கவியெழுத அமர்ந்தேன்
கன்னியவள் வரவில்லை
தளைசேர்க்கத் தவித்தேன்
தமிழன்னை வரவில்லை
ஏனம்மா கோபம் என்றேன்
ஏதுமில்லை குழந்தாய் என்றாள்
புதுகையில் இருக்கிறேன்
பொறுத்துக்கொள் என்றாள்
அங்கென்ன தாயே என்றேன்
சங்கமம் என்பிள்ளைகள் என்றாள்
நான்வர வேண்டுமே என்றேன்
என்னுடன் இருக்கிறாயே என்றாள்
----------------------------------------------------------------------------------------------------------------------------
வலைப்பதிவர் திருவிழா
வந்துவிட்டதே அருகில்
வலையெனத் தமிழன்னை
வளைக்கிறாள் நம்மை
வருக வருக மகிழ்வுடனே
வலையிலோ நேரிலோ
வலைப்பதிவர் எல்லாம்
வந்திடுவீர் புதுகைக்கே!
தமிழ் வலைப்பதிவர் சின்னம் |
பூமாலையாய் மணக்கின்றது
பதிலளிநீக்குபைந்தமிழ்ப் பாமாலை!..
அருமை.. இனிமை..
வாழ்க நலம்!..
மனமார்ந்த நன்றி ஐயா
நீக்குஅவள்தான் எங்கும் இருக்கிறாளே. நாமும் அவளுடன்தானே இருக்கிறோம். நல்ல சிந்தனை.
பதிலளிநீக்குஆமாம் ஐயா.
நீக்குமிக்க நன்றி
அருமை! திருமிகு.சண்முகராஜா அவர்களுக்கு நன்றி! அழைத்தவிதமும் அருமை! நன்றி
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅழகாக உள்ளது சின்னம்... வரைந்தவர்க்கு வாழ்த்துக்கள் த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்.
நீக்குஆமாம்..
நன்றி சகோ
அருமை அருமை சகோதரி...
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி....
அன்புடன் DD
நம் தளத்தில் இணைத்தாகி விட்டது சகோதரி...
பதிலளிநீக்குஇணைப்பு : →பதிவர்களின் பார்வையில் "பதிவர் திருவிழா-2015"←
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
ஓ மகிழ்ச்சி அண்ணா
நீக்குநன்றி :)
பாமாலை அருமை சகோ இதோ புறப்பட்டு விட்டேன்
பதிலளிநீக்குதமிழ் மணம் 4
நன்றி சகோ
நீக்குநீங்க போறீங்களா.... இல்லையா... ? ஒரே குழப்பமா இருக்கே :-)
சின்னம் அழகு!! உங்கள் அழைப்புக் கவிதை அழகு! சகோ! கலக்குறீங்க !!
பதிலளிநீக்குதமிழன்னை எங்கும் இருக்கின்றாள்.
பதிலளிநீக்குநாமும் வலைப்பதிவர்கள்தானே.. அங்கே போகமுடியாத
ஏக்கத்துடன் இருக்கும் எமக்கு உறுதுணையாக இருக்கின்றாள்!
அழகுக் கவிதை அழைப்பு கிரேஸ்!
சின்னம் மிகச் சிறப்பு!
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ஆமாம் அன்பு இளமதி, உலகெங்கும் தமிழன்னை நமக்கு உறுதுணையாக இருக்கிறாள். மிக்க நன்றி தோழி
நீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமை
தம +1
அருமை.
பதிலளிநீக்குதமிழ்ப் பதிவருக்கான சின்னமும் நன்று.
நன்றி அண்ணா
நீக்குஆமாம்.. :)
ரசித்தேன்... பாராட்டுகள்.
பதிலளிநீக்கு“இரண்டு நாள் முன்னதாகவே வந்திட்டியே மகிழ்ச்சிம்மா.. சரி சரி உள்ள வா!“
பதிலளிநீக்கு“இல்லிங்க எம் மக வரமுடியல.. ஒரு வேள அவ வந்துட்டா என்னத் தேடுவால்ல..? அதான் வாசல்லயே நிக்கிறேன்...“
“சரிம்மா நாங்களும் உன் பிள்ளைகள் தானே? உன் மக எங்க தங்கை தானே..“
“அட..ஆமால்ல..! அப்ப சரி.. வாங்க உள்ள போலாம்“
அண்ணா :) நெகிழ்ந்து போகிறேன்..உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி அண்ணா
நீக்குஅழகான கவிதை போல லோகோவும் சூப்பர் பா.
பதிலளிநீக்குநன்றி தோழி
நீக்குஉங்கள் கவி அருமை...
பதிலளிநீக்குபதிவர் சின்னம் சூப்பர்...
வாழ்த்துக்கள்.
என்னுடனே இருக்கிறாயே என்றாள்,,,,,,
பதிலளிநீக்குஅருமை அருமை மா,
வாழ்த்துக்கள்.
மிக்க நன்றிம்மா
நீக்குகவிதை வழி அழைப்பு! கவின் மிகு சிறப்பு!
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி ஐயா
நீக்குஅருமையான சிந்தனையில் உதித்த கவிதை அற்புதம்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி கிரேஸ்!
பதிலளிநீக்குமின் இலக்கியப் போட்டி முடிவுகள்!
வகை (1)
கணினியில் தமிழ் மற்றும் அறிவியல் போலும் பிறதுறை வளர்ச்சி குறித்த கட்டுரைகள்
மூன்றாம் இடம்
திருமிகு வி.கிரேஸ் பிரதிபா - அமெரிக்கா
18. →கணினி முதல் மேகப் பயன்பாட்டியல் வரை
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
போட்டியில் வெற்றி பெற்றமைக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள் கிரேஸ்!
வணக்கம் அன்புத்தோழி இளமதி.
நீக்குமுடிவுகளைப் பார்த்தவுடன் ஓடோடி வந்து தகவல் சொல்லி வாழ்த்தும் உங்கள் அன்பிற்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் தோழி
உங்கள் கவிதை சிறப்பு; அதை விட நம் தலைவர் முத்துநிலவன் உழைப்பு "அதிக" சிறப்பு. வரும் வரிகளை வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்.
பதிலளிநீக்குமுத்துநிலவன் மற்றும் அவர் குழுவிற்கு என் அநேக நமஸ்காரங்கள்! இப் படை வெற்றி அடையாவிடின் எப்படை வெற்றி கொள்ளும். இனி, அடுத்த பதிவர் விழாவிற்கு புதுக்கோட்டை சந்திப்பை தான் எல்லோரும் உதாரணமாக கொள்வார்கள்------கொள்ளவேன்டும்!
புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு ஒரு Bench Mark--என்று எடுத்துக் கொள்ளவேண்டும். இது மாதிரி இனிமேல் இப்படி ஒரு விழாவை, முத்துநிலவன் குழுக்கள், மாதிரி மற்றவர்கள் நடத்துவது கடினம் என்று சொல்வதைவிட---Impossible---என்று சொல்லலாம்.
முத்துநிலவன் குழு உழைப்ப்பு வாழ்க!
மிக்க நன்றி ஐயா.
நீக்குஉங்கள் வரிகளை வெளியிடுவதில் மகிழ்ச்சி. நீங்கள் சொல்வது உண்மைதான். இனி இதுபோல் நடத்த வேண்டும் என்று மற்றவர் எண்ணுவதும் முயற்சி செய்வதும் நடக்கும். திருமிகு.முத்துநிலவன் அண்ணாவும் புதுகை நண்பர்களும் தமிழ் வலைப்பதிவர்களை அடுத்த நிலைக்கு நகர்த்தி இருக்கிறார்கள். இனி வலைப்பதிவர்கள் இப்பொழுது போல் ஒற்றுமையாக இன்னும் முன்னேற வேண்டும், செய்வோம் என்று நம்புகிறேன்
உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிகள்
நன்றி ஸ்ரீராம்
பதிலளிநீக்குசூப்பர் கவிதை கிரேஸ்
பதிலளிநீக்குநன்றிகள் கிரேஸ்...பொதுவாய் நான் பதிவுகளுக்கு பின்னூட்டமும் ..வாவ்..என்றும் அருமை என்றும் சொல்லிவிட்டு போனனவன் அல்ல......ஏனோ அது பிடிப்பதும் அல்ல...எங்கள் சிறுகூட்டங்களில் உங்கள் பெயர் அடிக்கடி சுற்றுக்கு வரும்...அந்த அளவில் உங்களை அறிவேன்...உங்கள் வலைப்பக்கமும் வந்ததில்லை.....ஆயினும் இந்த பதிவர் சந்திப்பின் சிறுபணிகளில் நானும் இருந்ததில் மகிழ்வு...
பதிலளிநீக்குஉறக்கம் விழிகளை மிரட்டும் அகாலத்தில் உங்கள் பக்கதிற்கு வந்தேன்...உறக்கம் கொஞ்சம் ஓய்வெடுக்க போனது தோழி....நன்றி.....இனி உங்கள் பதிவுகளை நான் பார்ப்பேன்.....
உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி செல்வகுமார். புதுகையில் எனக்குப் பல அன்பு சொந்தங்கள் கிடைத்தது மிகவும் மகிழ்வான விசயம், அதன் மூலம் நீங்கள் என்னை அறிந்திருப்பது நெகிழ்வாய் இருக்கிறது. புதுகை நண்பர்களின் அன்பு பெரிது.
நீக்குவலைப்பதிவர் சந்திப்பிற்கான உங்கள் பணிகளுக்கு நன்றி. ஆமாம், ஏதோ பெயருக்குக் கருத்திட்டுச் செல்வது தேவையில்லை என்றே நானும் கருதுகிறேன். வேலைப் பளுவிலும் விழாவிற்கு முந்தைய நாள் இரவு தூங்காமல் என் தளம் வந்து நட்பின் கரம் கொடுத்து நீங்கள் இட்டிருக்கும் கருத்துரை மகிழ்வு தருகிறது. மனமார்ந்த நன்றி.
உங்கள் புதிய தளத்தையும் இப்பொழுதுதான் அறிந்துகொண்டேன்..இனித் தொடர்வேன். வாழ்த்துகள்!