ஐ ஸ்பீக் இங்கிலீஷ், ஷால் ஐ டெல் யூ அபௌட் தமிழ்?

நற்றிணை நல்ல குறுந்தொகை அறிவாயோ
ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து அறிவாயோ
ஓங்கு பரிபாடல் படித்தாயோ
கற்றறிந்தார் ஏற்றும் கலித்தொகை கண்டாயோ
அகம் புறம் என்று இரு நானூறு பயின்றாயோ
இந்த எட்டுத்தொகையும் சொல்லும்  அகம் புறம் பற்றி அறிவாயோ!

முருகராற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
மலைப்படுகடாம் மதுரைக்காஞ்சி
குறிஞ்சிப்பாட்டு முல்லைப்பாட்டு
பட்டினப்பாலை  நெடுநல்வாடை
என்று பத்துப் பாட்டும்  சொல்லும் இயற்கையும் வாழ்வும் அறிவாயோ!

இவை ஏதும் அறியாமல் 'ஹலோ' 'ஹாய்' என்று சிலாகித்து
'ஐ ஸ்பீக் இங்கிலீஷ் ' என்று வெட்டி பெருமை பாராட்டிக் கொண்டு
கண் மூடியிருக்கும் தமிழா!
நீதி நூல்களும் இலக்கியச் செல்வமும் நிறைந்த தமிழைப் பார்!
படித்து அறிந்து கண்ணைத் திற! உண்மையான பெருமை கொள்!
'ஐ ஸ்பீக் இங்கிலீஷ், ஷால் ஐ டெல் யூ அபௌட் தமிழ்'
என்று இறுமாந்து தாய் மொழியை எவ்விடமும் கொண்டு செல்வாயோ!




3 கருத்துகள்:

  1. உண்மை...சங்க நூல்களை தொகுத்த விதம் அருமை கிரேஸ்..

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் அக்கா,

    சங்க இலக்கியங்களைத் தொகுத்து அவற்றின் சிறப்பினையும், தமிழின் பெருமையையும் கூறியுள்ள கவிதை சிறப்பு அக்கா...

    இவை ஏதும் அறியாமல் 'ஹலோ' 'ஹாய்' என்று சிலாகித்து
    'ஐ ஸ்பீக் இங்கிலீஷ் ' என்று வெட்டி பெருமை பாராட்டிக் கொண்டு
    கண் மூடியிருக்கும் தமிழா!////////////////// உண்மை தான்.

    மிகவும் பிடித்த பா... பாராட்டுகள்.
    தமிழைப் போலவே, ஆங்கிலத்தையும் தொய்வின்றி பேச இயலும் தங்களின் தமிழ்ப் பற்று வியக்க வைக்கிறது... பாராட்டுகள் அக்கா...

    தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...