மழை

கருமையான சாலையில் விழுந்து சிதறிய  நீர்த் துளிகள்
கண்ணகியின் சிலம்பிலிருந்து  சிதறிய முத்துக்கள்;
கூரை மேல் மெலிதாக ஒலித்த பெயலின் ஓசை
கச்சேரியில் கேட்கும் இனிமையான மத்தள இசை;
கவிழ்ந்து நளினமாய் ஆடும் இலைகள்
கவின் காட்சியை ரசிக்கும் என் கண் இமைகள்;

4 கருத்துகள்:

  1. ஆஹா..அருமையான வரிகள் கிரேஸ். பெயல் என்ற சொல்லை தெரிந்துக் கொண்டேன்.. நன்றி!!

    பதிலளிநீக்கு
  2. வித்தியாசமான அழகான கற்பனை
    அருமையான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி திரு.ரமணி! மழை நீர் தெறிப்பதைப் பார்க்கும்பொழுது அப்படித் தோன்றியது.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...