சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
வெள்ளையராட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த நம் மக்கள் வீறுகொண்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வீறுகொண்ட பாடல்களை பாடினர் பல கவிஞர்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகள். பாடல்களின் வலிமையை உணர்ந்தவர்கள் அவர்கள்! எழுச்சிப் பாடல்களைக் கேட்ட மக்களும் தங்கள் பங்கை உணர்ந்து செயல்பட்டனர். சுதந்திரம் பெற்றோம், காலப்போக்கில் அதன் மகத்துவத்தை மறந்தும்போனோம். கொடிபிடித்துச் சென்று அடிவாங்கிய குமரனுக்கு அல்லவா அந்த வலி தெரியும்? இன்னும் அவருடன் சென்றவர்களுக்கும் பார்த்தவர்களுக்கும் தெரிந்திருக்கும். அவர்கள் மறைந்த பின்னர், சுதந்திரம் என்ன, அதன் பெருமை என்ன, சுதந்திரம் பெறுவதற்கு எத்தனை தியாகங்கள் செய்யப்பட்டன என்று எல்லாம் தெரியாமல் ஒரு சமூகம் வளர்ந்துகொண்டிருக்கிறது.
கண்ணியம் இன்றி பேசவும், எழுதவும் மற்றவரைக் குறிப்பாகப் பெண்களை இழிவு படுத்துவதைச் சுதந்திரம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றன சில இழிபதர்கள்!
கண்ணியம் இன்றி பேசவும், எழுதவும் மற்றவரைக் குறிப்பாகப் பெண்களை இழிவு படுத்துவதைச் சுதந்திரம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றன சில இழிபதர்கள்!
வடிநிலத்தில் விமான நிலையம்!
மழை பெய்தால் ஓடும் நீரில் கப்பல் விட்டுவிளையாடுவோம். நீரில் கப்பல்...இல்ல இல்ல மன்னிச்சுக்கோங்க...விமானம் விடலாம் என்பது சத்தியமா எனக்குத் தெரியாது!!!
நீர் நிலைகளை அழித்து வீடுகளும் தொழிற்பேட்டைகளும் கட்டப்பட்டது என்று பார்த்தால் ..சர்வ தேச விமான நிலையமே கட்டப்பட்டிருக்கு! முதலில் என் நண்பன் படங்களைப் பகிர்ந்து சொன்னபோது ... அதிர்ச்சியும் அல்லாத கோபமும் அல்லாத ஏதோ ஒரு உணர்வு ஏற்பட்டது!!
நீர் நிலைகளை அழித்து வீடுகளும் தொழிற்பேட்டைகளும் கட்டப்பட்டது என்று பார்த்தால் ..சர்வ தேச விமான நிலையமே கட்டப்பட்டிருக்கு! முதலில் என் நண்பன் படங்களைப் பகிர்ந்து சொன்னபோது ... அதிர்ச்சியும் அல்லாத கோபமும் அல்லாத ஏதோ ஒரு உணர்வு ஏற்பட்டது!!
![]() |
ground view in google maps |
![]() |
aerial view in google maps |
மதுர மதுரை
மதுரை! இனிய நினைவுகளுடன் உணர்வில் கலந்த மதுரமான ஊர். மதுரை பற்றிய நினைவுகள் என் சிறு வயதிலிருந்தே மனதில் பதிந்தவை. கொடைக்கானலில் இருந்து விடுமுறைக்கு பெரியம்மா வீட்டிற்கு வரும் மகிழ்ச்சி இன்னும் மனதில். அப்பொழுது பெரியம்மா வீட்டில் மின்விசிறிக்கு அடியில் படுத்துக்கொண்டு, அதன் நடுவே இருக்கும் கலைநயம் பொருந்திய கோப்பையைப் பயத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன், கழண்டு மேலே விழுந்துவிடுமோ என்று!
கடவுளைக் கண்டேன் (3)
கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் சொன்னாரோ இல்லையோ அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு கனவு காண்கிறார்கள். ஆனால் இங்கு ஒருவர், அதுதாங்க பெரிய மீசைக்காரர், கில்லர்ஜி , அதையே போட்டியாக்கிவிட்டார், கடவுளைக் கண்டேன் (1). சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இது போட்டிதானே? பத்து பேரை மற்றவருக்கு முன் நாம் பிடிக்க வேண்டுமே! இதில் என் அன்புச் சகோதரி கீதா இரண்டாம் பத்தைப் பிடித்துவிட்டார்கள், கடவுளைக் கண்டேன் (2).
ஆசையே அலை போலே, நாமெல்லாம் அதன் மேலே...
ஒன்றா....ரெண்டா..ஆசைகள்! ...
படைவீரர் நாள் Veterans Day
இன்று, நவம்பர் 11ஆம் நாள், Veterans Day! தேசப்பாதுகாப்பிற்காகத் தங்களை அர்ப்பணித்த வீரர்களை நினைவுகூர்ந்து நம் நன்றியைத் தெரிவிக்கக் கொண்டாடப்படுவது.
முதலாம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாக ஜூன் 28, 1919 இல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு ஏழு மாதங்களுக்கு முன்னர் நவம்பர் 11 ஆம் நாள் பதினோறாவது மணிநேரத்தில் கூட்டுப் படைகளுக்கும் ஜெர்மன் படைகளுக்கும் இடையே தற்காலிக போர்நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.
முதலாம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாக ஜூன் 28, 1919 இல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு ஏழு மாதங்களுக்கு முன்னர் நவம்பர் 11 ஆம் நாள் பதினோறாவது மணிநேரத்தில் கூட்டுப் படைகளுக்கும் ஜெர்மன் படைகளுக்கும் இடையே தற்காலிக போர்நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.
கொள்ளிக் கண்கள்
வானத்தின் சினத்தால் துயருற்ற பூமி தன் எதிர்ப்பைக் காட்டக் கரும்போர்வை போர்த்திக்கொண்டிருந்தது.
வலைப்பதிவர் திருவிழா நேரடி ஒளிபரப்பு
வலைப்பதிவர் திருவிழா நேரடி ஒளிபரப்பைக் கண்டுகளியுங்கள்
https://www.youtube.com/watch?v=qNmGS8kniK4
விழாக்குழுவினருக்கும் UK infotech நிறுவனத்திற்கும் மனம் நிறைந்த நன்றி.
https://www.youtube.com/watch?v=qNmGS8kniK4
விழாக்குழுவினருக்கும் UK infotech நிறுவனத்திற்கும் மனம் நிறைந்த நன்றி.
மழைக்காடுகள் காக்கும் அலைபேசிகள்
அலைபேசி!
தொழில்நுட்ப வளர்ச்சியின் செல்லக் குழந்தை. தொலைவில் உள்ளவர்களுடன் பேசுவதற்கு
என்ற உபயோகத்தைத் தாண்டி, குறுஞ்செய்தி அனுப்புவது, படங்கள் அனுப்புவது என்று
முன்னேறி இன்று உலகை நம் கையில் கொண்டுவரும் அலைபேசி, தொலையும் மழைக்காடுகளையும்
காக்கப் பயன்படுவது மகிழ்வான விசயம். அதுவும் ஒரு இளைஞரின் ஆக்கபூர்வ
சிந்தனையாலும் உழைப்பாலும் கண்டுபிடிக்கப்பட்டது என்பது கூடுதல் மகிழ்ச்சியும்
நம்பிக்கையும் தருகிறது.
அலையும் நுரையும் கடலல்ல
சுற்றுலா என்று மலைப்பிரதேசத்திற்கும் கடற்கரைக்கும்
செல்கிறோம். பசுமையைப் பார்த்து பரவசமாகிறோம். அலைகளைப் பார்த்து ஆர்ப்பரிக்கிறோம்.
ஆனால் இவ்விடங்கள் சில ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நாம்
யோசிப்பதில்லை. நம் தாத்தா பாட்டன் காலத்திலும் அதற்கு முன்னும் எப்படி இருந்திருக்கும்?
வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால்
கணினி முதல் மேகப் பயன்பாட்டியல் வரை
தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்கள் தோன்றிய காலத்தில் (1855) இருந்த தமிழின்
நிலைக்கும் அவர்கள் மறைந்த காலத்தில் (1942) தமிழ் உயர்ந்துநின்ற நிலைக்கும்
எவ்வளவோ வேற்றுமை உண்டு என்று கி.வா.ஜகநாதன் அவர்கள் திரு.உ.வே.சா. அவர்களின்
வாழ்க்கை வரலாறான ‘என் சரித்திரம்’ நூலின் முன்னுரையில் சொல்லியிருப்பார். தமிழ்த்
தாத்தா தோன்றிய காலத்தில் புலவர்களுக்கும் பெயரளவில் மட்டுமே தெரிந்திருந்த சங்க
இலக்கியங்கள் பின்னர் தமிழ்த்தாத்தா மறைந்ததற்குப் பின்னான காலத்தில்
பள்ளிக்கூடங்களிலும் கற்றுக்கொடுக்கப் படுகின்றன என்று சொல்லியிருப்பார்.
கட்டுக்குள் வருமாக் கரிமக் கால்தடம்?
மனிதனின், விலங்குகளின், பறவைகளின், செடிகொடிகளின் - பூமியின் வாழ்வாதாரம் சுற்றுச்சூழல். நாம் பார்க்கும், உணரும், சுவாசிக்கும், கேட்கும், நுகரும் அனைத்துமே நம் சுற்றுச்சூழல் தான். உண்ணும் உணவு, குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று என்று அனைத்தும் சுற்றுச்சூழலிருந்தே அனைத்து உயிர்களுக்கும் கிடைக்கின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச் சூழலுக்கு நாம் என்ன செய்கிறோம், நம் செயல்களால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது பற்றிய விழிப்புணர்வு நமக்குக் கண்டிப்பாக வேண்டும்.
கட்டுரை எழுதப் போறேன், காசு வாங்க போறேன்
இதனால் நம் அன்புத் தமிழ் வலைப்பதிவர்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால்... திருமயக்கோட்டை நாட்டுக்காரங்க , அதாகப் பட்டது புதுக்கோட்டைப் பதிவர்கள், பதிவர் திருவிழாவிற்கு நம்மை எல்லாம் அழைத்திருக்கிறார்கள். இது நாம் அறிந்ததே! இப்போ நம்ம வலைத்தளத் தமிழ் திறமையைச் சோதிக்கப் போட்டி வைக்கிறாங்களாம். கட்டுரையாம், கவிதையாம்...பரிசு..ஒன்றல்ல! இரண்டல்ல! ஐம்பதாயிரம்! ஐம்பதாயிரம்! யாருக்கோ இல்லை, நமக்கே நமக்குத் தான்.
மூளையின் கதை - பாகம் 5
அன்று விடுமுறை, தாமதமாக எழுந்து உணவருந்திவிட்டுத் தொலைக்காட்சியில் ஒன்றினான் நம்முள் ஒருவன்..அதுதான் அவன் பெயர்! மீண்டும் உணவருந்தி ஒரு குட்டித் தூக்கம் போட்டபின் எங்கேயாவது வெளியேப் போகலாம் என்று கிளம்பிச் சென்றவன் வண்ணத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தக் காட்சியகத்தைப் பார்த்தான். கண்ணாடிக் சுவர்களுக்குள் பல வண்ணக் கார்கள். ஆஹா, போய்ப் பார்க்கலாம் என்று உள்ளே சென்றான். "மே ஐ ஹெல்ப் யூ?" என்று வந்த விற்பனைப் பிரதிநிதியிடம் விசாரித்துக் கொண்டேப் பல கார்களையும் தொட்டும் உட்கார்ந்தும் பார்த்தான். இரண்டு வண்டிகளை ஓட்டியும் பார்த்து இறுதியில் சிவந்த நிறத்தில் எச்சரிக்கை செய்த காரை வாங்கப் பதிவு செய்து முன்பணம் கட்டிவிட்டு வந்தான்.
அவனுக்குக் கார் தேவையும் இல்லை, அதற்குத் தேவையான பணமும் இல்லை. பிறகு ஏன் நம்முள் ஒருவன் காரை வாங்கினான்?
முகத்திரண்டு புண்ணுடையார் யார்?
சுதந்திர தினத்தன்று 'ப்ரீடம் மேலா' (freedom mela) என்று கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர், இங்கிருக்கும் இந்திய நண்பர்கள். ஆஹா! பிள்ளைகள் நம் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதில் பங்கேற்கட்டும் என்று ஆர்வமுடன் பதிவு செய்து, குடும்பத்துடன் சென்றோம். ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூங்காவிற்கு ஒரு மைல் தூரத்திலேயே அவ்வளவு போக்குவரத்து நெரிசல். சற்றுத் தள்ளியிருந்த வணிக வளாகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு நடந்தோம். பூங்காவிற்குள் நுழையும் இடத்தில் வரிசையாக இந்திய மற்றும் அமெரிக்க நாட்டுக் கொடிகள்! பிள்ளைகள் ஆர்வமுடன் சல்யூட் செய்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். இது வரைக்கும் நல்லாப் போச்சு..பிறகு? வாங்க, காண்பிக்கிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
'பேதையல்ல பெண் மேதை' - மகளிர் நாள் சிறப்புக் கவியரங்கம்
சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் - சுவீடன் இலண்டன் தமிழ் வானொலி மற்றும் உலகப் பெண் கவிஞர் பேரவை இணைந்து வழங்கும் "பேதையல்ல பெண் மேதை" ...

-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு 2, பாடியவர் ஓரம்போகியார் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல். "வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...