தமிழ்க் காதல்!

அசைவளி கொணர்ந்த அதிரல் நறுமணம்
எழிலி கண்டுவிரிந்த மஞ்ஞை தோகை
பெரும்பெயல் பொழிந்து குளிர்ந்த மாடம்
இவற்றினும் மேலாக உள்ளம் உகளத்
தமிழே நீ வேண்டும் என்பதே என் நசை!

இக்கவிதையில் உள்ள சில சொற்களின் அர்த்தங்கள்:
எழிலி - மேகம்
மஞ்ஞை - மயில்
பெரும்பெயல் - பெருமழை
உகள - துள்ள
நசை - விருப்பம் 

6 கருத்துகள்:

 1. அற்புதம் கிரேஸ்!!.. உங்கள் தமிழ் ஆளுமையை காட்டும் மற்றும் ஒரு பாடல்...'அசைவளி','அதிரல்' என்பதும் எனக்கு புதிய வார்த்தையே :-)

  பதிலளிநீக்கு
 2. அன்பின் கிரேஸ்

  அருமையான் கவிதை - இலக்கியத்தில் மட்டுமே பயன்படுத்தும் சொற்கள் இக்கவிதையில் இயல்பாகப் பயன் படுத்தியது பாராட்டுக்குரியது. நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 3. அன்பின் கிரேஸ்

  கவிதை அருமை - இலக்கியத்தின் இயல்பான சொற்களைப் பயன்படுத்தியமை நன்று. பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 4. நல்ல வேலை சொற்களின் அர்த்தங்களை கொடுத்தீங்க, இல்லைனா திரு திருனு முழிச்சிசிகிட்டு இருந்திருப்பேன் ! படிக்கிற காலத்தில ஒழுங்கா படிச்சாதானே :)

  அப்புறம் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியதற்கு நன்றி சகோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி திரு.சூர்யப்ரகாஷ்!

   ஹாஹா பள்ளியில் இந்தச் சொற்கள் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்..இப்பொழுது வாசித்து அறிந்ததே!

   நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

தமிழ் இனி - முத்தமிழ் விழா கவிதைப் போட்டி

  தமிழ் இனி தொண்டைத் தொன்மொழி தமிழ் பண்டைச் செம்மொழி தமிழ் அண்மை மீநுண் நுட்பத்திலும் திண்மை குன்றாநம் தமிழ் எண்ணிப் பார்க்கும் போதெல்லாம் ச...