தட்டி விடாமலிருந்திருந்தால்


படம்: நன்றி இணையம்

அடுத்த அறைவரை 
அரிசி மணிகளாய்ச்
சிதறியக்   கோப்பை


சிதறி யிருக்கலாம்
தேங்காய்ச் சில்லாய்

நினைத்த நொடியில் 

கைகுத்திச் சொன்னது

கோப்பையாகவே இருந்திருப்பேன்
தட்டி விடாமலிருந்திருந்தால்!




24 கருத்துகள்:

  1. என்ன செய்ய... அதன் கையில் இல்லையே? தட்டி விட்டுட்டாங்களே...!
    :))))
    தம +1

    பதிலளிநீக்கு
  2. நல்லதோர் சிந்தனையும் கவியும் தொடர வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    அற்புத வரிகள்... இரசித்தேன் த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. தட்டிவிடாமலிருந்தால் இப்படி கவிதை கிடைத்திருக்குமா ?
    அருமை தோழி .

    பதிலளிநீக்கு
  5. ஆளுக்கொரு எண்ணம்.. உடையாமல் இருந்திருக்கலாம் என்பது கோப்பையின் எண்ணம். உடைந்ததுதான் உடைந்தது... அரிசிமணிகளாகிச் சிதறாமல் தேங்காய் சில்லுகளாக உடைந்திருக்கலாம் என்பது அள்ளுபவர் எண்ணம்... உடைந்த கோப்பையும் ஒரு அழகிய சிந்தனையோடு கவிக்கருவானதே என்பது வாசகர் எண்ணம்..

    பதிலளிநீக்கு
  6. எல்லா நிகழ்விற்கும் ஒரு காரணம் இருக்கும் என்று சொல்லப்படுவது போல் கோப்பத் தட்டி விடப்பட்டதால் ஒரு கவிதை பிறந்ததோ...அழகான கவிதை சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா..சில நிகழ்வுகள் கவிதைகளாகின்றன :)
      நன்றி அண்ணா

      நீக்கு
  7. கோப்பை உடைந்தாலும் கவிதை வருதே.. சூப்பர்

    பதிலளிநீக்கு
  8. கோப்பையைத் தட்டி விட்டதால் பிறந்தது ஒரு கவிதை.... பொருள் இழப்பானாலும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா, கோப்பை போய் கவிதை வந்தது டும் ..டும்..டும்..
      :)
      நன்றி அண்ணா

      நீக்கு
  9. கவிப் பொருள் கற்பனை மிகச் சிறப்பு!
    வாழ்த்துக்கள் சகோதரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி இளமதி.
      உண்மையிலேயே கோப்பை உடைந்து கவி கொடுத்தது தோழி :)

      நீக்கு
  10. தட்டிவிட்டதால்தானே ஒரு கவிதை கிடைத்தது.

    பதிலளிநீக்கு
  11. உடைந்த கோப்பைக்கும் கவிதை அருமை.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...