செயல்முரண், சாமானியன்



தாகம் தாகம் என்று குழந்தைகள் 
ஏங்கி வாட உள்ளம் பதைத்தவள்
அங்கும் இங்கும் சேர்த்து முகிலினில்
பாங்காய்க் கொண்டு வந்தாள் தணித்திட!

வீண்வீண் என்று அன்னை உழல்கிறாள் 
பிள்ளை சேரும் பாதை அறியாமல்!
அல்லல் செய்த மாந்தர் மறுகுதல்
வெள்ளம் வெள்ளம் என்று - செயல்முரண் ! 
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


கட்டிடம் காசென நினைத்து
எவ்விடம் இவ்விடம் ஆராயாது 
முதல் செய்தவரும் பணம் செய்தவரும்
எங்கோ பத்திரம், அலை மோதுவது
சம்பந்தமில்லா சாமானியன்
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~







17 கருத்துகள்:

  1. உண்மைதான் சகோதரியாரே
    சமானியனுக்கே அத்துனை தொல்லைகளும்
    தம 1

    பதிலளிநீக்கு
  2. அருமை! உண்மையும் இதுதான்...

    இதைப் பற்றிய ஒரு பதிவு தயாராகிக் கொண்டிருக்கின்றது...தாங்கள் மிக அழகாகச் சுருக்கமாகக் கவிதையிலேயே சொல்லிவிட்டீர்கள்...

    பதிலளிநீக்கு
  3. இங்குள்ள அவல நிலையை அப்படியே நேரில் பார்த்தது போல் சாெல்கிறாயே கிரேஸ். மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! மகிழ்ச்சி சீதா :-)
      சிறு மழைக்கும் நம்மூர் படும்பாடு பார்த்திருக்கிறோமே

      நீக்கு
  4. உண்மை..மா....தன்னாலேயே அழிகிறது மனித இனம்

    பதிலளிநீக்கு
  5. வெள்ளம் சொன்ன உள்ளம்...
    கள்ளமில்லா கவிதை

    பதிலளிநீக்கு
  6. உண்மை நிலையை உணர்த்தும் கவிதைகள்! அருமை!

    பதிலளிநீக்கு
  7. துன்பம் யாவும் சாமானியனுக்கே.... இதுவும் இறைவன் செயலாம்...
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
  8. சிறுவயதில் 3 நாட்கள் அல்ல... 3 மாதங்கள் பெய்யும்...!

    பதில் என்ன ஐயா..? (http://valarumkavithai.blogspot.com/2015/11/blog-post_10.html)

    பதிலளிநீக்கு
  9. வருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  10. வேதனை தரும் விஷயம். மழைத்தண்ணீர் அனைத்தும் விரயமாகிறதே.....

    ஏரிகள் அனைத்தையும் வீடாக்கிவிட்டு திண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...