புன்னகை

சத்தமின்றி இனிதாய்ப் பல கதை சொல்லும்
போரின்றி எளிதாய்ப் பல சிக்கல் தீர்த்து விடும்
மனங்கள் எல்லாம் மகிழ்ச்சியில் ஒளிரச் செய்யும்
மொழி வரம்பு ஏதுமின்றி அனைவர்க்கும் புரிந்து விடும்

இது ஆற்றும் செயலோ மிகவும் வலியது
ஆனால் இதை உண்டாக்கும் தசைகளோ மெலியது
ஏழை பணக்காரர் ஆண் பெண் இப்படி எந்தப் பாகுபாடுமில்லை
இதை உடைமையாக்கக் கடிது உழைக்கத் தேவையில்லை

குழந்தை முதல் முதியவர் வரை அணியக் கூடிய நகை
விலை மதிப்பில்லாத அழகு சேர்க்கும் நகை 
ஈடு இணை இல்லாப் பொன்னகை
அது தான் அழகு நகை - புன்னகை!

2 கருத்துகள்:

  1. அழகாய்ச் சொன்னீர்கள் கிரேஸ்... புன்னகையின் பலமே தனி..
    //போரின்றி எளிதாய்ப் பல சிக்கல் தீர்த்து விடும் மனங்கள் எல்லாம் மகிழ்ச்சியில் ஒளிரச் செய்யும் மொழி வரம்பு ஏதுமின்றி அனைவர்க்கும் புரிந்து விடும்// - கருத்தாழமிக்க வரிகள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

'பேதையல்ல பெண் மேதை' - மகளிர் நாள் சிறப்புக் கவியரங்கம்

  சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் - சுவீடன் இலண்டன் தமிழ் வானொலி மற்றும் உலகப் பெண் கவிஞர் பேரவை இணைந்து வழங்கும் "பேதையல்ல பெண் மேதை" ...