வடிநிலத்தில் விமான நிலையம்!

மழை பெய்தால் ஓடும் நீரில் கப்பல் விட்டுவிளையாடுவோம். நீரில் கப்பல்...இல்ல இல்ல மன்னிச்சுக்கோங்க...விமானம் விடலாம் என்பது சத்தியமா எனக்குத் தெரியாது!!!

நீர் நிலைகளை அழித்து வீடுகளும் தொழிற்பேட்டைகளும் கட்டப்பட்டது என்று பார்த்தால் ..சர்வ தேச விமான நிலையமே கட்டப்பட்டிருக்கு! முதலில் என் நண்பன் படங்களைப் பகிர்ந்து சொன்னபோது ... அதிர்ச்சியும் அல்லாத கோபமும் அல்லாத ஏதோ ஒரு உணர்வு ஏற்பட்டது!! 


ground view in google maps

aerial view in google maps




வடிநிலத்தில் விமான நிலையம்! ஆற்றின்குறுக்கே ஓடுபாதை!!

விமானத்த ஆத்துல நிப்பாட்டிட்டு விமானத்துல நீர் புகுந்துச்சுனு சொன்னா........... முத்துநிலவன் அண்ணாவின்  பதிவைப் படித்துக்கொள்ளுங்கள்.

முழுப் பூசணிக்காயை சோத்துல மறைக்குறது, அப்டின்னு சொல்வாங்க..இது அதுக்கும் மேல...பொறுக்க முடியாதே ஆறே, என்னில் ஓட வேண்டியவை படகுகள், விமானங்கள் அல்ல என்று பொங்கிவிட்டது!

என்னத்த சொல்ல..  வாழ்க பாரதம்!

நான் நலம்!!! போதும்தானே?!

http://www.ndtv.com/video/player/news/chennai-airport-was-doomed-its-runway-is-built-on-river/393284?livevideo-mostpopular

18 கருத்துகள்:

  1. இந்தியாவின் பல பகுதிகளிலும் இதே நிலை தான். ஆற்றுப் படுகைகளில் வீடுகள், அலுவலகங்கள், கோவில்கள் என பலதும் புதிது புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தடுக்க வேண்டிய அரசு அவற்றுக்கு அனுமதி வழங்கிக் கொண்டிருக்கிறது..... :(

    அதீதமான மக்கள் தொகை, இருக்கும் விளை நிலங்கள் அனைத்தையும், வீட்டு மனைகளாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம்..... ஆறுகளையும், வாய்க்கால்களையும், குளங்களையும் கூட விட்டு வைக்கவில்லை......

    இப்போதைய உடனடித் தேவை - துயரத்தில் தவிக்கும் மக்களை மீட்பது. மழை வெள்ளம் வடிந்த பின்னராவது அரசும், மக்களும் வருங்காலத்தில் இது போன்று நிகழாதிருக்க போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. சகோதரி அவர்களே! நீங்கள் சொல்லிய பிறகுதான் எனக்கும் தெரிய வருகிறது; நீங்கள் சுட்டிய இணைப்புகளையும் பார்த்தேன். தகவலுக்கும் பகிர்வினுக்கும் நன்றி. சிலசமயம் இயற்கையை எதிர்த்தும்தான் வாழ்க்கைப் போராட்டம் அமைய வேண்டி உள்ளது. இனி எதிர்காலத்தில் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  3. ஏற்கெனவே சொல்லப்பட்ட கல்தடுக்கிடுச்சு, முள்குத்திருச்சு வசனம்-
    உன் புதிய வரைபடங்களிலும் உறுதியாகிறதும்மா.
    சொந்த புத்தியில்லாத மனிதர்கள், இயற்கை சொல்லித் தரும் அறிவையாவது பெற்றுக்கொண்டால்தான் எதிர்காலமாவது மிஞ்சும். ஆதாரபூர்வமான பதிவுக்கு நன்றிம்மா. இளைய தலைமுறை இதுபற்றிச் சிந்தித்துச் செயல்படும்னு நம்புகிறேன். எனக்கென்னமோ இந்தச் சென்னையில் போய் எல்லாவற்றையும் ஒரேயடியாகக் குவிப்பதும் ஒரு முக்கிய காரணமாகப் படுகிறது. தலைநகராக சென்னை இருக்கட்டும். நான்கு அல்லது ஐந்து அல்லது 10 மாநகராட்சிகளை அவற்றுடன் ஒட்டிய பகுதிகளோடு இணைத்து துணைத்தலைநகரங்கள் அமைத்து “டீ-சென்ட்ரலைஸ் ஆஃப் பவர்“ செய்தால் கொஞ்சம் நிவாரணம் கிடைக்குமோ என்றும் யோசிக்கத் தோன்றுகிறது. இப்படியெல்லாம் சிந்திக்க வைத்த உன் பதிவுக்கு என்த.ம.6

    பதிலளிநீக்கு
  4. அம்மாவின் விருப்படி காலையில் மலம் கழித்தேன்
    அம்மாவின் விருப்படி சிறுநீர் கழித்தேன்
    அம்மாவின் ஆணைப்படி இரவு உறங்கினேன்
    தமிழர்களின் தன்மானம் எங்கே போனது வெட்கமாக உள்ளது

    பதிலளிநீக்கு
  5. வடி நிலம் எல்லாம் பிரச்னை இல்லை. மக்கள் தொகை ஏறும் போது பல மாற்றங்கள் இயற்கையை மீறி செய்ய வேண்டி உள்ளது. இயற்கை பேரிடர்களை தாங்கும் வலிமை எல்லா இடங்களுக்கும் இல்லை. ஸ்ரீ பெரும்புதூர் அருகே விமான நிலையம் மாற்ற பட்டாலும் வேறு இடர்கள் வரலாம். ஆக ஓரளவிற்கு இவற்றை கவனத்தில் கொள்ளலாம். இல்லை எனில் சென்னை விமான நிலையம் மிக தொலைவில் அமையும். அறிவியல் துணை கொண்டு ஓரளவிற்கு இடர்கள் வந்தால் பிரச்சனையை குறைக்க முடியும்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்

    வாழ்க தமிழ்நாடு... நல்லா வரும்... த.ம7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. இயற்கைக்கு நாம் தரும் தொந்தரவு நம் பக்கம் திரும்பியுள்ளது. சென்னை நிகழ்வு சோதனைமேல் சோதனை என்றளவில் தொடர்கிறது. இயல்பு நிலை திரும்ப பிரார்த்திப்போம்.
    பௌத்த சுவட்டைத்தேடி 23 ஆண்டு களப்பணியில் கண்ட 29 சிலைகளைக்காண அழைக்கிறேன். http://www.ponnibuddha.blogspot.com/2015/12/23-29_4.html

    பதிலளிநீக்கு
  8. நீர்நிலைகள் மக்களின் சொத்தாக இருந்தவரை அது நல்ல பரமரிப்போடு இருந்தது. அரசு கைக்கு போனபின்தான் எல்லாம் காணமல் போனது. மீண்டும் அந்த நீர் ஆதாரங்களை மீட்டெடுப்போம்.

    இது தொடர்புடைய எனது பதிவுகளையும் படித்துப் பாருங்களேன். நேரமிருப்பின்..

    http://senthilmsp.blogspot.com/2015/12/2.html

    பதிலளிநீக்கு
  9. ஆம்! உண்மைதான் க்ரேஸ்! முன்பே தெரியும் விமான நிலையம் எங்கு கட்டப்பட்டிருக்கின்றது என்று அதற்கான ஆதாரமும், வரைபடமும் எனக்குக் கிடைக்கவில்லை அதுவும் நான்கு நாட்கள் பவர் வேறு இல்லை தேட....எப்படித் தெரியும் என்றால் எக்மோர் ம்யூசியத்தில் சென்னை பண்டு என்று வரைபடம் உள்ளது அதைப்பார்ட்தால் தெரிந்து விடும் நமது முந்தைய சென்னை. அப்போது சென்னை முழுவதும் நீர்நிலைகள்...புற நகரில் காடுகள் . புலிகள் கூட வருமாம். இப்போது மனித விலங்குகள் என்று சொல்லுவதில் தவறு இல்லைதானே க்ரேஸ்? விலங்குகளுக்கு 5 அறிவு என்றும் மனிதற்கு 6 அறிவு சிந்திக்கும் அறிவு என்று சொல்லி அந்த 6 வதின் அன்ப்ரொடக்டிவ் சிந்தனைதானே இத்தனை பாதிப்புகள்?

    இப்போது மேற்குமாம்பலம் ஏரியா அதைச் சுற்றி உள்ள பகுதிகள் எல்லாமே ஏரியாகவும் ஏரிக்கு அருகிலும் உள்ள பகுதிகளே. மேற்கு மாம்பலத்தில் லேக்வியூ ரோடு என்ற ரோடே உள்ளது. கனால் ப்ங்க் ரோடு என்று பல உள்ளன சென்னையில் ஆனால் கனாலை நீங்கள் தேடத்தான் வேண்டும். அன்று நாம் பள்ளியில் பூகோளத்தில் படித்த வரைபடத்தில் உள்ள பல நதிகள் இன்று வரைபடத்தில் தேட வேண்டிய நிலை. யார் காரணம் ?

    இனியேனும் நாம் திருந்தாவிட்டால் மதுரைத் தமிழன் சொன்னது போல் எதிர்காலத்ட் தலைமுறையினர் அழிந்து போவர். இல்லையேல் நான் நினைப்பது போல தூர தேசம் சென்றுவிடுவர் அயல்நாடுகளுக்கு......

    கீதா

    பதிலளிநீக்கு
  10. தொண்டர்களை
    கடவுளின் பிள்ளைகளாக
    வணங்குகின்றேன்

    வானிலிருந்து - கடவுள்
    தன் திருவிளையாடலைக் காட்ட
    தரையிலிருந்து - மக்கள்
    துயருறும் நிலை தொடராமலிருக்க
    கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

    போதும் போதும் கடவுளே! - உன்
    திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

    பதிலளிநீக்கு
  11. காலமாற்றங்களிற்கு ஏற்ப நகரம் கட்டமைக்கப்படும் போது இம்மாதிரி மாற்றங்கள் நடைபெறுவது இயல்பே!

    ஓடும் நதிகள் தம் போக்கினை மாற்றி ஓடுவதும் மீண்டும் பல நூறாண்டு சென்று பழைய வழி திரும்புவதும் உண்டென நீர்வழிக்குரிய ஆய்வுகள் பல சொல்கின்றன.

    சென்னை வெள்ளத்தினை பொறுத்தவரை இயற்கையை விட செயற்கையாக உருவாக்கப்ட்ட தகுந்த முன்னெச்சரிக்கையும்,
    ஏற்பாடுகளும், வடிகான் வசதிகளும் இல்லாமையே பேரிடருக்கும், இழப்புக்களுக்கும் அடிப்படைக்காரணங்கள்.

    அத்தோடு மேலே வானத்திலிருந்து கொட்டும் நீர் நிலமானது உறிஞ்சி கீழே செல்லும் போது அவை நிலத்தடி நீராக மாறும் வாய்ப்பையும் நாம் விட்டு வைக்கவில்லையே! மண நிலங்கள், சதுப்பு நிலங்கள்,சரளைக்கற்கள், களிமண் நிலங்கள் என இயற்கையின் கொடைகளில் கால் பட்டாலே குற்றம் என்பது போல் காணுமிடமெல்லாம் கான்கிரிட் தரை போட்டு விட்டோம். இந்த சூழலில் நீர் நிலத்தில் கீழ் உறிஞ்சப்படும் வாய்ப்பும், நதியோடு சேர்ந்து கடலோடு இணையும் வடிகான் வசதியும் இல்லாத சூழலில் வெள்ள வாய்ப்பு நதியோரம் இல்லாத இடங்களியேயே அதிகம் தான். நதியோரங்கள் எனும் போது பாதிப்பு இன்னும் அதிகமாகத்தான் செய்யும். ஓடிய நதியினை செயற்கையாக தடை செய்து அதன் மேல் கட்டடங்களை எழுப்பினார்களா என தெரியவில்லை.

    அப்படி இருந்தால் இனி வரும் நாட்களில் மிகவும் பாதிப்புக்குரிய இடங்களாக அவை இருக்கும்.

    கடல் மட்டமானது உயர்ந்திருக்கும் சூழலில் அண்டாட்டிக்கா போனற பிரதேச பனிப்பிரதேசங்கள் உட்பட குளிர்ப்பிரதேசங்கள் பருவமாற்றங்களுக்கு ஆட்பட்டு பனிமலைகளுருகுவதால் கடல் மட்டம் இன்னும் உயரும் வாய்ப்புண்டென விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கும் சூழலில் இனியேனும் விழிப்புடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் நல்லது.

    பதிலளிநீக்கு
  12. சுயநல ஆரசியல் வாதிகள் உள்ளவரை இதுதான் நடக்கும்!

    பதிலளிநீக்கு
  13. அறசீற்றம்
    எல்லாம் மறந்தாச்சு ...
    ஜூன் இங்கேதானே லாண்டிங் ?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...