரிதவித்தாள் பூமி அன்னை
பாராயோ வறட்சியை என்றதால் 
பரிந்து வந்தேன் பார்செழிக்க
 
மண்செழிக்கப் பெய்யும்  மழையை
மனச்சான்று இன்றிப் பழிக்கிறாய்
'பேயெனப் பெய்யும் மழை' என்று,
பேயெனப்  பேராசை நீ கொண்டு!
 -கிரேஸ் பிரதிபா.வி



 இணைப்பிற்கு இங்கு சொடுக்கவும்.

33 கருத்துகள்:

  1. வாவ். சூப்பர் வாழ்த்துக்கள் கிரேஸ் .. கலக்குங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாவ்! வாவ்!! முதல் ஆளாய் ஸ்ரீனி வந்து எத்தனை நாளாச்சு :)
      நன்றி ஸ்ரீனி

      நீக்கு
  2. கவிதை மிக அருமை....பாராட்டுக்கள்

    .கவிதை புரிந்தது அதற்காகவும் மேலும் சில பாராட்டுக்கள்


    செய்திநாளிதழில் வரும் அளவிற்கு பிரபலமானதற்கும் மேலும் சில பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ.

      பிரபலத்திடம் இருந்து இத்தனை பாராட்டுகள்!! நன்றி நன்றி!

      நீக்கு
  3. நம் சுயநலத்திற்காக இயற்கையை அழித்து விட்டு, நலமாய் வாழ்வதாய் எண்ணிக் கொண்டிருந்தோம். இன்று இயற்கை பதிலடி கொடுக்கிறது. அப்போதும், நாம் நம் தவறை உணராது இயற்கையையே நிந்திக்கிறோம்.

    அழகான கவிதை. தினமணி கவிதைமணி பகுதியில் வெளியானமைக்கு வாழ்த்துகள் தோழி.

    பதிலளிநீக்கு
  4. கவிதை அருமை சகோதரி...
    வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  5. அருமை வாழ்த்துக்கள் சகோதரி......
    Joshva

    பதிலளிநீக்கு
  6. அருமை. மிக அ்ருமை. வாழ்த்துகளும், பாராட்டுகளும் சகோதரி.

    பதிலளிநீக்கு
  7. இயற்கையை நாசமாக்கிய மனிதனுக்கு நல்ல சாட்டையடி உங்கள் கவிதை! உங்கள் கவிதை தினமணியில் வெளிவந்தது என்பதை அறியும்போது மிக்க மகிழ்ச்சி! மற்ற படைப்புகளும் வெளிவர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. அருமையான சூழலுக்கு ஏற்ற கவிதை. வாழ்த்துகள்!
    த ம 3

    பதிலளிநீக்கு
  9. அருமையான கவிதை சகோ.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  10. சரி சரி... மழை போதும். அடுத்த தலைப்புக்கு அனுப்பியாச்சா..
    கவிதை மழையை யாரும் வெறுக்க மாட்டாங்க இல்லயாம்மா..
    தமிழ் இலக்கிய உலகம் முழுவதும் அடித்துப் பெய்யட்டும் உன் கவிதை மழை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா அண்ணா தான் :) அடுத்த கவிதை ரெடி அண்ணா..அனுப்ப வேண்டும்.
      ஆமாம் அண்ணா, கவிதை மழை இனிமைதான். உங்கள் அன்பான வாழ்த்திற்கு மனம் நிறைந்த நன்றி அண்ணா

      நீக்கு
  11. வாழ்த்துக்கள் சகோ,
    கவி வரிகள் அருமை,

    பதிலளிநீக்கு
  12. பாராட்டுகள் சகோ பாராட்டுகள்! அருமையான வரிகள்! வாழ்த்துகள் சகோ! மிக்க மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  13. வணக்கம்
    அருமையான வரிகள் வாழ்த்துக்கள் சகோதரித.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...