கடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கரைசேர்ந்த ஓடுகள்
பரந்து விரிந்து வான்தொடும் கடல்
பொங்கிப் பாய்ந்து தழுவும் அலைகள்
தம் இருப்புச் சொல்லி நொடியில்
துள்ளி முழுகும் மீன்கள்
வானில் பறந்து கூர்ந்த பார்வையில்
துல்லியமாய் மீன் பிடிக்கும் பறவைகள்
அழகாய் அமைதிதரும் நீர் பரப்பு
ஆழமாய் வைத்திருக்கும் செழிப்பு
பல விதமாய் பல வண்ணமாய்
நீர்த் தாவரங்கள் நீர்வாழ் பிராணிகள்
ஆழியின் அளவில்லா செழிப்பை
வாழ்ந்த உயிர்களின் அடையாளத்தை
அலைகளோடு அழகாய்ச் சொல்லும்
கரைசேர்ந்த கண்கவர் ஓடுகள்
வைகறைக் கடல்
யான் துயில் நீங்கிய ஓர் குளிர்ந்த வைகறைப் பொழுதில்
நடை பயில ஆர்வம் கொண்டு புணரியை நோக்கிச் சென்றேன்
நீலக் கடலின் திரை ஓசை செவியில் விழும் பொழுதில்
என் உண் கண் வியப்பில் விரிந்து மின்னியது
யான் கண்ட காட்சியின் அழகை முழுதாக உள்வாங்கும் ஆசையில்
குளிர்ந்த மணலில் பாதங்கள் பதிய மெய் மறந்து நின்றேன்
மலையிலிருந்து கொண்டு வந்த செங்காந்தள் மலர்களைத் தூவிக் கொண்டு
தொலைவில் எழுந்த கதிரவன் சிவந்த மாணிக்கமாய் ஒளி வீசியது
பரந்து விரிந்து பொன்னைப் போல் தகதகத்த ஆழியில்
இளம் சிவப்பாய் நாணத்தின் வரிகள் படர்ந்ததை ரசித்தேன்
கடல் காக்கைகள் மகிழ்ச்சியில் இசைத்து பாடிய பாடல்
காற்றில் கலந்து செவியில் புக இனிதே பொழுது புணர்ந்தது

புணரி, ஆழி - கடல்
திரை - அலை
உண் கண் - மையுண்ட கண்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்
வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை. வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.
-
பொன்விழா கொண்டாடும் நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழு 'வெள்ளிதோறும் இலக்கிய உலா' என்ற நிகழ்வினை சிறப்பாக நடத்தி வருகின்...
-
அவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...