புயலை ஆற்று



மழையென  மகிழவா?
அழிவென வருந்தவா? 
பிழையது எமதுதான்
வழியெதும் உரைத்திடு
வழக்கைநீ செவிமடு
பிழையதுப் பொறுத்திடு 


இயற்கை அன்னாய்
புயலை ஆற்று
தவறு செய்தோம்
தலையில் கொட்டு
அழிவு வேண்டாம்
தயைநீ காட்டு 

12 கருத்துகள்:

  1. உண்மை கிரேஸ் .. நல்லா சொன்னீங்க

    பதிலளிநீக்கு
  2. இயற்கையிடம் நம் கைவரிசையை காண்பித்தால், அது தன் பதிலடியை இப்படித் தான் கொடுக்கிறது. இயற்கையை காத்தல் அவசியம். இதை நாம் உணர்தல் வேண்டும்.

    நல்ல கவிதை தோழி. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. இதுவும் கடந்து போகும்!..

    இனியாவது மக்கள் திருந்தட்டும்!..

    பதிலளிநீக்கு
  4. இயற்கையும் எங்களுக்கோர் தாய் தானே !வேண்டுதல் நிறைவேறும் இனிய கவிதை தொடர வாழ்த்துக்கள் தோழி .

    பதிலளிநீக்கு
  5. சொற்கள் சாந்தத்தை உண்டாக்கிவிடும் அளவு உள்ளன. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. நல்லாருக்கு சகோ! ம்ம்ம் இயற்கைச் சீற்றமே மனிதன் செய்யும் தவறுகளால் அதுவும் சுயநலத்தினால்...

    பதிலளிநீக்கு
  7. அருமை.

    ஒரு சந்தேகம்.. அன்னாய் என்று அன்னையை விளிக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
  8. அருமை சகோதரியாரே
    இயற்கை தயவு காட்டட்டும்
    தம +1

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...