பாரதி சொல் கேளீர்!

அக்கம்பக்கத்து குழந்தைகள் ஒன்றாக விளையாட ஒரே சத்தமாக இருக்கும் என்னுடைய குழந்தைப்பருவம். எத்தனை குழந்தைகள் என்றே தெரியாது, அனைவரும் ஒன்று கூடி விளையாடுவோம். அந்த ஓட்டமும் விளையாட்டும், சிரிப்பும் சண்டைகளும் மனதில் இனிமையாய் பதிந்துள்ளன. இன்று அந்த சத்தம் கேட்கிறதா? தெருவில் நடந்து போனால் பலர் பேசுவதும் இசை மீட்டுவதும் கேட்கும்.ஆச்சர்யப்படாதீர்கள்! உண்மையாகச்  சத்தம் கேட்கும், ஆனால் தொலைக்காட்சியில்!!
ஓடி விளையாடு பாப்பா என்று அழகாகக் கற்றுக் கொடுத்தான் என் மரியாதைக்குரிய பாரதி. கூடி விளையாடவும் சொன்னான். இன்று குழந்தைகள் ஓடி விளையாடுவதுமில்லை, கூடி விளையாடுவதுமில்லை. கணிப்பொரியுடனும் சந்தையில் உள்ள பல நிகழ் பட விளையாட்டுகளையும் தான் விளையாடுகின்றனர். சில வீடுகளில் அதற்கு கூட கூடுவதில்லை - அறைக்கு ஒரு தொலைக்காட்சி!
தொழில்நுட்ப வளர்ச்சியை அரவணைத்துக் கொள்ள வேண்டியதுதான், தவறில்லை. ஆனால் ஒரு வரையரை இருக்க வேண்டும். குழந்தைகள் ஓடி விளையாடுவதும் கூடி விளையாடுவதும் எந்த தொழிற்நுட்ப வளர்ச்சியினும் மேலான ஒன்று, மிகவும் தேவையான ஒன்று. 
படிப்பு, பட்டம், பணம் என்று இவற்றின் பின்னர் ஓடுவதையே வாழ்வாக்கி விட்டோம் நாம். இந்த ஓட்டத்தில் குழந்தைகளின், வருங்கால தலைமுறையினரின், மனித இனத்தின் ஆரோக்கியத்தை பின்னோக்கி ஓட வைக்கிறோம்.
"ஓடி விளையாடு பாப்பா 
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா" என்று சொன்ன பாரதி, "நெஞ்சு பொறுக்குதில்லையே..." என்று வருந்துமாறு இன்றைய குழந்தைகள் ஓடி விளையாடாமல் தொலைக்காட்சி முன்னால் ஓய்ந்திருப்பதுதான் அதிகம். சிந்திப்போம்!
பாரதியைப் பயின்றாலே, அவர் சொன்ன வழிகளைப் பின்பற்றினாலே சமுதாயம் ஏற்றம் பெறும் என்பது என் கருத்து. 
"ஒளி  படைத்த கண்ணினாய் வா", "காவியம் செய்வோம்",  என்று ஒவ்வொரு குழந்தையையும் அழைக்கிறார் பாரதி. மனதில் உறுதி பெற்று, நல்லவை எண்ணி, எண்ணியவை முடிக்க, நல்லதொரு புதிய சமுதாயம் செய்ய உறுதி எடுப்போம். வருங்கால தலைமுறையினரை வழிநடத்துவோம்.

5 கருத்துகள்:

  1. /// தொலைக்காட்சி முன்னால் ஓய்ந்திருப்பதுதான் அதிகம். ///

    நாமும் முதலில் மாறுவோமே...

    பல நல்ல கருத்துகளுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! நாம் தான் வழிகாட்ட வேண்டும்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!

      நீக்கு
  2. மிக சரியாக சொன்னீங்க கிரேஸ்.. சிறு வயதில் தெருவில் பம்பரம் விளையாடியது, பட்டம் விட்டது நினைவுக்கு வருகிறது. இக்காட்சிகள் எல்லாம் இன்று அரிதாகி போய் விட்டது. வீடு - பள்ளி - டியூஷன் என குழந்தைகளின் வாழ்வும் இயந்திரமயமாகி விட்டது

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு வழிமுறையை நினைவுபடுத்தியுள்ளீர்கள்.
    நன்று.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...