என் அன்பே! என் உயிரே

என் அன்பே! இனியவரே! என் வாழ்வே!
உங்களை எப்படிக் குறிப்பிட்டால் பொருந்தும்?

நீங்கள் என் இதயம் என்று சொல்லலாம்
ஆனால் ஒரு நாள் துடிப்பதை நிறுத்தி விடுமே!

நீங்கள் என் உடம்பில் ஓடும் குருதி என்று சொல்லலாம்
ஆனால் குருதி என் நகங்களில் நிறைவதில்லையே!

நீங்கள் என் மூச்சு என்று சொல்லலாம்
ஆனால் சுவாசத்தில் மூச்சை வெளி விடுவேனே!

நீங்கள் என் வாழ்க்கை என்று சொல்லலாம்
ஆனால் அது உங்களைப் போல் எப்பொழுதும் இனிமையாய் இருப்பதில்லையே!

நீங்கள் இறப்பிலும் பிரியாத என் ஆத்மா என்று சொல்கிறேன்
ஏனென்றால் நான் உங்களுக்கும் நீங்கள் எனக்கும் சொந்தம், எக்காலமும்!

8 கருத்துகள்:

 1. Unga english poem 'My love, My soul' oda tamilakkam dhane ithu.. Nice Grace :-)

  பதிலளிநீக்கு
 2. உண்மை அன்பை
  மிக அழகாகச் சொல்லிப்போகும் கவிதை
  மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. வித்தியாசமான வரிகள்... பாராட்டுக்கள்...

  வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_7.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   வருகைக்கும் தளம் பற்றிய செய்திக்கும் நன்றி! மகிழ்ச்சி!

   நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

நான் அமைதி காக்கிறேன் - கவிதை உறவு இதழில்

நன்றி கவிதை இதழ் ஆசிரியர் குழுவிற்கும் என்னைக் கவிதை எழுதக் கேட்ட அன்புத்தோழி புனிதஜோதி அவர்களுக்கும்!