சிறுமழைத் தாளம்

கருக்கலில் வானம் பகலவனை எதிர்பார்த்திருக்க
மாணவரும் பெற்றோரும் பள்ளிப் பேருந்திற்குக் காத்திருக்க
கார் மேகங்கள் குழந்தைகளைக் கண்டு உள்ளக் கிளர்ச்சி கொண்டனவோ
சட சடவென வான் முகந்த நீரை  வெண் முத்துக்களாய்ச் சிதறித் தாளமிட
குழந்தைகள் குதூகலித்தே துள்ள பெற்றோர் ஐயோ மழை என்று பதற
மனம் தடுமாறிய மேகங்கள் தாளத்தை நிறுத்தி நகர்ந்தனவே!


6 கருத்துகள்:

  1. ஆஹா.. அற்புதமான கற்பனை.. அழகான கவிதை !!

    பதிலளிநீக்கு
  2. ''...சட சடவென வான் முகந்த நீரை வெண் முத்துக்களாய்ச் சிதறித் தாளமிட
    குழந்தைகள் குதூகலித்தே துள்ள பெற்றோர் ஐயோ மழை என்று பதற
    மனம் தடுமாறிய மேகங்கள் தாளத்தை நிறுத்தி நகர்ந்தனவே!...''

    நன்று. ரசிக்கும்படியுள்ளது
    இனிய நல்வாழ்த்து...அன்புறவே.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்தும் கருத்துரைக்கும் நன்றி திருமதி.வேதா அவர்களே!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

டேடிங் செய்ய அனுமதிப்பது நன்மை கூட்டும் / தீமை பெருக்கும் - பட்டிமன்றம்

 நியூஜெர்சி சன்ரைஸ் ரேடியோ நடத்திய காதலர் நாள் சிறப்புப் பட்டிமன்றம். வாய்ப்பளித்த NJSunrise ரேடியோ ஷோபா அவர்களுக்கும் திரு. ஆல்ப்ரெட் தியாக...