இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
இயற்கை குறித்த தெளிந்த புரிதலும் அறிவும் பெற்று
நிலத்தை அதன் தன்மை பொறுத்து ஐந்து வகையாகப் பிரித்து
இயற்கையுடன் இயைந்த வாழ்வு நடத்திய குடி என் தமிழ் குடி!
நில வகை ஐந்திற்கும் அந்த அந்த நிலத்தில் மலர்ந்த மலரால்
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று பெயர் வைத்து
நில வகைக்கு ஏற்ப உணவு பண்பாடு பொழுது போக்கு அனைத்தும் வகுத்து
சீரான இனிய வாழ்வு வாழ்ந்த நல்ல குடி என் தமிழ் குடி!
அறமும் வீரமும் வேறு வேறாய் இல்லாமல்
இனிய இல்லறமும் வீர நாட்டுப் பற்றும் கொண்டு
இல்லமும் நாடும் காத்து சொல் வன்மையும் அறிவும் செறிவும்
அழகாக இணைந்த வாழ்வு வாழ்ந்த நல்ல குடி என் தமிழ் குடி!
ஞாலத்தின் பல நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே
முதலாய்த் தோன்றி மூத்த நாகரிகங்களில் ஒன்றாய் உயர்ந்ததாய்
இளமை குன்றாமல் இனிமையும் ஈர்ப்பும் மேலும் மேலும் பெருகி
தொன்று தொட்டுச் சிறப்பாய் விளங்கும் குடி என் தமிழ் குடி!
உண்மையை அழகாய் சொல்லி இருக்கீங்க கிரேஸ்.. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி !!
பதிலளிநீக்கு