கசங்கினால் தானே


பயிரைக் கொடுத்துப் பழமும்
தானியம் கொடுத்துக் காய்கறியும்
பண்டமாற்றி வாழ்ந்தனர் பகிர்ந்து

பதுக்கைக் காசுகள் புழங்கிய காலத்தில்
பழமும் கிடைத்தது நமக்கு
பணமென்று தாளில் பதிந்தபின்னர் 
பழமும் எங்கே கிளியே?
நூறு ரூபாயில் இடம் நமக்கு
ஒரு தானியம் உண்டா?
கசங்காமல் கண்டது என்ன?
கசங்கினால் தானே கிளியே
எங்கோ ஒருவர் உணவும்
மற்றொருவர் உடையும்
இன்னுமொருவர் கல்வியும்
பெற்றார் என்றே மகிழலாம்


பதுக்கை - குவியல்

இக்கவிதை 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் நடத்திய தீபாவளி கவிதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றிருக்கிறது. 'ஊற்று' மன்றத்திற்கும் நடுவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்! வெற்றியாளர்களை பார்க்க இந்த இணைப்பில் சொடுக்கவும்.

14 கருத்துகள்:

  1. கவிதை - நல்லதொரு கருத்தைச் சொல்கின்றது..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  2. அருமை சகோ கவிதை பரிசு வெற்றமைக்கு வாழ்த்துகள்
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  3. எனது சகோவின் கவிதைக்கு முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்காமல் ஆறுதல் பரிசுக்கு தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கு எனது கண்டனங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! இது வேறயா! நம் நண்பர்கள் தானே..விட்டுவிடலாம் சகோ :)

      அன்பு நடுவர்களே! நான் பொறுப்பில்லை, சகோ ஏதோ அன்பில் சொல்லுகிறார்...
      ஹஹஹா


      நீக்கு
  4. பரிசு வெற்றமைக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    சகோதரி

    தீபாவளி கவிதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ...தங்களின் இந்தியா முகவரியை தாருங்கள் அனுப்புகிறேன் சான்றிதழ்.... த.ம 3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. சூப்பர். வாழ்த்துக்கள் கிரேஸ்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...