லட்சம் பதிவுகள் கண்ணோடு


பதிவர் யாவருக்கும் நண்பர்
பதிவில் தவறாது இவர்கருத்து
வலைச்சித்தர் தொழில்நுட்ப வித்தகர்
வலையுலகம் வியக்கும் உழைப்பாளி
பணிகளில் சுழன்று கொண்டே
பாட்டும் எழுதியிருக்கிறார்  அருமை
அவர் அனுமதிப்பார் என்றே
அகமகிழ்ந்துப் பகிர்கிறேன் ரசியுங்கள்



--------------------------------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...

ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...
ஒவ்வொரு வலைப்பூவுமே... சொல்கிறதே...
கருத்திட்டால் நட்பு ஒன்று வந்திடுமே...

நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வலைப்பூவில்...
பதிவுகள் நிச்சயம் சிறக்கும் ஒரு நாளில்...!
மனமே ஓ மனமே நீ மாறிவிடு...
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!

உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போக கூடாது...
"என்ன இந்த வலைப்பூ...?" என்ற
எண்ணம் தோன்றக் கூடாது...

எந்த வலைப்பூ பதிவில்
கருத்தில்லை சொல்லுங்கள்...
காலப்போக்கில் கருத்தெல்லாம்
மாறி போகும் மாயங்கள்...!

கருத்து தாங்கும் பதிவுகள் தானே
முன்னணி பதிவில் நிலையாகும்...
எதையும் தாங்கும் உள்ளம் தானே
நிலையான நட்பு காணும்...

யாருக்கில்லை போராட்டம்...?
பகிர்ந்து கொள்ள ஏன் தயக்கம்...?
ஒரு கனவு கண்டால்...
அதை தினம் பகிர்ந்தால்...
ஒரு நாளில் நிஜமாகும்...!

மனமே ஓ மனமே நீ மாறிவிடு...
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!

ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...

வலைப்பூ பகிர்வை வாசிப்போம்...
வானம் அளவு யோசிப்போம்...
பதிவுகள் என்ற ஒன்றை மட்டும்...
பகிர்ந்து கொண்டு சிறப்பிப்போம்...

லட்சம் பதிவுகள் கண்ணோடு...
லட்சியங்கள் நெஞ்சோடு...
நம்மை வெல்ல யாருமில்லை...
உறுதியோடு போராடு...!

பதிவரே... உன் மனதை கீறி
பதிவு போடு மரமாகும்...
கருத்துரை மறுமொழி
எல்லாமே நட்பாகும்...

பதிவுகள் இன்றி வலைப்பூவா...?
நேரம் ஏனில்லை என் தோழா...?
ஒரு முடிவிருந்தால்... அதில் தெளிவிருந்தால்...
வலைப்பூ வானில் சிறகடிக்கும்...

மனமே ஒ மனமே நீ மாறிவிடு
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!

ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...

ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...
ஒவ்வொரு வலைப்பூவுமே... சொல்கிறதே...
கருத்திட்டால் நட்பு ஒன்று வந்திடுமே...

நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வலைப்பூவில்...
பதிவுகள் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்...
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!

-திண்டுக்கல் தனபாலன்  
----------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி டிடி அண்ணா :)

திருமிகு.முத்துநிலவன் அண்ணாவின் பதிவில் கருத்துரையில் டிடி அண்ணா பாட்டைப் பதிவு செய்திருக்கிறார். அங்கிருந்து என் தளத்திற்குக்  கடத்திவிட்டேன் :)

39 கருத்துகள்:

  1. மதுரைத் தமிழன் பக்கத்திலும் படித்தேன். வாழ்த்துகள் DD!
    தம +1

    பதிலளிநீக்கு
  2. ஆச்சரியத்தில் மிதக்கின்றேன் சகோதரி!

    அற்புதம்! கற்பனை வளம் அள்ளிச்செல்கிறது!
    அடியடியாய் ரசித்தேன். பாடிப்பார்த்தேன்! மிகச் சிறப்பு!

    பாடலாசிய சகோதரர் தனபாலனுக்கும் வெளியீடு செய்த
    அன்புள்ளங்கொண்ட உங்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    த ம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடலாசிரிய சகோதரர் என்று வாசிக்கவும்..

      நீக்கு
    2. ஆமாம் தோழி.. பாடி பாடவைத்து மகிழ வைத்துவிட்டார் டிடி அண்ணா
      நன்றி இளமதி

      நீக்கு
  3. வணக்கம்
    சகோதரி

    அண்ணாவை பற்றி சொல்லிய விதம் சிறப்பு... வாழ்த்துக்கள் த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன்.
      இன்னும் சொல்லலாம் , சீக்கிரம் பகிர ஆர்வம் :-)
      நன்றி

      நீக்கு
  4. சகோதரியாரே
    திண்டுக்கல் தனபாலன் அவர்களை
    வலைச்சித்தர் என்று தான்
    இதுநாள் வரை எண்ணியிருந்தேன்
    இப்பொழுதுதான் தெரிகிறது
    இவர்
    வலைச் சித்தர் மட்டுமல்ல
    வார்த்தைச் சித்தரும்
    என்பது
    இப்பொழுதுதான் புரிகிறது

    பதிலளிநீக்கு
  5. அடடா...! தெரியாத்தனமா... அவசரம் அவசரமா ஏதோ எழுதினேன்...

    நன்றி... நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனபாலன் இனிமே நீங்கள் எழுதுவதையெல்லாம் அவசர அவசரமாகவே எழுதுங்கள் அதுதான் மிக அருமையான படைப்பாக மாறுகிறது. மீண்டும் எங்கள் ஊர்காரருக்கு பாராட்டுக்கள் அதனாங்க திண்டுக்கல்ல்லும் மதுரையைத்தான் சார்ந்ததுதானே

      நீக்கு
    2. டிடி அண்ணா , நீங்க நிதானமா எழுதினா எப்டி இருக்கும்! இதுவே தூள் கிளப்புதே :-)

      நீக்கு
    3. ஆமாம், திண்டுக்கல் எனக்கு நெருக்கமானது :-)

      நீக்கு
  6. நிலவன் அண்ணா blogla படிச்சேன்!! செம இல்ல டியர்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னது இது செம இல்லை என்று சொல்லியிருக்கீங்க இது செமையாகத்தான் இருக்குது டீச்சர் எழுதுவதை பாசிட்டிவான வார்த்தையில் சொல்லவும் ஹீஹீ டிச்சரை கலாய்க்க அட்லீஸ்ட் இந்த வலை உலகில் ஒருத்தனாவது இருக்கிறானே

      நீக்கு
  7. கடத்தல் ஸூப்பர் சகோ
    தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
  8. மிக அருமையான படைப்பு டிடிக்கு வாழ்த்துக்கள்!
    பகிர்ந்த தங்களுக்கும் நன்றி!
    த ம 7

    பதிலளிநீக்கு
  9. டிடி சார் ...வாழ்த்துக்கள்,கடத்திய சகோதரி...அருமையா.

    பதிலளிநீக்கு
  10. ///அவர் அனுமதிப்பார் என்றே
    அகமகிழ்ந்துப் பகிர்கிறேன் ///

    நானெல்லாம் அவர் அனுமதிக்கவில்லை என்றால் கூட பகிர்வேன் நல்ல விஷயத்தை நாலு பேருக்கு சொல்ல அனுமதியெல்லாம் எதிர்பார்க்க கூடாது .ஒருவரை பாராட்ட அவர் அனுமதியை எதிர்பார்க்க கூடாது. அதனால்தான் இதே பாடலை நானும் என்பதிவில் பகிர்ந்து இருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிச் சொல்லுங்க...! உண்மை...

      நன்றி... நன்றி...

      நீக்கு
    2. அதான் நான் அவர் அனுமதிக்குக் காத்திருக்கவில்லை, வேறோர் பதிவென்றால் காத்திருந்துப் பகிர்ந்திருப்பேன். :-)

      நீக்கு
  11. அருமை சகோ,,
    நல்லா இருக்கு,
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. ஒருவரைப் பாராட்ட வேண்டுமென்றால் நம் மனசில் தோன்றியவுடனே பலர் நடுவில் பாராட்டிவிட வேண்டும், விமர்சனம் சொல்லணும்னா தனியாச் சொல்லிக்கலாம் என்பதே எனது கருத்தும் பா! முதுகுக்குப் பின்னால் செய்யக் கூடிய ஒரே வேலை, முதுகைத் தட்டிக்கொடுப்பது மட்டும்தான்! உனக்கு நன்றியும் பாடலாசிரியர் வலைச்சித்தருக்கு வாழ்த்துகளும் பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா..உண்மைதான்.
      உங்கள் வேலைப்பளுவிலும் வந்து கருத்திட்டதற்கு மனமார்ந்த நன்றி அண்ணா

      நீக்கு
  13. அருமை அருமை!! டிடி.....எப்படிப்பா இப்படி!!!! வாழ்த்துகள் டிடி! பகிர்ந்தமைக்கு நன்றி சகோ!!!

    பதிலளிநீக்கு
  14. அருமையாக எழுதி அசத்திவிட்டார்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...